தமிழ்ப்பிரபா

தமிழ்ப்பிரபா (Tamil Prabha) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டும் இவர் சென்னை நகரத்தின் வாழ்க்கையை பின்னணியாக்கி தமிழில் நாவல்கள் எழுதியுள்ளார். திரைக்கதை எழுத்தாளராகவும் அறியப்படுகிறார். பேட்டை,[1] கோசலை [2]ஆகிய நாவல்கள் மூலமும் சார்ப்பட்டா பரம்பரை, தங்கலான் ஆகிய திரைப்படங்கள் மூலமாகவும் இவர் பிரபலமானார்.[3]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

தமிழ்ப்பிரபா சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் புஷ்பராஜ் -எலிசபெத் இணையருக்கு மகனாகப் பிறந்தார். சென்னை சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள ஆர்.பி.சி.சி நடுநிலைப்பள்ளியில் ஆரம்பக் கல்வியையும் சிந்தாதிரிப்பேட்டையிலும், சிந்தாதிரிப்பேட்டை மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைக்கல்வியையும் பயின்றார். பச்சையப்பன் கல்லூரியில் வணிகவியயில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2016 ஆம் ஆண்டில் திவ்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணக்கியல்துறையில் சிலகாலமும் ஆனந்த விகடன் இதழில் சிலகாலமும் ரெயின்போ வானொலியில் சில காலமும் பணியாற்றியபின் தற்பொழுது முழுநேரமும் திரைப்படத்துறையில் பணிபுரிகிறார்.

இலக்கியம்

தொகு

சமுகப்பிரச்சினைகள் குறித்த கட்டுரைகள் எழுதிய இவர் அரசியல் மற்றும் மனித நலன் சார்ந்த கதைகளையும் எழுதினார். இவரது படைப்புகளில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றிய அறிக்கை,[4] ஆர்வமுள்ள மாணவி டாக்டர் அனிதா [5]போன்ற சமகால நிகழ்வுகள் இடம்பெற்றன. தெய்வத்தால் ஆகாதெனினும் என்ற தொடர் சமுக அக்கறை கொண்ட மனிதர்களைப் பற்றி பேசியது.[6] புளூ ஸ்டார் என்ற விளையாட்டு நாடகம் ஒன்றையும் இவர் எழுதியுள்ளார்.[7]

நாவல்கள்

தொகு
  1. பேட்டை[8]
  2. கோசலை[9]

திரைக்கதைகள்

தொகு
  • சார்பட்டா பரம்பரை[10][11]

விருதுகள்

தொகு
  1. சுஜாதா விருது (சிறந்த நாவல் 2018)
  2. தமுஎகச (சிறந்த விளிம்புநிலை மனிதர்கள் படைப்பிற்கான விருது 2018)

மேற்கோள்கள்

தொகு
  1. "பேட்டை", Goodreads (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-08-05
  2. "பேட்டை’ முதல் `மிராசு’ வரை... 2018-ல் கவனம் ஈர்த்த நாவல்கள்..!". https://www.vikatan.com/literature/arts/145623-a-review-of-best-tamil-novels-released-in-2018. பார்த்த நாள்: 5 August 2024. 
  3. "திரை விமர்சனம் - சார்பட்டா பரம்பரை". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/697339-sarpatta-parambarai-review.html. பார்த்த நாள்: 5 August 2024. 
  4. "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு' சம்பவத்தில் விகடன் நிருபர்களின் நேரடி கள அனுபவம்...". ஆனந்த விகடன். https://www.vikatan.com/government-and-politics/protest/158030-thoothukudi-sterlite-gunshoot-incident-experience-shared-by-vikatan-reporters. பார்த்த நாள்: 5 August 2024. 
  5. "எங்களைப் படிக்க விடுங்கடா!” - டாக்டர் அனிதா MBBS". ஆனந்த விகடன். https://cinema.vikatan.com/kollywood/134276-dreams-of-anitha-and-her-family-were-buried. பார்த்த நாள்: 5 August 2024. 
  6. "தெய்வத்தான் ஆகாதெனினும் - ஒதுங்க நிழல் வேணும், அதுக்கு மரம் வேணும்!". ஆனந்த விகடன். https://www.vikatan.com/literature/arts/139915-salesman-plants-more-than-thousand-plants. பார்த்த நாள்: 5 August 2024. 
  7. Chandar, Bhuvanesh (2024-01-25), "'Blue Star' movie review: Ashok Selvan, Shanthnu knock it out of the park in this powerful sports drama", The Hindu (in Indian English), பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X, பார்க்கப்பட்ட நாள் 2024-08-05
  8. Muralidharan, Kavitha (2020-09-24), "The untold stories of Chintadripettai", The Hindu (in Indian English), பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X, பார்க்கப்பட்ட நாள் 2024-08-05
  9. "When a book rewrites a ramshackle library's saga", The Times of India, 2023-06-10, பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-8257, பார்க்கப்பட்ட நாள் 2024-08-05
  10. Suryawanshi, Sudhir (2020-08-24), "Pa Ranjith talks about the Madras they don't tell you about on 381st Madras Day", The New Indian Express (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-08-05
  11. Singaravel, Bharathy (2021-07-29), "A boxing film but so much more: Tamil Prabha on co-writing 'Sarpatta Parambarai'", The News Minute (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-08-05
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்ப்பிரபா&oldid=4059684" இலிருந்து மீள்விக்கப்பட்டது