தமிழ் ஆங்கிலம் இலக்கண ஒப்பீட்டு அட்டவணை
தமிழ் | ஆங்கிலம் |
திராவிட மொழிக் குடும்பம் | இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பம் |
கி.மு. 500 ?? - தமிழ் - சங்க இலக்கியம், தொல்காப்பியம் | கி.பி. 400 களில் பழைய ஆங்கிலம், கி.பி. 1500 தற்கால ஆங்கிலம் |
இலக்கண மூலம்: தொல்காப்பியம், நன்னூல் | இலக்கண மூலம்: ??? |
தமிழ் ஒர் ஒலிப்பொழுக்கம் நிறைந்த மொழி. "தமிழில் சுமார் 40 ஒலியன்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஒலியனுக்கும் ஓர் எழுத்து என்று தமிழில் உண்டு. என்றாலும், வல்லின எழுத்துகளுக்கு மட்டும் இடம் வரையறை செய்யப்பட்டு ஓர் ஒழுங்கு முறையுடன் ஒன்றுக்கு மேற்பட்ட ஒலியன்களைக் குறிக்கும் முறை உண்டு. ஒரு சொல்லில் வரும் எழுத்து "அதன் உருவம்; சொல்லின் முதலில் வருகிறதா, சொல்லின் இடையில் வருகிறதா, சொல்லின் கடையில் வருகிறதா" என்பதைப் பொறுத்து ஒலிக்கப் படுகிறது. காட்டாக நெஞ்சம் என்று சொல்லும் போது சகரம் ஜ எனும் ஒலிப்பு பெறும்." http://valavu.blogspot.com/2006/12/4.html | ஆங்கிலமும் ஒரு ஒலிப்பியல் மொழி, ஆனால் தமிழ் போன்ற இறுகிய வரையறையுடைய ஒலிப்பியல் தன்மை கொண்ட மொழி அல்ல. |
தமிழில் பலுக்குவது (உச்சரிப்பது) போலவே எழுத்துக்கூட்டல் அமையும். | பல ஆங்கில சொற்களுக்கு பலுக்கலுக்கும் (உச்சரிப்புக்கும்) எழுத்துக்கூட்டலுக்கும் (spelling) பற்பல வேறுபாடுகள் உண்டு. ஆங்கில எழுத்துக்கூட்டலுக்கு கேள்வி வழி அறிவு முக்கியம். |
Tamil is a higly inflected language. (பார்க்க: en:Inflection) | Modern English is a weakly inflected language. |
Tamil is an en:Agglutinative language. சொற்கள் அடி அல்லது வேர்ச்சொற்களோடு மற்ற உறுப்புகள் சேர்ந்து ஒட்டி அமையும். | English is a en:Fusional language. |
"Tamil is morphologically rich language." ??? "As Tamil is an agglutinative language, each root word can combine with multiple morphemes to generate word forms." [1] | English borrows and adopts vocabulary from others languages more easily. |
வாக்கிய அமைப்பு: எழுவாய்-செயற்படுபொருள்-வினை என்பதுவே பொது வழக்கம், எனினும் எழுவாய்-வினை-செயற்படுபொருள் என்றும் வாக்கியம் அமைவதுண்டு. | வாக்கிய அமைப்பு: எழுவாய்-வினை-செயற்படுபொருள் |
தமிழில் en:Copula அல்லது linking verbs இல்லை. | ஆங்கிலத்தில் en:Copula முக்கியம். "to be": is, was, are, were, am, be, been |
தமிழில் ஆங்கிலத்துக்கு இணையான en:Article (grammar) இல்லை, ஆனால் ஓர், ஒரு, அந்த, இந்த, உந்த போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. | en:Article (grammar) (the, a, an) ஆங்கில வாக்கிய அமைப்பில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. |
postposition: 'புத்தகம் மேசை மேல் இருக்கின்றது.' | preposition: 'The book is on the table.' |
தமிழில் and பொதுவாக பயன்படுத்துவது இல்லை. | ஆங்கிலத்தில் and போன்ற இணைப்பு சொற்கள் பரவலாக பயன்படுத்தப்படுவதுண்டு. |
வாக்கியத்தில் சொற்களின் ஒழுங்கு அவ்வளவு முக்கியம் இல்லை. (Tamil has "relatively free word order."[2]) | வாக்கியத்தில் சொற்களின் ஒழுங்கு முக்கியம். (The word order is important in English.) |
தமிழில் en:Grammatical gender இல்லை. "There is no arbitrary assignment of gender to inanimate things as in Latin, French or the Sanskrit-based languages. Just imagine having to memorize whether a stone or a book is masculine or feminine!"[3] | தற்கால ஆங்கிலத்தில் en:Grammatical gender இல்லை. |
மேலும் காண்க
தொகுஆதாரங்கள்
தொகுஇவ்வட்டவணை ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள en:Tamil grammar கட்டுரையைத் தழுவி தொகுக்கப்பட்டது.
வெளி இணைப்புகள்
தொகு- http://tamilnation.org/literature/learning.htm Tamil: Its Assets & Current Needs