தமிழ் இலக்கணத் தொடர்கள் (மொழி)

(தமிழ் இலக்கணத் தொடர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ் இலக்கணத் தொடர்கள் என்னும் இக் கட்டுரையில் பண்டைய தமிழ் இலக்கண நூல்களாகிய தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இரண்டு நூல்களின் எழுத்து, சொல் என்னும் பகுதியில் உள்ள மொழித்தொடர்கள் மட்டும் அகர வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன. தொடர் விளக்க நூற்பாவும், ஆங்கில மொழிபெயர்ப்பும் [1] அடிக்குறிப்பாகத் தரப்படுகின்றன. எடுத்துக்காட்டுகள் அந்தந்த நூற்பாக்களுக்கு உரையாசிரியர்கள் தந்துள்ளனவும், எளிமைப் படுத்தப்பட்டு உள்ளனவுமாகத் தரப்படுள்ளன.

  • இவை இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு தனிச்சொற்கள், இலக்கணக் குறியீடுகள் என்னும் பகுப்பிலும் தொடர்கள், இலக்கணத் தொடர்கள் என்னும் பகுப்பிலும் தரப்படுகின்றன.
  • இதில் தமிழில் நம் முன்னோர்கள் தந்துள்ள இலக்கணக் குறியீடுகள், தெடர்கள் அனைத்தையும் ஒருசேர ஒப்பிட்டு, வேறுபடுத்திக் காணலாம்.
  • இணைத்துக் காண்க

இலக்கணக் குறியீடுகள்

தொகு

அ வரிசை

தொகு
  1. அகம் [2][3] தமிழில் வாழ்க்கைப் பொருளை அகம், புறம் என இரண்டு வகையாகப் பிரிப்பர். அகம் என்பது அகங்கை என்னும் உள்ளங்கை போல மூடியும் விரித்தும், அகம் என்னும் வீட்டிலுள்ளோர் கட்டுப்பாட்டுக்குள் அடங்கும் ஒழுக்கம். புறம் என்பது வெளிப்புறத்தில் உள்ளோர் தாக்கத்துடன் நிகழும் வாழ்க்கை முறைமை.
  2. உவமை [4][5] தெரிந்த பொருளைக் காட்டித் தெரியாத ஒன்றை உணரச் செய்வது உவமை. இதனைத் தொல்காப்பியம் 'உவமம்' என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது. உருவம், நிறம் சுவை முதலான பண்புகள், செயல், விளைவு ஆகிய நான்கு கூறுகள் பொருத்திக் கட்டப்படும் என்றும் [6] சிறப்பு, நலன், காதல், வலிமை ஆகிய உணர்வுகளில் தோன்றி அப் பாங்குகளைப் புலப்படுத்தும் [7] என்றும் தொல்காப்பியம் உவமைத் தன்மையைத் தெளிவுபடுத்துகிறது.
  3. எச்சம் - தொல்காப்பியத்தில் எச்சவியல் என வரும்போது எஞ்சி நிற்கும் கருத்துக்களை [8] உணர்த்தும். பெயரெச்சம், வினையெச்சம், முற்றெச்சம் என வரும்போது குறைசொற்களை [9][10] உணர்த்தும்.
  4. எழுத்து என்பது [11][12][13] எழுதப்படும் எழுத்து உருவம்.[14] எழும் அணுத்திரளின் ஒலி.[15]

க வரிசை

தொகு
  1. களவு [16][17] திருமணத்துக்கு முன் நிகழும் காதலன் காதலியரின் ஆண்-பெண் உறவு
  2. கற்பு [18][19] திருமணத்துக்குப் பின்னர் நிகழும் கணவன் மனைவி உறவு
  3. கிளவி [20][21] உள்ளத்து உணர்வுகளைப் புலப்படுத்தும் மொழி.

ச வரிசை

தொகு
  1. சந்தி [22] வினைச்சொல்லில் பகுதியையும், இடைநிலையையும் சந்திக்க வைக்கும் சொல்லுறுப்பு
  2. சாரியை [23] சாரியை என்னும் சொல்லுறுப்பு வினைச்சொல்லில் இடைநிலையையும் விகுதியையும் சார்ந்து வரும். நடந்தனள் - நட+ந்(த்)+த்+அன்+அள் - அன் என்பது சாரியை. ஓடியது - ஓடு+இ++து - அ என்பது சாரியை.
  3. சொல் [24][25] சொல் என்பது ஒரு பொருளுக்கோ, செயலுக்கோ முன்னோர் சொன்னபடி சொல்லும் ஒருவகைக் குறியீடு

ப வரிசை

தொகு
  1. பகுதி [26] சொல்லில் மேலும் பகுக்க முடியாததாகப் பொருள் உணர்த்தி நிற்கும் அடிச்சொல்.[27]
  2. பதம் [28][29] சோற்றில் ஒரு பருக்கையைப் பதம் பார்ப்பது போலச் சொல்லை ஒவ்வொன்றாகப் பதம் பார்ப்பது. பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம், எதுத்துப்பேறு என்றெல்லாம் பகுபத உறுப்புக்களாக இது பதம் பார்க்கப்படும்.
  3. புறம் [30][31] அகம் என்பதன் மறுதலை
  4. பொருள் [32][33] தன்னை அறியாது செய்வது போல் அல்லாமல் நல்லது கெட்டது உணர்ந்து, பொருட்படுத்தி (பொருளாக எண்ணி) வாழ்க்கையில் உண்டாக்கிக்கொள்ளும் இடம் முதலான உடைமைகளும், வாழ்க்கை நெறிமுறைகளும் பொருள் எனப்படும்.[34]

ம வரிசை

தொகு
  1. மரபு [35][36] முன்னோர் வழியில் நமக்குள்ளே மரத்துப்போயிருக்கும் சொற்களும், மொழிப்பாங்கும், உணர்வுகளும் மரபு எனப்படும்.
  2. மாத்திரை [37] தமிழில் எழுத்து ஒலிக்கும் கால அளவு. (ஒரு பொருளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே) கண்ணின் இமையானது தானே இமைத்துக்கொள்ளும் நேரம்.[38][39]
  3. மெய்ப்பாடு [40][41] உள்ளத்து உணர்ச்சிகள் மெய்யில் படும் (புலப்படும்) பாங்கு.

ய வரிசை

தொகு
  1. யாப்பு [42][43] யாப்பு என்னும் சொல் கட்டிவைக்கும் செயல்பாட்டை உணர்த்தும் தொழிற்பெயர்.[44] தமிழ் மொழிநடைப் பாங்கில் செய்யுள் வடிவில் சொற்களைக் கட்டிவைக்கும் பாங்கு 'யாப்பு' எனப்படும்.

வ வரிசை

தொகு
  1. வழக்கு [45] (தகுதி வழக்கு, செய்யுள் வழக்கு)
  2. விகாரம்
  3. விகுதி [46]

இலக்கணத் தொடர்கள்

தொகு

அ வரிசை

தொகு
  1. அஃறிணை
  2. அடுக்குத்தொடர் [47]
  3. அடைமொழி
  4. அளபெடை [48] அளபு எடுத்தல், அதாவது ஒலி கூட்டி எழுதிக் காட்டல், எடுத்துக்காட்டுகள் - உயிரளபெடை, ஒற்றளபெடை விளக்கப் பகுதியில் காண்க.
  5. அன்மொழித்தொகை
  6. அன்மொழித்தொடர்
  7. ஆகுபெயர்
  8. இடைச்சொல்
  9. இடைத்தொடர்க் குற்றியலுகரம்
  10. இடைநிலை
  11. இடையினம்
  12. இரண்டிறந்திசைக்கும் பொதுமொழி
  13. இரட்டைக்கிளவி
  14. இருபெயரொட்டு இதனை இருபெயரொட்டுப் பண்புத்தொகை எனவும் வழங்குவர்.
  15. இறைச்சிப் பொருள் [49]
  16. இன-எழுத்து, காண்க: வல்லினம், மெல்லினம், இடையினம்
  17. இனமொழி, ஒருமொழி ஒழிதன் இனம் கொளல்
  18. ஈரெழுத்தொருமொழி
  19. ஈரொற்றுத் தொடர்மொழி
  20. உம்மைத்தொகை
  21. உரிச்சொல்
  22. உயிரளபெடை
  23. உயிரெழுத்து
  24. உவமைத்தொகை
  25. எண்ணுப்பெயர்
  26. ஒற்றளபெடை
  27. ஒன்றொழி பொதுச்சொல்
  28. ஓரெழுத்தொருமொழி

க வரிசை

தொகு
  1. குறிப்புரை [50]
  2. குற்றியலிகரம்
  3. குற்றியலுகரம்

ச வரிசை

தொகு
  1. சார்பெழுத்து
  2. சுட்டெழுத்து
  3. செஞ்சொல்
  4. செந்தமிழ்
  5. செவ்வெண் [51] என்பது எண்ணப்படும் பெயர்களைக் கொண்ட தொடர்.[52] இது எண்ணப்படும் இடைச்சொற்களில் ஒன்றை ஒவ்வொரு பெயரோடும் பெற்று வராமல் தனித்தனிப் பெயராக எண்ணப்பட்டு இறுதியில் தனி-இடைச்சொற்களில் ஒன்றை (எனா, என்று, என்றா போன்றவை) எண் தொகைச் சொல்லாகப் பெற்று வரும். எடுத்துக்காட்டு - சாத்தன், கொற்றன், பூதன் என மூவரும் வந்தனர்.[53]

த வரிசை

தொகு
  1. தகுதி [54]
  2. தனிமொழி
  3. தடுமாறு தொழிற்பெயர்
  4. திசைச்சொல்
  5. திணை-விரவுப்-பெயர்
  6. திரிசொல்
  7. தொகைநிலைத்தொடர்,[55] 1 வேற்றுமைத்தொகை [56] 2 உவமைத்தொகை [57] 3 வினைத்தொகை [58] 4 பண்புத்தொகை [59] 5 உம்மைத்தொகை [60] 6 அன்மொழித்தொகை [61]
  8. தொடர்மொழி
  9. தொழிற்பெயர்

ந வரிசை

தொகு
  1. நிலைமொழி
  2. நெடில்-எழுத்து
  3. நெடில்-தொடர்
  4. நெடுமொழி
  5. நிறைப்பெயர்

ப வரிசை

தொகு
  1. பகாப்பதம் [62][63]
  2. பகுபதம் [64][65]
  3. பண்புத்தொகை
  4. பண்புப்பெயர்
  5. பால்பகா அஃறிணைப்பெயர்
  6. பெயரெச்சம்

ம வரிசை

தொகு
  1. மரூஉ-மொழி
  2. முறைப்பெயர்
  3. மீமிசை
  4. முதற்பெயர்
  5. முற்றெச்சம்

வ வரிசை

தொகு
  1. வடசொல்
  2. வியங்கோள் வினைமுற்று [66]
  3. வினா எழுத்து
  4. வினைத்தொகை
  5. வினைமுற்று
  6. வினையாலணையும் பெயர்
  7. வினையெச்சம்
  8. வேற்றுமைத்தொகை

அடிக்குறிப்பு

தொகு
  1. மொழிபெயர்க்க உதவக்கூடியவை
  2. தொல்காப்பியம் அகத்திணையியல்
  3. Love affairs (Agam composition)
  4. தொல்காப்பியம் உவமவியல்
  5. comparison
  6. தொல்காப்பியம் 3-273
  7. தொல்காப்பியம் 3-375
  8. residual
  9. 'குறைசொற் கிளவி' தொல்காப்பியம் 2-453
  10. infinite word
  11. தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
  12. letter in writing form
  13. phoneme in articulating form
  14. நன்னூல் 88
  15. நன்னூல் 74
  16. தொல்காப்பியம் களவியல்
  17. Clandestine love
  18. தொல்காப்பியம் கற்பியல்
  19. Wedded love
  20. தொல்காப்பியம் கிளவியாக்கம்
  21. syntax
  22. assimilating phoneme
  23. empty morpheme
  24. தொல்காப்பியம் சொல்லதிகாரம்
  25. word
  26. root in a word
  27. நன்னூல் 134 முதல் 138
  28. நன்னூல் பதவியல்
  29. etymology
  30. தொல்காப்பியம் புறத்திணையியல்
  31. Public life
  32. தொல்காப்பியம் பொருளதிகாரம்
  33. sense of life
  34. தொல்காப்பியம், திருக்குறள் போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ள செய்திகளால் இக் கருத்தினை விளங்கிக்கொள்ளலாம்
  35. தொல்காப்பியம் மரபியல்
  36. Traditions
  37. time unit of a phoneme in Tamil
  38. 'கண்ணிமை நொடி' என அவ்வே மாத்திரை - தொல்காப்பியம் 7
  39. இயல்பு எழும் மாந்தர் இமை நொடி மாத்திரை -நன்னூல் 100
  40. தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல்
  41. Manifest emotions
  42. தொல்காப்பியம் யாப்பியல்
  43. Prosody
  44. படைவீரர்கள் வீரக் கழல் புனைந்துகொள்வதைத் திருக்குறள் 'கழல் யாப்பு' எனக் குறிப்பிடுகிறது - திருக்குறள் 777
  45. usage
  46. suffix
  47. reduplication
  48. arsis, the part of a metrical foot that bears the ictus or stress.
  49. analogue
  50. pathetic fallacy
  51. open type of enumeration
  52. தொல்காப்பியம் இடையியல் 42
  53. இளம்பூரணர் உரை எடுத்துக்காட்டு
  54. propriety
  55. Compound words,
  56. case-compound
  57. comparison-compound
  58. tense-compound
  59. adjective-compound
  60. conjunctive-compound
  61. elliptical-head-compound
  62. நன்னூல் 128 முதல் 133
  63. root of a word
  64. நன்னூல் 128 முதல் 131
  65. word with morphemes
  66. optative mood (in English subjunctives from the verbs)

வெளி இணைப்பு

தொகு