தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1985
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1985 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1985 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.
வ.எண் | தலைப்பு | நூலின் பெயர் | நூலாசிரியர் | நூல் வெளியீடு |
---|---|---|---|---|
1 | கவிதை | 1. சிவப்புச் சிந்தனைகள் (முதல் பரிசு), 2. புரட்சி நிலா (இரண்டாம் பரிசு) |
1. க. பொ. இளம்வழுதி 2. கல்லாடன் |
1 & 2. மீனா புத்தகப் பண்ணை, விழுப்புரம். |
2 | நாவல் | 1. சுந்தரியின் முகங்கள் (முதல் பரிசு) 2. ஒற்றன் (இரண்டாம் பரிசு) |
1. செ. யோகநாதன் 2. அசோகமித்திரன் |
1 & 2. நர்மதா பதிப்பகம், சென்னை. |
3 | மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் | 1. பாவேந்தரும் பாட்டாளியும் (முதல் பரிசு) 2. வாணிதாசன் பாடல்கள் திறனாய்வு (இரண்டாம் பரிசு) 3. கால். அடி, தாள், சொல் - வரலாறு (இரண்டாம் பரிசு) |
1. இலமா. தமிழ்நாவன் 2. சு. வேல்முருகன் 3. டாக்டர் கு. இராஜேந்திரன். |
1. அம்பாள் பதிப்பகம், சென்னை. 2.முத்து பதிப்பகம், விழுப்புரம். 3. பாடான் பதிப்பகம், சென்னை. |
4 | மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் | 1. வழிகாட்டி (முதல் பரிசு) 2. இந்தியக் குடும்பச் சட்டம் (இரண்டாம் பரிசு) |
1. எஸ். ஆர். வீரராகவன் 2. ஆர். எஸ். தேவர் |
1. புரு சேஷாத்திரி பதிப்பகம், திருவண்ணாமலை 2. மங்கை நூலகம், சென்னை. |
5 | பொறியியல், தொழில்நுட்பவியல் | 1. கணிப்பொறி ஒழுங்கும் பேசிக் மொழியும் (முதல் பரிசு) | 1. கா. செல்லமுத்து | 1. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். |
6 | மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் | 1. மருந்தியல் (முதல் பரிசு) 2. உணர்ச்சிகள் உருவாக்கும் உடல் நோய்கள் (இரண்டாம் பரிசு) |
1. மு. துளசிமணி, ச. ஆதித்தன் 2. டாக்டர் தி. ஜெயராமகிருட்டிணன், டாக்டர் பு. ஜெயச்சந்திரன் |
1. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 2. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. |
7 | தத்துவம், சமயம், அளவியல், அறவியல் | 1. தமிழர் அறிவுக் கோட்பாடு (முதல் பரிசு) 2. திருமுறையும் திருக்கோயில்களும் (இரண்டாம் பரிசு) |
1. க. நாராயணன் 2. புலவர் செந்துறை முத்து |
1. தமிழ்ப் புத்தகாலயம், சென்னை. 2. மணிவாசகர் நூலகம், சென்னை. |
8 | சிறுகதை | 1. இன்று நிஜம் (முதல் பரிசு) 2. கடற்பாலம் (இரண்டாம் பரிசு) |
1. சுப்பிரமணிய ராஜூ 2. பாலகுமாரன் |
1 & 2. நர்மதா பதிப்பகம், சென்னை. |
9 | நாடகம் | 1. பாண்டியன் மகுடம் (முதல் பரிசு) 2. துலாக்கோல் (இரண்டாம் பரிசு) |
1. தமிழன்பன் 2. புதுவை நா. கிருட்டிணசாமி |
1. கோமதி பதிப்பகம், சென்னை. 2. மீனா புத்தகப் பண்ணை, விழுப்புரம். |
10 | கவின் கலைகள் | ----- | ----- | ----- |
11 | கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் | 1. கருப்புக் குயிலின் நெருப்புக் குரல்கள் (முதல் பரிசு) 2. செந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர் (இரண்டாம் பரிசு) |
1. மன்னர் மன்னன் 2. புலவர் செ. இராசு |
1. முத்து பதிப்பகம், விழுப்புரம். 2. மாருதி பதிப்பகம், சென்னை. |
12 | வரலாறு, தொல்பொருளியல் | 1. ஹிட்லரின் கடற்போர் சாகசங்கள் (முதல் பரிசு) 2. சோழர் ஆட்சி முறை (இரண்டாம் பரிசு) |
1. தோராளி சங்கர் 2. ந. க. மங்கள முருகேசன் |
1. தமிழ்க்கடல் பதிப்பகம், சென்னை 2. பாரி நிலையம், சென்னை. |
13 | வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் | ----- | ----- | ----- |
14 | சிறப்பு வெளியீடுகள் | 1. அறிவியல் தமிழ் (முதல் பரிசு) 2. தமிழ்நாட்டுச் சடுகுடுப் பாடல்களும் சடுகுடு ஆட்டமும் (இரண்டாம் பரிசு) |
1. டாக்டர் வா. செ. குழந்தைசாமி 2. டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா |
1. பாரதி பதிப்பகம், சென்னை 2. ராஜ்மோகன் பதிப்பகம், சென்னை. |
15 | கல்வி, உளவியல் | குழந்தை வளர்க்கும் கலை | பி. எஸ். ஆர். ராவ் | வேங்கடாத்திரி பதிப்பகம், சென்னை. |
16 | குழந்தை இலக்கியம் | 1.அறிவியற் சிறுகதைகள் (முதல் பரிசு) 2. மத்தாப்பூ (இரண்டாம் பரிசு) |
1. மலையமான் 2. சுப்ரபாலன் |
1. ஒளிப் பதிப்பகம், சென்னை. 2. சித்தார்த்தன் பதிப்பகம், சென்னை. |