மடங்காதநிலை முதுகெலும்பு வீக்கம்

(தம்ப முள்ளந்தண்டழல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தம்ப முள்ளந்தண்டழல் அல்லது மடங்காதநிலை முதுகெலும்பு வீக்கம் (Ankylosing spondylitis) (AS , என்பது கிரேக்க சொல்லான ஆன்கைலோஸ்- வளைந்த; இஸ்பாண்டிலோஸ் - முதுகெலும்பு) என்ற சொற்களில் இருந்து உருவானது. முன்பு பெச்டெரீவ்ஸ் குறைபாடு (Bekhterev's disease) , பெச்டெரீவ்ஸ் அறிகுறி (Bekhterev syndrome) , மற்றும் மேரி ஸ்ட்ரம்பல் குறைபாடு (Marie-Strümpell disease) என்று அறியப்பட்டது. முதுகெலும்பு வாதத்தின் (spondyloarthritis) ஒருவடிவமான இந்நோய், நாள்பட்ட, வீக்கம் நிறைந்த வாதநோயாகும் தன்னெதிர்ப்புத் தாக்குதல் இந்நோயில் முக்கியப்பங்கு வகிப்பதாகக் கருதப்படுகின்றது[1]. இது முக்கியமாக, முதுகெலும்பில் உள்ள மூட்டுகள் மற்றும் இடுப்புக்கூட்டில் உள்ள திரிக-பின் இடுப்பு மூட்டைப் (sacroiliac joint) பாதிக்கிறது. மேலும், இது முதுகெலும்பு மூட்டுகள் ஒன்றாக சேர்ந்துகொள்ளவும் வழிவகுக்கக்கூடும்.

'தம்ப முள்ளந்தண்டழல்'
Classification and external resources
முள்ளெலும்புப் பிணைந்த வளைந்த முதுகெலும்பு
ஐ.சி.டி.-10 M08.1, M45.
ஐ.சி.டி.-9 720.0
OMIM 106300
DiseasesDB 728
MedlinePlus 000420
ஈமெடிசின் radio/41 
MeSH D013167

இந்நோய் தண்டுவட எலும்பு மூட்டு நோய் (spondyloarthropathy) குழுவில் ஒரு நோயாகும். இதில் வலுவான மரபியல் ரீதியான முன்னிணக்கம் காணப்படும். முழுமையாக முதுகெலும்பு கூடிவிடுவதால், முதுகெலும்பு முற்றிலும் விரைத்த மடங்காத தன்மையைப் பெற்று விடும். இந்நிலைக்கு மூங்கில் முதுகெலும்பு என்று பெயர்[2].

குறிகள் மற்றும் அறிகுறிகள்

தொகு

இந்நோயால் தாக்கமடைபவர்கள் பெரும்பாலும் இளவயது (18–30 வயதுக்கு இடைப்பட்டவர்கள்) ஆண்களே.[3] இந்நோய்க்கான அறிகுறிகள் முதலில் தோன்றியவுடன், முதுகெலும்பின் அடிப்பகுதியில் கடுமையான வலியும் விறைத்த நிலையும் தோன்றும். சில நேரங்களில் முதுகெலும்பு முழுமையும் அவ்வாறு இருக்கும். பெரும்பாலும் வலியானது, ஒரு புட்டத்திலும், பின் தொடையில் திரிக-பின் இடுப்பு மூட்டிலும் காணப்படும்.

பெண்களை விட ஆண்களே அதிக அளவில் 3:1 என்ற விகிதத்தில் பாதிப்படைகின்றனர்.[3] அதேபோல, பெண்களை விட ஆண்களிடம் இந்நோய் அதிக வலிநிறைந்ததாகவும், நீண்டகாலத்துக்கும் காணப்படுகிறது[4]. 40% நோயாளிகளிடையே, தம்ப முள்ளந்தண்டழல் நோயானது, கண் அழற்சியுடன் [விழித்திரையழற்சி (Iritis) மற்றும் கருவிழிப்படல அழற்சி (uveitis)] தொடர்புடையதாக உள்ளது. இதனால் கண் சிவந்துபோதல், கண் வலி, கண்பார்வை இழப்பு, விழிப் பின்னறை நீர் படிவுகள் (floaters) மற்றும் ஒளி ஞொள் (photophobia) ஆகியவை ஏற்படுகின்றன. மற்றொரு பொதுவான அறிகுறியானது, பொதுவான சோர்வு சிலநேரங்களில் மனக்குழப்பம் போன்றவையும் ஆகும். அரிதாக, பெருந்தமனி அழற்சி (aortitis), நுரையீரல்முனை இழைமப்பெருக்கம் (apical lung fibrosis) மற்றும் பல நரம்பு இழைகளின் வேர்ப்பகுதிகளில் தளர்வு (ectasia) ஆகியவையும் தோன்றக்கூடும். எல்லா ஊனீர்-எதிர்மை தண்டுவட எலும்பு மூட்டு நோயைப் போலவே, நகங்கள் வீக்கமுற்று காணப்படுவதும் தோன்றக்கூடும். [சான்று தேவை]

இந்த நிலை 18 வயதுக்கு முன்பாகவே ஏற்பட்டால், பெரிய எலும்பு மூட்டுகளில் வலியும் வீக்கமும் ஏற்படும், குறிப்பாக முட்டியில் அதிக வீக்கமும், வலியும் காணப்படும். பூப்பெய்துவதற்கு முன்பான நிலைகளில், வலியும் வீக்கமும் அக்குள் மற்றும் பாதம் போன்ற இடங்களில் ஏற்படக்கூடும். இந்த இடங்களில் வலியுடைய குதிகால் எலும்பைப் போன்ற நுண்ணிய நீட்சிகளும் (calcaneal spurs) ஏற்படக்கூடும்.

ஓய்வு நிலையில் வலி கடுமையாகவும், உடல் செயல்பாடுகளின்போது அதிகரிக்கக்கூடியதாகவும் இருக்கும். ஆனால் பலருக்கும் வீக்கமும் வலியும், ஓய்வு மற்றும் நடத்தல் போன்ற வேறுபாடுகள் எதுவுமின்றி சராசரியாக ஏற்படக்கூடும்.

தம்ப முள்ளந்தண்டழல் என்பது ஊனீர்-எதிர்மை தண்டுவட எலும்பு மூட்டு நோய் என்ற தொகுப்பு நிலை நோய்களில் ஒன்றாகும். இதில் பகுத்தறியத்தக்க நோய்க்குறி மாறுபாடு, என்திசிஸ் பகுதியின் வீக்கமே (எலும்புடன் இணைக்கும் டென்சைல் இணைப்பு திசுவின் பகுதி) ஆகும்.

நோய்க்கூறு உடலியல்

தொகு
 
மடங்காதநிலை நடைமுறை

தம்ப முள்ளந்தண்டழல் என்பது ஒரு உள்பரவிய வாதநோயாகும். இதன் பொருள் இந்நோய் உடல் முழுவதையும் பாதிக்கக்கூடியது என்பதும், இது ஊனீர்-எதிர்மை தண்டுவட எலும்பு மூட்டு நோய்களில் ஒன்று என்பதும் ஆகும். 90% சதவீதம் நோயாளிகள் மனித வெள்ளையணு எதிர்ப்பி-பி27 (HLA-B27) மரபணு அமைப்பைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். கழலை நசிவுக்காரணி-ஆல்ஃபா (TNF α) மற்றும் IL-1 ஆகியவையும் தம்ப முள்ளந்தண்டழல் நோயில் பிரதிபலிக்கப்படுகிறது. தம்ப முள்ளந்தண்டழலுக்கான தன்னெதிர்ப்பிகள் இதுவரை கண்டறியப்படவில்லை. நியூட்ரோஃபில் எதிர்ப்பு சைட்டோபிளாஸ்மிக் எதிர்ப்பான்கள் ANCA தம்ப முள்ளந்தண்டழலுடன் தொடர்புடையவையாக உள்ளன. ஆனால் அவை நோயின் தீவிரத்துடன் தொடர்பற்றவை.

தம்ப முள்ளந்தண்டழல் மற்றும் மனித வெள்ளையணு எதிர்ப்பி-பி27 உடனான தொடர்பு, CD8 T செல்களுக்கு உள்ள தொடர்பை காட்டுகிறது. இதுவே மனித வெள்ளையணு எதிர்ப்பி-பி உடன் வினையாற்றுகிறது. இந்த வினையில் தன்னெதிர்ப்பி (நோய் எதிரணு உற்பத்தி ஊக்கி) இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை, மேலும், இது ரெய்ட்டரின் சிண்ட்ரோமுடன் தொடர்புடையதாக இருப்பதில்லை (வினைமிகு வாதம்). இதன் மூலமாக நோய்த்தொற்றுகளும் ஏற்படுகின்றன. உருவாகக்கூடிய எதிர்ப்பிகள் செல்களுக்கிடைப்பட்ட நுண்ணுயிரிகளால் தோற்றுவிக்கப்பட்டவை. ஆனாலும், வழக்கத்திற்கு மாறாக CD4 T செல்கள் இதில் ஈடுபட்டிருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஏனெனில், மனித வெள்ளையணு எதிர்ப்பி-பி27 ஆனது, பல வழக்கத்திற்கு மாறான பண்புகளைக் கொண்டுள்ளன. இதில் CD4 உடன் இணைந்து T செல் ஏற்பிகளுடன் ஊடாடுவதற்கான சாத்தியமும் அடங்கியுள்ளது (பொதுவாக CD8 உடன் உள்ள T உதவி வெள்ளையணுக்கள் மட்டுமே MHC முதலாம் தொகுதி எதிர்ப்பியாக இருப்பதால் மனித வெள்ளையணு எதிர்ப்பி-பி27 யுடன் வினைபுரிகின்றன).

மனித வெள்ளையணு எதிர்ப்பி-பி27 மற்றும் க்ளெப்சியெல்லா பாக்டீரியாவின் எதிர்ப்பிகளுடனான குறுக்குப் பிணைப்பின் காரணமாக தம்ப முள்ளந்தண்டழல் தோன்றுகிறது என்ற கருத்து நீண்டகாலமாக இருந்துவருகிறது.[5] இந்தக் கருத்தில் உள்ள சிக்கல் என்னவென்றால், இதில் கூறப்படும் மனித வெள்ளையணு எதிர்ப்பி-பி27 உடனான குறுக்கு வினை எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை (அதாவது கிளெப்சியெல்லாவுக்கான ஆன்டிபாடி மறுவினைகள் அதிகரித்தாலும், மனித வெள்ளையணு எதிர்ப்பி-பி27 க்கான எதிர்ப்பான் மறுவினை எதுவும் கண்டறியப்படவில்லை, மேலும் குறுக்கு வினை எதுவும் இருப்பதாக தெரியவில்லை.) கிளப்சியல்லாவிலிருந்து முதன்மை உட்பொருட்களை (ஸ்டார்ச்சுகள்) நீக்குவதால், எதிர்ப்பி உருவாக்கம் குறைவடையும். மேலும் தசை மற்றும் எலும்புசார் அறிகுறிகள் மேம்படும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனாலும், கான் (2002) என்பவர் கூறுவதுபோல, இதுவரை தம்ப முள்ளந்தண்டழல் மற்றும் கிளப்சியல்லா ஆகியவற்றுக்கான தொடர்பானது, சூழலைப் பொறுத்தாகவே இருக்கிறது, மற்றும் ஸ்டார்ச்சு பொருள் குறைந்த உணவு வழக்கத்தின் விளைவுகள் இதுவரை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.[6] குறைந்த தரசம் உள்ள உணவுக்கட்டுப்பாடு மற்றும் தம்ப முள்ளந்தண்டழல் ஆகியவற்றுக்கான நிதியளிப்பு கடினமானதாக இருக்கலாம். ஆனால் மருந்து அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள புதிய உயிரியல் வளர்ச்சிகள் திறன் மதிப்பீட்டை செயல்படுத்திக் காட்டக்கூடும். மேலும் இது இத்துறைக்கு நிதிசார்ந்த முன்னிலையையும் அளிக்கும் (இதை உணவுக்கட்டுப்பாடு வழங்க முடியாது).

தம்ப முள்ளந்தண்டழலின் முதன்மைக் காரணிகளில் கிளப்சியல்லாவின் பங்கு தொடர்பான எந்தவிதமான அறிகுறியையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தொய்வானென் (1999) கூறுகிறார்.[7]

நோயறிதல்

தொகு
 
தம்ப முள்ளந்தண்டழலைக் காட்டும் பிந்தைய அடிமுதுகெலும்பு, எக்ஸ்-ரே படம்.
 
திரிக-பின் இடுப்பு மூட்டுகளின் காந்த ஒத்திசைவு படங்கள்.சிரை மூலமான நிற வேறுபாட்டு ஊசிக்கு (a) முன்பும் (b) பின்பும் சாக்ரோயிலியாக் மூட்டுகளின், T1-எடையிடப்பட்ட பாதி-கரோனல் காந்த ஒத்திசைவு படங்கள். வலது சாக்ரோயிலியாக் மூட்டில் காணப்படும் மேம்பாடு, (அம்புக்குறி, படத்தின் இடதுபுறம்), இதில் செயல்மிகு சாக்ரோயிலிட்டிஸ் காட்டப்படுகிறது.இந்த நோயாளிக்கு சோரியாட்டிக் ஆர்த்ரிடிஸ் இருக்கிறது, ஆனால் இதே போன்ற மாற்றங்கள் தம்ப முள்ளந்தண்டழலிலும் ஏற்படக்கூடும்.
 
தம்ப முள்ளந்தண்டழலைக் கொண்ட ஒரு நோயாளிக்கு உருவான மூங்கில் முதுகெலும்பின் எக்ஸ்-கதிர் படம்.

தம்ப முள்ளந்தண்டழலைக் கண்டறிவதற்கு, நேரடியான சோதனை எதுவும் இல்லை. ஒரு மருத்துவ பரிசோதனை மற்றும் முதுகெலும்பின் எக்ஸ் கதிர் ஆய்வுகள் மூலம் முதுகெலும்பில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் கண்டறியப்படுகின்றன மற்றும் சாக்ரோயிலிட்டிஸும் முக்கியமான கண்டறிதல் முறையாகும். எக்ஸ்-கதிர் பகுப்பாய்வில் உள்ள பின்னடைவானது, இதன் மூலம் கண்டறியப்படும் தம்ப முள்ளந்தண்டழல் நோயின் அறிகுறிகள் மற்றும் நோய்க்குறியீடுகள் பொதுவாக 8–10 ஆண்டுகள் வரை முந்தையதாக உருவான நோயையே கண்டறிய முடிகிறது, அதாவது, போதுமான சிகிச்சைகள் எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் 10 ஆண்டுகள் வரை தாமதமான நிலையிலேயே நோயை எக்ஸ்-கதிர்களைக் கொண்டு கண்டறிய முடியும். முன்னதாகவே கண்டறிவதற்கான வழிகளாவன, டோமோகிராஃபி மற்றும் சாக்ரோய்லியாக் மூட்டுகளில் காந்த ஒத்திசைவு படமெடுத்தல் ஆகியவை ஆகும், ஆனால் இந்த சோதனைகளின் நம்பகத்தன்மை தெளிவற்றதாக உள்ளன பரிசோதனையின்போது, லம்பார் முதுகெலும்பின் வளையும் தன்மையை அளவிடும், ஸோபர்ஸ் சோதனையானது ஒரு பயனுள்ள மருத்துவ அளவீடாகும்.[8]

கடுமையான வீக்கம் நிலவும் காலங்களில், தம்ப முள்ளந்தண்டழல் நோயாளிகளுக்கு இரத்தத்தில் சி-வினைபுரிப்புரதத்தின் (CRP) அளவு அதிகரிக்கும் மற்றும் சிவப்பணு படிமமாதல் வீதமும் (ESR) அதிகரிக்கும். ஆனால் சி-வினைபுரிப்புரதம் மற்றும் சிவப்பணு படிமமாதல் வீதங்கள் அதிகரிக்காத நிலையில் பல தம்ப முள்ளந்தண்டழல் நோயாளிகள் உள்ளனர். எனவே இயல்பான சி-வினைபுரிப்புரதம் மற்றும் சிவப்பணு படிமமாதல் வீத முடிவுகள் எப்போதும் ஒரு நபருக்கு ஏற்பட்டுள்ள வீக்கத்தின் அளவைக் குறிப்பதில்லை. சில நேரங்களில், தம்ப முள்ளந்தண்டழலைக் கொண்ட நபர்களும், இயல்பான நிலை முடிவுகளைப் பெற்றிருப்பர், ஆனாலும் அவர்களின் உடலில் கணிசமான அளவு வீக்கம் ஏற்படுகின்றன.

மனித வெள்ளையணு எதிர்ப்பி-பி மரபணுவின் மாறுபாடுகள், தம்ப முள்ளந்தண்டழல் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. ஆனாலும் இது ஒரு பகுப்பாய்வு சோதனை அல்ல. மனித வெள்ளையணு எதிர்ப்பி-பி27 மாறுபாட்டைக் கொண்டுள்ள நபர்களுக்கு சாதாரண மக்களை விடவும், இந்நோயால் தாக்கமடைவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. மனித வெள்ளையணு எதிர்ப்பி-பி27, ஒரு ரத்தப் பரிசோதனையில் கண்டறியப்பட்டால், அது நோயறிதல் சோதனையில் சில நேரங்களில் பயன்படக்கூடும், ஆனால், அது மட்டுமே முதுகுவலியைக் கொண்ட ஒரு நபருக்கு, தம்ப முள்ளந்தண்டழலின் நோயறிதல் சோதனை அல்ல. தம்ப முள்ளந்தண்டழல் இருப்பதாக கண்டறியப்பட்டதில் 95% க்கும் அதிகமான மக்களுக்கு மனித வெள்ளையணு எதிர்ப்பி-பி27 பாசிட்டிவாக இருந்தது, ஆனாலும் இந்த விகிதம் ஒவ்வொரு மக்கள்தொகைக்கும் வேறுபடுகிறது (தம்ப முள்ளந்தண்டழலைக் கொண்ட ஆஃப்ரிகன் அமெரிக்கன் மக்களில் 50% பேருக்கு மட்டுமே மனித வெள்ளையணு எதிர்ப்பி-பி27 காணப்படுகிறது, மத்திய தரைக்கடல் நாடுகளில், 80% க்கு நெருக்கமான தம்ப முள்ளந்தண்டழல் நோயாளிகளுக்கு இது இருந்தது). நோய் தொடங்கிய ஆரம்பகட்டத்தில் மனித வெள்ளையணு எதிர்ப்பி-பி27/பி*2705 ஹெட்ரோசைகோட்டஸ் நோய்க்கான அதிகபட்ச ஆபத்தைக் கொண்டிருக்கிறது.[9]

2007 -ஆம் ஆண்டில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் இருந்த ஆராய்ச்சியாளர்களின் குழு ஒன்றிணைந்து, இரண்டு மரபணுக்களை அடையாளம் கண்டனர். ARTS1 மற்றும் IL23R, இவை தம்ப முள்ளந்தண்டழலுக்கு காரணமாக இருக்கின்றன. இந்த கண்டுபிடிப்புகள், நேச்சர் ஜெனடிக்ஸ் இதழின் நவம்பர் 2007 வெளியீட்டில் வெளிவந்தது, இந்த இதழ் பொதுவான மற்றும் சிக்கலான நோய்களுக்கு மரபியல் அடிப்படைகளைப் பற்றிய ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடியது[10]. HLA-B27 உடன், இந்த இரண்டு மரபணுக்களும் ஏறத்தாழ நோய்களில் 70 சதவீதம் தோன்றுவதற்கு காரணமாக இருக்கின்றன.

இங்கிலாந்தில் உள்ள பாத்தில் உருவாக்கப்பட்ட பாத் தம்ப முள்ளந்தண்டழல் நோய் செயல்பாடு குறியீடானது (BASDAI), ஒரு செயல்மிகு நோயின் வீக்கம் நிறைந்த சுமையைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ளது. மனித வெள்ளையணு எதிர்ப்பி-பி27 அமைப்பு, உடற்பயிற்சியினால் சரியாகக்கூடிய தொடர்ச்சியான புட்ட வலி மற்றும் சாக்ரோயிலாக் இணைப்புகளில், எக்ஸ்-ரே அல்லது எம் ஆர் ஐ -இல் அடையாளம் காணப்படுவது போன்ற பிற காரணிகளுடன் தம்ப முள்ளந்தண்டழல் நோய் இருப்பதைக் கண்டறிய BASDAI உதவக்கூடும். (கீழே இதைக் காண்க: "பகுப்பாய்வு கருவிகள்")[11] கூடுதல் சிகிச்சை ஒரு நோயாளிக்கு தேவைப்படுகிறதா என்பதைத் துல்லியமாக மதிப்பிடவும், எளிதாக கணக்கிடவும் முடியும்; NSAID சிகிச்சையில் 10 க்கு 4 என்ற புள்ளிகளைப் பெற்ற ஒரு நோயாளி, பொதுவாக உயிரியல் ரீதியான சிகிச்சைக்கு ஏற்றவர் என்று கருதப்படுகிறது.

பாத் தம்ப முள்ளந்தண்டழல் செயல்பாட்டு குறியீடு (BASFI) என்பது, இந்த நோயால் ஒரு நோயாளிக்கு ஏற்பட்டுள்ள செயல்பாட்டு குறைகளைத் துல்லியமாக கணக்கிடவும், சிகிச்சையினால் ஏற்படும் முன்னேற்றத்தை அறியவும் உதவும் ஒரு செயல்பாட்டு குறியீடாகும்.. (கீழே இதைக் காண்க: "பகுப்பாய்வுக் கருவிகள்")[12] BASFI என்பது ஒரு பகுப்பாய்வு கருவியாக பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை ஆனால் அது நோயாளியின் தற்போதைய அடித்தரநிலையையும் அதற்கு பிறகு சிகிச்சைக்கு தரும் எதிர்வினையையும் கண்டறியப் பயன்படுகிறது.

சிகிச்சைமுறை

தொகு

தம்ப முள்ளந்தண்டழலுக்கு எந்தவிதமான தீர்வும் கிடையாது. ஆனாலும் சிகிச்சைகளும், மருந்துகளும் அறிகுறிகளையும் வலியையும் குறைப்பதற்கு கிடைக்கின்றன.[13][14]

உடலியக்க சிகிச்சை மற்றும் உடற்பயிற்சி இவற்றுடன் இணைந்த மருந்து ஆகியவையே ஆன்கிலோசிங் ஸ்பாண்டிலைட்டிஸ் நோய்க்கான முக்கிய சிகிச்சையாகும். இயன்முறை மருத்துவம் மற்றும் உடற்பயிற்சிகள் ஆகியவற்றுடன் மருத்துவ சிகிச்சையும் தரப்பட்டால், வீக்கமும் வலியும் குறையும், இது பொதுவாக ஒரு மருத்துவரால் தரப்படுகின்றன. இதன் மூலமாக, இயக்கங்கள் வலியையும் விறைப்பு நிலையையும் கட்டுப்படுத்துகின்றன, அதே நேரத்தில் மிகவும் தீவிரமான வீக்கத்துடன் உடற்பயிற்சிகள் செய்வது வலியை இன்னும் மோசமாக்கும். இயல்பான தகுதிகள், நோயின் அறிகுறிகளால் முன்னதாகவே கைவிடப்படலாம்.

சிலருக்கு நடப்பதற்கு உதவி தேவைப்படலாம், ஒரு மூங்கில் தடி போன்றவற்றைப் பயன்படுத்தி சமநிலையைப் பராமரிக்கவும், பாதிக்கப்பட்ட மூட்டுகளில் அழுத்தத்தை நடக்கும்போதும் நிற்கும்போதும் குறைக்க இது உதவக்கூடும். தம்ப முள்ளந்தண்டழலைக் கொண்ட பலருக்கும், நீண்ட நேரம் உட்காரவோ அல்லது நடக்கவோ முடியாது, 20 நிமிடங்கள் வரைக் கூட அவர்களால் இதைச் செய்ய முடியாது, எனவே மாறி மாறி அவர்கள் நடக்கவும், நிற்கவும், ஓய்வெடுக்கவும் செய்கிறார்கள்.

மருத்துவ நிபுணர்களும், வல்லுநர்களும் கூறுவதாவது, சரியான நிலையை தொடர்ந்து பராமரிப்பதால், வளைந்த அல்லது முடங்கிய முதுகெலும்புநிலை தவிர்க்கப்படுகிறது. இதனால் தம்ப முள்ளந்தண்டழலின் பாதிப்புகள் குறைகின்றன, நோய் கண்டறியப்பட்ட பெரும்பாலான நபர்களிடையே இது காணப்படுகிறது

மருந்துகள்

தொகு

தம்ப முள்ளந்தண்டழலுக்கு சிகிச்சையளிக்க பொதுவாக மூன்று முக்கிய வகைகள் உள்ளன.

  • வீக்கக்குறைப்பு மருந்துகள், இதில் ஐபுப்ரோஃபென், பினைபியூட்டோசோன், இண்டோமெத்தாசின், நாப்ராக்ஸேன் மற்றும் COX-2 ஏற்பிகள் போன்ற NSAIDகளும் அடங்கும், இவை வலியையும் வீக்கத்தையும் குறைக்கின்றன. ஓபியோய்டு அனால்ஜெசிக்ஸ் மருந்துகள் தம்ப முள்ளந்தண்டழல் நோயாளிகள் எதிர்கொள்ளும் கடுமையான வலியை நீக்குவதற்கு சிறந்தது என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது, பொதுவாக இவை குறிப்பிட்ட நேரத்தில் செயல்படும் என்று முறையில் வருகின்றன.
  • சிக்லோஸ்போரின், மெத்தோட்ரெக்ஸேட், சல்ஃபாசாலாசைன் மற்றும் கார்ட்டிகாஸ்டீராய்டுகள் போன்ற வாதநோய் எதிர்ப்பு மருந்துகள் (DMARD) நோயெதிர்ப்பு தணிப்பு முறையில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்க பயன்படுகின்றன.
  • எடானெர்செப்ட், இன்ஃப்ளிக்ஸிமாப் மற்றும் அடாலிமுமாப் போன்ற கழலை நசிவுக்காரணி-ஆல்ஃபா தடுப்பிகள் (ஆன்டாகோனிஸ்ட்கள்) (பயோலாஜிக்ஸ் என்றும் அறியப்படுகின்றன) தம்ப முள்ளந்தண்டழல் மற்றும் பிற தன்னெதிர்ப்பு நோய்களின் சிகிச்சையில் சிறந்த நோய் எதிர்ப்பு தணிப்பிகளாக செயல்படுகின்றன;

கழலை நசிவுக்காரணி-ஆல்ஃபா தடுப்பிகள் மிகவும் நம்பகமான சிகிச்சைகளை காண்பித்தன, பெரும்பாலான மருத்துவ நோயாளிகளிடையே தம்ப முள்ளந்தண்டழலின் வளர்ச்சியைத் தடுக்கின்றன மற்றும் பெரும்பாலான நோயாளிகளுக்கு கணிசமான அளவு வீக்கமும் வலியும் குறைகின்றன, ஆனால் முற்றிலும் நீங்குவதில்லை. அவை மூட்டுகளில் ஏற்படும் ஆர்திரிடிஸைக் குறைக்க உதவுவதோடு தம்ப முள்ளந்தண்டழலுடன் இணைந்த முதுகெலும்பு வாதத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. இதன் பின்னடைவானது, பெரும்பாலும் அதிக விலையுடையதாக இருப்பதோடு, இந்த மருந்துகள் நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. இந்த காரணத்திற்காக, எந்தவொரு கழலை நசிவுக்காரணி-ஆல்ஃபா தடுப்பிகளின் சோதனை நெறிமுறையிலும் சிகிச்சைத் தொடங்குவதற்கு முன்பாக, காசநோய்க்கான (மேன்டௌக்ஸ் அல்லது ஹீஃப்) சோதனை அடங்கியிருக்கும். மீண்டும் மீண்டும் தொற்று ஏற்படுவது, தொடர்ச்சியான தொண்டை கரகரப்பும் கூட, இந்த சிகிச்சையில் செய்யப்படும் நோயெதிர்ப்பு தணிப்பின் காரணமாக ஏற்படக்கூடும், இதனால் சிகிச்சை இடைநிறுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்படலாம். கழலை நசிவுக்காரணி-ஆல்ஃபா தடுப்பி மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகள், மற்றவர்களுடன் பழகுவதைக் குறைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள், ஏனெனில் மற்றவர்களிடமிருந்து வைரஸ் தொற்று (சளி அல்லது காய்ச்சல் போன்றவை) ஏற்படக்கூடும் அல்லது பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்றைப் பெறக்கூடும்.

அறுவைசிகிச்சை

தொகு

தம்ப முள்ளந்தண்டழலின் தீவிரமான நிலைகளில், அறுவைசிகிச்சை ஒரு நல்ல தீர்வாக இருக்கக்கூடும், இதில் மூட்டு இடமாற்றங்கள் செய்யப்படக்கூடும், குறிப்பாக முட்டிகள் மற்றும் இடுப்பு மூட்டுகள். அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்வதால், கடுமையான வளைய முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு தீர்வு கிடைக்கக்கூடும் (கடுமையான கீழ்நோக்கிய வளைவு), குறிப்பாக கழுத்துப்பகுதியில், ஆனாலும் இந்த நடைமுறை மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.

மேலும் தம்ப முள்ளந்தண்டழலுக்கு, உணர்வகற்றி தருவதையும் மீறிய அறிகுறிகள் ஏற்படக்கூடும்.

மேல்பகுதி காற்றுப்பாதையில் ஏற்படும் சிரமங்களை ஏற்படுத்தும் விதமாக மாற்றங்கள் ஏற்படக்கூடும், முதுகெலும்பு மற்றும் கடினஉறைமேவு உணர்வகற்றி கொடுப்பது, மூட்டிணைப்புத் தசைநார்கள் கால்சியமாதல் காரணமாக, கடினமானதாக மாறக்கூடும். மற்றும் ஒரு சிலருக்கு பெருந்தமனி ஆற்றல் குறைபாடு ஏற்படக்கூடும். விலா எலும்புகளில் விறைப்பு ஏற்படுவதால், சுவாசம் முழுமையாக உதரவிதானத்தை மட்டுமே சார்ந்திருக்கும் நிலை ஏற்படும். இதனால் சிறுநீரக செயல்பாடுகளிலும் சிக்கல் ஏற்படக்கூடும்.

உடலியல் நோய்சிகிச்சை

தொகு

ஒரு மூட்டுவலி நிபுணரிடம் முன்பே அனுமதி பெற்ற பின்னரே எல்லாவகையான உடலியக்க சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும், ஏனெனில் இயக்கமானது, ஒரு நோயாளிக்கு அதிக நன்மைகளைத் தரலாம், அதே நேரத்தில் ஒரு தம்ப முள்ளந்தண்டழல் நோயாளியின் உடல்நலத்தை அதிகம் தாக்கலாம்; இந்த நோயைப் பற்றி நன்கு அறிந்த மருத்துவர்கள் மட்டுமே, மசாஜ்களையும், உடல்ரீதியான செயல்களையும் தர வேண்டும். தம்ப முள்ளந்தண்டழல் நோயாளிகளுக்கு நன்மையளிக்கக் கூடிய சில சிகிச்சைகளாவன:

  • உடலியக்க சிகிச்சை/இயன்முறை சிகிச்சையானது தம்ப முள்ளந்தண்டழலுக்கு அதிக நன்மையளிக்கக்கூடியதாக இருக்கிறது;
  • நீச்சல், மிகவும் விரும்பப்படும் ஒரு உடற்பயிற்சி ஆகும், ஏனெனில் இதில் மூட்டுகளும் தசைகளும் ஈர்ப்பு விசைக் குறைந்த சூழலில் செயல்படுகின்றன;
  • யோகா, மரமேறுதல், டாய்ச்சி, பிலேட்ஸ் முறை போன்ற மெதுவான இயக்க தசை நீட்டிப்பு பயிற்சிகள்.

மிதமானது முதல் அதிகமான அழுத்த பயிற்சிகளான ஓடுதல் போன்றவை அதிக அளவில் பரிந்துரைக்கப்படுவதில்லை அல்லது சில வரம்புகளுடன் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், பாதிக்கப்பட்ட இடங்களில் அழுத்தம் ஏற்படுவது, வலியை மோசமாக்கும் மேலும் சிலருக்கு மடங்காத நிலையை அதிகமாக்கும்.

நோய் முன்கணிப்பு

தொகு

தம்ப முள்ளந்தண்டழலானது, மிதமானது முதல் தொடர்ந்து வலிமையைக் குறைக்கும் அளவுக்கு வேறுபடுகின்றது, மேலும் மருத்துவ ரீதியாக கட்டுப்படுத்தக்கூடியதாகவும் இருக்கிறது. சிலருக்கு, வீக்கமும், அதற்கு பின் வலியும் இருக்கக்கூடும் மற்றும் சிலருக்கு வலியும் பின்னர் கடுமையான வீக்கமும் வலியும் இருக்கும்.

தம்ப முள்ளந்தண்டழலைக் கவனிக்காமல் விடும்போதும் அதனுடன் டாக்டிலிட்டிஸ் அல்லது என்திஸ்டிஸ் சேர்ந்து வரும்போதும், குறிப்பாக முதுகெலும்பு வீக்கம் அதிகரிக்கும்போதும் அது சாதாரண மூட்டுப் பிறழ்வு என்று தவறாக கருதப்படும் வாய்ப்புண்டு. நீண்டகாலம் கவனிக்கப்படாமல் இருந்தால், எலும்புக் குறைபாடு அல்லது எலும்புப்புரை முதுகெலும்பு முன்பின்னாவதால் (anteroposterior) ஏற்படக்கூடும், இதனால் மெல்ல மெல்ல அழுத்த விரிசல்கள் மற்றும் முதுகில் "கூன்" ஏற்படக்கூடும். வளர்ச்சியடைந்த தம்ப முள்ளந்தண்டழலுக்கான பொதுவான அறிகுறிகளாவன, சிண்டெஸ்மோஃபைட்ஸானது எக்ஸ்-கதிரிலும், ஆஸ்டியோபைட்களில் உள்ளது போன்று முதுகெலும்பில், வழக்கத்திற்கு மாறான எலும்பு வளர்ச்சியும் காணப்படும். வெர்டாப்ரே பாரஸ்தீஷியா என்பது நரம்புகளைச் சுற்றியுள்ள திசுக்கள் வீக்கமடைவதால் ஏற்படுகிறது.

தம்ப முள்ளந்தண்டழலால் பொதுவாக பாதிக்கப்படும் உடலுறுப்புகளாவன, முதுகெலும்பு மற்றும் பிற மூட்டுகளைத் தவிர்த்து, இதயம், நுரையீரல்கள், கண்கள், குடல் மற்றும் சிறுநீரகங்கள் ஆகியவையாகும். பிற சிக்கல்களாவன ஏரோடிக் திரும்ப சுழற்றுதல், அச்சிலெஸ் டெண்டினிடிஸ், இதய இருவறை (atrio - ventricular) நோய் தடுப்பு மற்றும் தசை மாவுப்பொருள் ஏற்றம் (amyloiodosis) ஆகியவை ஆகும்.[15] நுரையீரல் இழைமப்பெருக்கம் (Lung fibrosis), மார்புப் பகுதி எக்ஸ் கதிர் சோதனைகள் போன்றவை நுரையீரல் செயல்பாடு சோதனையில் வரம்புடைய நுரையீரல் குறைபாட்டை சுட்டிக்காட்டும் நுரையீரல் முனை இழைமப்பெருக்ககத்தைக் காண்பிக்கக்கூடும். மிகவும் அரிதான சிக்கல்களாவன, தண்டுவட முனை நோய்த்தொகை (cauda equina syndrome) போன்ற நரம்பியல் நிலைகளாகும்.[15][16]

நோய் பரவல்

தொகு

ஒவ்வொரு பெண்ணுக்கும், மூன்று ஆண்கள் வீதம் தம்ப முள்ளந்தண்டழல் நோய் கொண்டவராக கண்டறியப்பட்டுள்ளனர், ஒட்டுமொத்த நோய்ப்பரவலானது 0.25% ஆகும். பல முடவியல் மருத்துவர்களின் கருத்துப்படி, தம்ப முள்ளந்தண்டழலைக் கொண்ட பல பெண்கள் சரியாக நோய் கண்டறியப்படாமல் உள்ளனர். ஏனெனில் அவர்களுக்கு மிதமான அளவிலான அறிகுறிகள் தோன்றுகின்றன.[4]

வரலாறு

தொகு
 
லியோனார்ட் ட்ராஸ்க், தி ஒண்டர்ஃபு இன்வேலிட்

தம்ப முள்ளந்தண்டழலானது முதன்முதலில், முடக்குவாத நோயிலிருந்து வேறுபட்ட ஒரு நோயாக அறியப்பட்டது என்று கேலன் என்பவர் இரண்டாம் நூற்றாண்டில் தெரிவித்தார்[17]. ஆனாலும், இந்த நோய் இருந்ததற்கான எலும்புக்கூடு ஆதாரம் (மூட்டுகள் கூடி, முக்கியமாக முதுகெலும்பு கூடுவதால் ஏற்படும் நிலைக்கு, "மூங்கில் முதுகெலும்பு" என்று பெயர்) 5000 ஆண்டுகள் பழமையான ஒரு எகிப்திய மம்மியை அகழ்வாராய்ச்சியில் கண்டறிந்த போதே கண்டறியப்பட்டது, அந்த மம்மிக்கு "மூங்கில் முதுகெலும்பு" இருந்ததாக அறியப்பட்டது.[18]

உடற்கூறு நிபுணரும், அறுவை சிகிச்சை நிபுணருமான ரீல்டோ கொலம்போ என்பவர், இந்த நோய் என்னவென்பதை 1559ஆம் ஆண்டில் விவரித்துள்ளார்,[19] மற்றும் 1691 -ஆம் ஆண்டில் தம்ப முள்ளந்தண்டழலால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு முதுகெலும்பு கூட்டில் மாற்றங்கள் இருப்பது பெர்னார்டு கான்னர் என்பவரால் வெளியிடப்பட்டது[20]. 1818 -ஆம் ஆண்டில், பெஞ்சமின் பிராய்டி என்பவர் தம்ப முள்ளந்தண்டழல் மற்றும் அதனுடன் இரிடிஸ் ஆகிய நோய்கள் இருப்பதை முதன்முதலில் ஆவணப்படுத்தினார்.[21] 1858 -ஆம் ஆண்டில், டேவிட் டக்கர் என்பவர், லியோனார்டு ட்ராஸ்க் என்ற பெயருள்ள நோயாளி ஒருவருக்கு, தம்ப முள்ளந்தண்டழலின் காரணத்தினால் முதுகெலும்பு பிறழ்வடைந்துள்ளதை விவரிக்கும் ஒரு கையேட்டை வெளியிட்டார்.[22] 1833 -ஆம் ஆண்டில், ட்ராஸ்க் ஒரு குதிரையிலிருந்து கீழே விழுந்தார், இதனால் நிலைமை இன்னும் மோசமாகி பிறழ்வு தீவிர நிலையை அடைந்தது என்று டக்கர் குறிப்பிடுகிறார். இதுவே அமெரிக்காவில் தம்ப முள்ளந்தண்டழல் நோய் முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட நிகழ்வாகும், ஏனெனில் இதிலேதான் சந்தேகத்துக்கு இடமின்றி, தம்ப முள்ளந்தண்டழல் நோயின் குணநலனான, வீக்கம் தொடர்பான நோயையும், தம்ப முள்ளந்தண்டழலால் ஏற்படக்கூடிய பிறழ்வும் விவரிக்கப்பட்டுள்ளன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டத்தில், (1893-1898), 1893 -ஆம் ஆண்டில், ரஷ்யாவைச் சேர்ந்த நரம்புநோய்மருத்துவர் விளாடிமிர் பெக்ட்ரிவ் என்பவரும்,[23] 1897ஆம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த அடோல்ஃப் ஸ்ட்ரம்பெல் என்பவரும்,[24] மற்றும் 1898ஆம் ஆண்டில் பிரான்ஸை சேர்ந்த பியர்ரி மேரி[25] என்பவரும் தம்ப முள்ளந்தண்டழல் நோயானது தீவிரமான முதுகெலும்பு பிறழ்வு நிலைக்கு செல்வதற்கு முன்பு அதைக் கண்டுபிடிப்பதற்கான போதுமான விவரங்களை முதன்முதலாக தந்தனர். இந்த காரணத்தினால், பெச்டெரீவ் குறைபாடு, மேரி-ஸ்ட்ரம்பெல் குறைபாடு அல்லது தம்ப முள்ளந்தண்டழல் என்று அழைக்கப்படுகிறது.

தம்ப முள்ளந்தண்டழல் நோயுடன் வாழ்ந்த பிரபலங்கள்

தொகு

ஒரு சுருக்கமான பட்டியல்:

  • மோட்லி குரூஸ் கிட்டார் கலைஞர் மிக் மார்ஸ் (1951)[26]
  • உலக செஸ் சாம்பியன் விளாடிமிர் கிராம்னிக் (Vladimir Kramnik1975)[27]
  • இங்கிலாந்து கிரிக்கெட் கேப்டன் மைக் ஆதர்டன் (Mike Atherton; 1968)[28]
  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கெல் ஸ்லேட்டர் (Michael Slater; 1971)[29]
  • நார்வே பிரதமர் ஜென்ஸ் ஸ்ட்டோல்டன்பெர்க் [30]
  • ஸ்காட்லாந்து ஸ்னூக்கர் வீரர் கிறிஸ் ஸ்மால் (Chris Small; 1973)[31]
  • அமெரிக்க, மேஜர் லீக் பேஸ்பால் வீரர் ரிக்கோ ப்ராக்னா (Rico Brogna; 1970)[32][33]
  • தாய்வான் இசைக்கலைஞர் ஜே சூ (Jay Chou; 1979)[34][35]
  • செக் எழுத்தாளர் காரல் கேபக் (Karel Čapek; 1890)
  • இயான் உஸ்னம் (Ian Woosnam; 1958)[36], பிரித்தானிய கோல்ஃப் வீரர்
  • லீ ஹர்ஸ்ட்(Lee Hurst; 1962)[36], கோமாளி

ஆராய்ச்சி வழிகாட்டுதல்

தொகு

தம்ப முள்ளந்தண்டழல் நோயைக் கொண்ட பெரும்பாலான நோயாளிகளுக்கு, மனித வெள்ளையணு எதிர்ப்பி-பி27 காணப்படுகிறது, மற்றும் எதிர்ப்பான் ஏ (IgA) ரத்தத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. மனித வெள்ளையணு எதிர்ப்பி-பி27 க்ளெபிஸியால்லா பாக்டீரியாவாலும் வெளிப்படுத்தப்படுகிறது, இது தம்ப முள்ளந்தண்டழல் நோயாளிகளின் உட்கரு பகுதிகளில் காணப்படுகிறது. ஒரு கருத்தின்படி, இந்த பாக்டீரியா காணப்படுவது, நோயைத் தூண்டுவதாக அமைந்துள்ளது என்றும், உணவில் ஸ்டார்ச்சைக் (பாக்டீரியா வளர்வதற்கு இதுவே தேவை) குறைத்து உண்பதால் தம்ப முள்ளந்தண்டழல் நோயாளிகளுக்கு நன்மை கிடைக்கும். இந்த வகை உணவு முறையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில், அறிகுறிகள் தம்ப முள்ளந்தண்டழல் நோய் கொண்ட தனிநபர்களுக்கு, வீக்கத்தைக் குறைத்தது மேலும் எதிர்ப்பான் ஏ அளவுகள் தம்ப முள்ளந்தண்டழல் இருந்த மற்றும் இல்லாத நபர்களிடையே குறைந்தது.[37] நோயின் கால அளவில், உணவில் செய்யப்படும் மாற்றம், போதுமான அளவு மருத்துவ விளைவை ஏற்படுத்துகிறதா என்று அறிய, மேலும் ஆராய்ச்சி அவசியம்.

மேலும் பார்க்க

தொகு
  • NASC, வட அமெரிக்க தம்ப முள்ளந்தண்டழல் அமைப்பு
  • NIAMS, தேசிய ஆர்த்ரிடிஸ் மற்றும் மியூக்லோஸ்கெலிடால் மற்றும் தோல் நோய்கள் கல்வி மையம்
  • SAA, ஸ்பாண்டிலைட்டிஸ் அசோசியேஷன் ஆஃப் அமெரிக்கா
  • AF, ஆர்திரிடிஸ் ஃபவுண்டேஷன்

மேற்கோள்கள்

தொகு
  1. J Sieper, J Braun, M Rudwaleit, A Boonen, and A Zink (2002). "Ankylosing spondylitis: an overview". Annals of the Rheumatic Diseases 61 (3): iii8. doi:10.1136/ard.61.suppl_3.iii8. 
  2. Jiménez-Balderas FJ, Mintz G. (1993). "Ankylosing spondylitis: clinical course in women and men". J Rheumatol 20 (12): 2069–72. பப்மெட்:7516975. https://archive.org/details/sim_journal-of-rheumatology_1993-12_20_12/page/2069. 
  3. 3.0 3.1 Porter, Robert; Beers, Mark H.; Berkow, Robert (2006). The Merck manual of diagnosis and therapy. Rahway, NJ: Merck Research Laboratories. pp. 290. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-911910-18-2.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. 4.0 4.1 "Arthritis Research Campaign - Ankylosing Spondylitis Case History". Arthritis Research Campaign. 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-08-25.
  5. Tiwana H, Natt R, Benitez-Brito R, Shah S, Wilson C, Bridger S, Harbord M, Sarner M, Ebringer A (2001). "Correlation between the immune responses to collagens type I, III, IV and V and Klebsiella pneumoniae in patients with Crohn's disease and ankylosing spondylitis". Rheumatology (Oxford) 40 (1): 15–23. doi:10.1093/rheumatology/40.1.15. பப்மெட்:11157137. https://archive.org/details/sim_rheumatology_2001-01_40_1/page/15. 
  6. Khan MA. (2002). Ankylosing spondylitis: The facts. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-263282-5.
  7. Toivanen P, Hansen D, Mestre F, Lehtonen L, Vaahtovuo J, Vehma M, Möttönen T, Saario R, Luukkainen R, Nissilä M (1 September 1999). "Somatic serogroups, capsular types, and species of fecal Klebsiella in patients with ankylosing spondylitis". J Clin Microbiol 37 (9): 2808–12. பப்மெட்:10449457. பப்மெட் சென்ட்ரல்:85385. http://jcm.asm.org/cgi/content/full/37/9/2808?view=long&pmid=10449457. பார்த்த நாள்: 14 மே 2010. 
  8. Thomas E, Silman AJ, Papageorgiou AC, Macfarlane GJ, Croft PR. (1998). "Association between measures of spinal mobility and low back pain. An analysis of new attenders in primary care". Spine 23 (2): 343–7. doi:10.1097/00007632-199802010-00011. பப்மெட்:9507623. 
  9. Harjacek M, Margetić T, Kerhin-Brkljacić V, Martinez N, Grubić Z (2008). "HLA-B*27/HLA-B*07 in combination with D6S273-134 allele is associated with increased susceptibility to juvenile spondyloarthropathies". Clin. Exp. Rheumatol. 26 (3): 498–504. பப்மெட்:18578977. 
  10. Brionez TF, Reveille JD (July 2008). "The contribution of genes outside the major histocompatibility complex to susceptibility to ankylosing spondylitis". Curr Opin Rheumatol 20 (4): 384–91. doi:10.1097/BOR.0b013e32830460fe. பப்மெட்:18525349. 
  11. Garrett S, Jenkinson T, Kennedy L, Whitelock H, Gaisford P, Calin A (1994). "A new approach to defining disease status in ankylosing spondylitis: the Bath Ankylosing Spondylitis Disease Activity Index". J Rheumatol 21 (12): 2286–91. பப்மெட்:7699630. https://archive.org/details/sim_journal-of-rheumatology_1994-12_21_12/page/2286. 
  12. Calin A, Garrett S, Whitelock H, Kennedy L, O'Hea J, Mallorie P, Jenkinson T (1994). "A new approach to defining functional ability in ankylosing spondylitis: the development of the Bath Ankylosing Spondylitis Functional Index". J Rheumatol 21 (12): 2281–5. பப்மெட்:7699629. https://archive.org/details/sim_journal-of-rheumatology_1994-12_21_12/page/2281. 
  13. Toivanen A, Möttönen T. (1998). "Ankylosing spondylitis: current approaches to treatment.". BioDrugs 10 (3): 193–200. doi:10.2165/00063030-199810030-00003. பப்மெட்:18020595. 
  14. Williams RO, Paleolog E, Feldmann M. (2007). "Cytokine inhibitors in rheumatoid arthritis and other autoimmune diseases.". Curr Opin Pharmacol 7 (4): 412–7. doi:10.1016/j.coph.2007.06.001. பப்மெட்:17627887. 
  15. 15.0 15.1 Alpert, Joseph S. (2006). The AHA Clinical Cardiac Consult. Lippincott Williams & Wilkins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0781764904.
  16. Nicholas U. Ahn, Uri M. Ahn, Elizabeth S. Garrett et al. (2001). "Cauda Equina Syndrome in AS (The CES-AS Syndrome): Meta-analysis of outcomes after medical and surgical treatments". J of Spinal Disorders 14 (5): 427–433. doi:10.1097/00002517-200110000-00009. பப்மெட்:11586143. 
  17. Dieppe P (1988). "Did Galen describe rheumatoid arthritis?". Annals of the Rheumatic Diseases 47 (1): 84–87. doi:10.1136/ard.47.1.84-b. பப்மெட்:3278697. 
  18. Calin A (April 1985). "Ankylosing spondylitis". Clin Rheum Dis 11 (1): 41–60. பப்மெட்:3158467. 
  19. Benoist M (April 1995). "Pierre Marie. Pioneer investigator in ankylosing spondylitis". Spine 20 (7): 849–52. பப்மெட்:7701402. 
  20. BLUMBERG BS (December 1958). "Bernard Connor's description of the pathology of ankylosing spondylitis". Arthritis Rheum. 1 (6): 553–63. doi:10.1002/art.1780010609. பப்மெட்:13607268. 
  21. Leden I (1994). "Did Bechterew describe the disease which is named after him? A question raised due to the centennial of his primary report". Scand J Rheumatol 23 (1): 42–5. doi:10.3109/03009749409102134. பப்மெட்:8108667. 
  22. "Life and sufferings of Leonard Trask" (PDF). Ankylosing Spondylitis Information Matrix.
  23. Bechterew W. (1893). "Steifigkeit der Wirbelsaule und ihre Verkrummung als besondere Erkrankungsform". Neurol Centralbl 12: 426–434. 
  24. Strumpell A. (1897). "Bemerkung uber die chronische ankylosirende Entzundung der Wirbelsaule und der Huftgelenke". Dtsch Z Nervenheilkd 11: 338–342. doi:10.1007/BF01674127. 
  25. Marie P. (1898). "Sur la spondylose rhizomelique". Rev Med 18: 285–315. 
  26. Lee, Tommy; Strauss, Neil (2002) [2001]. The Dirt: Confessions of the World's Most Notorious Rock Band (reprint, illustrated ed.). HarperCollins. p. 186. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-06-098915-7. இணையக் கணினி நூலக மைய எண் 212381899. பார்க்கப்பட்ட நாள் 18 December 2011. {{cite book}}: |contributor= requires |contribution= (help); More than one of |pages= and |page= specified (help); Unknown parameter |coauthors= ignored (help)
  27. "ChessBase.com – Chess News – Kramnik drops out of Wijk Super-Tournament". Chessbase.com. Archived from the original on 21 அக்டோபர் 2008. பார்க்கப்பட்ட நாள் 4 November 2008.
  28. Nick Gough (2005). Puzzling Out General Medicine, Part 2. Remedica. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-901346-87-0. பார்க்கப்பட்ட நாள் 18 December 2011.
  29. "Michael Slater". Presenters:Andrew Denton and Michael Slater. Enough Rope with Andrew Denton. ABC Television, Australia. 14 March 2005. 30 minutes in. Transcript.
  30. http://www.dagbladet.no/2009/11/11/nyheter/svineinfluensa/vaksine/jens_stoltenberg/8991045/
  31. "Small forced to give up snooker. Former World No.12 Chris Small has retired from snooker due to a degenerative spinal disease.". BBC News (BBC). 23 September 2005. http://news.bbc.co.uk/sport2/hi/other_sports/snooker/4274298.stm. பார்த்த நாள்: 18 December 2011. 
  32. Doug Glanville (2010). The Game from Where I Stand: A Ballplayer's Inside View. Macmillan. p. 188. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4299-47209. பார்க்கப்பட்ட நாள் 18 December 2011. {{cite book}}: More than one of |pages= and |page= specified (help)
  33. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-05-20. பார்க்கப்பட்ட நாள் 2010-05-14.
  34. (சீனம்) "Jay Chou discusses the wonder of life in illness 二度造访心情电视 周杰伦谈病痛中的精彩人生" (News article). sina.com.cn. 28 April 2003. http://ent.sina.com.cn/s/h/2003-04-28/2225147402.html. பார்த்த நாள்: 2 June 2007. 
  35. (சீனம்) "Jacky Wu: Jay Chou takes 12 painkillers 吴宗宪:周杰伦一度服12颗止痛药" (News article). zaobao.com. 25 February 2006 இம் மூலத்தில் இருந்து 12 அக்டோபர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071012055042/http://stars.zaobao.com/pages3/zhoujielun060225.html. பார்த்த நாள்: 2 June 2007. 
  36. 36.0 36.1 "Probe into arthritis pain". (Specifically: ankylosing spondylitis). BBC News. 24 August 2002. பார்க்கப்பட்ட நாள் 2007-09-06.
  37. Ebringer A, Wilson C (Jan 15 1996). "The use of a low starch diet in the treatment of patients suffering from ankylosing spondylitis". Clin Rheumatol 15 Suppl 1: 62–66. பப்மெட்:8835506. 

வெளியிணைப்புகள்

தொகு

பகுப்பாய்வு கருவிகள்

தொகு