தயா லட்சுமிநாராயணன்
தயா லட்சுமிநாராயணன் (Dhaya Lakshminarayanan) நகைச்சுவை நடிகர், கலைஞர், தொலைக்காட்சித் தொகுப்பாளர்,[1][2] மற்றும் கதைசொல்லி ஆவார்.[3] இவர் சான்பிரான்சிஸ்கோ ஆசிய கலை அருங்காட்சியகம் [4] தெ சான் ஜோஸ் மியூசியம்,[5] சைரன் திரையரங்கு,[6][7] சான்பிரான்சிஸ்கோ பன்ச்லயன் நகைச்சுவை சங்கம் மற்றும் கோப் நகைச்சுவை சங்கம் பிராவா திரையரங்கு,[8][9] த்ரோக்மார்டன் தியேட்டர் [10] போன்றவற்றில் இவர் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.
என்பிஆரின் இன் ஸ்னாப் ஜட்ஜ்மென்ட்,[11][12][13][14] வானொலி நிகழ்ச்சிகளில் லட்சுமிநாராயணன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இவர் ஏழு முறை கலந்து கொண்டார்.[15] மற்றும் ட்ரேசி ஹம்ப்ரேயுடன் சிபிஎஸ்'ஸ் பே சண்டேவில் கலந்து கொண்டார்.[16] பாஸ்டனின் WGBH இல் உருவாக்கப்பட்ட ஒரு பொது தொலைக்காட்சி நிகழ்ச்சியான உயர்நிலைப் பள்ளி வினாடி வினா நிகழ்ச்சியின் முன்னாள் தொகுப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இது மார்ச் 2010 இல் வெளியானது.[17]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுலட்சுமி நாராயணன் ஓஹியோவின் கிளீவ்லாந்தில் உள்ள ஒரு இந்து குடும்பத்தில் வளார்ந்தார்.[18] பின்னர் பர்மிங்காம், அலபாமா சென்றார்.[19]
லட்சுமிநாராயணனின் தந்தை, ஏ. வி, 12 உடன்பிறப்புகளில் ஒருவர், அவர்களில் ஐந்து பேர் குழந்தை பருவத்திலேயே இறந்தனர். இவர் முதலில் தென்னிந்தியாவிலிருந்து [18] அமெரிக்காவிற்கு,[20] 1970 இல் 12 அமெரிக்க டாலர்களுடன் குடியேறினார்; இவர் தனது மனைவியுடன் இல்லினாய்ஸில் சிறிது காலம் குடியேறினார்.
லட்சுமிநாராயணனின் தந்தை ஓய்வுபெற்ற இயற்பியல் பேராசிரியர், அவரது தாயார் ஒரு மென்பொருள் பொறியாளர் . லட்சுமிநாராயணனின் சகோதரர் யேலில் நரம்பியலில் முனைவர் பட்டம் பெற்றார் .[21]
கல்வி
தொகுலட்சுமி மிநாராயணன் எம்ஐடியில் [21] இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். இவரது பட்டங்கள் நகர்ப்புற ஆய்வுகள் மற்றும் நகர திட்டமிடல் பிரிவில் பெற்றார். மாஸ் டிரான்சிட்டிற்கான காப்பு ஆற்றல் விநியோகங்கள் எனும் ஆய்வறிக்கையை இவர் சமர்ப்பித்தார்.
தொழில்
தொகுவணிகம்
தொகுலட்சுமி நாராயணன், ஈபே நிறுவனத்தின் முன்னாள் முதலீட்டு நிர்வாகி ஆவார்.இவர் பூஸ் ஆலன் ஹாமில்டனுடன் மேலாண்மை ஆலோசகராகவும் பணியாற்றினார்.
நகைச்சுவை
தொகுலட்சுமி நாராயணன் 2006 இல் தொழில்முறை ஸ்டாண்டப் நகைச்சுவை நடிகராகப் பணியாற்றத் தொடங்கினார்.[19] மற்ற நகைச்சுவை நடிகர்களுடன் சேர்ந்து முதல் முறையாக கலந்துகொண்டார். கிரிசு ரொக் என்பவரால் இவர் ஈர்க்கப்பட்டார்.[22]
2010 ஆம் ஆண்டில், அவர் மகாத்மா மோசஸ் நகைச்சுவை சுற்றுப்பயணத்தின் மூன்று போட்டியாளார்களில் ஒருவராக இருந்தார் . அதில் குறிப்பாக இவர் ஒருவர் மட்டுமே பெண் போட்டியாளர்.[23] அதே ஆண்டு, அவர் பாஸ்டனின் WGBH இல் உருவாக்கப்பட்ட ஒரு பொது தொலைக்காட்சி நிகழ்ச்சியான உயர்நிலை பள்ளி வினாடி வினா நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ஆனார்.
2011 ஆம் ஆண்டில், லட்சுமிநாராயணன் சான் பிரான்சிஸ்கோ இலாப நோக்கற்ற ஒன் எகானமி, எவரிடே டெக் என்றழைக்கப்படும் ஒரு நகைச்சுவை-சந்திப்பு வலைத் தொடரை உருவாக்கினார்.
2013 ஆம் ஆண்டில், லட்சுமி நாராயணனின் குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சிகளில் ஒன்று, பிராவாவின் புத்தாண்டு காமெடி ஃபியஸ்டா ஆகும், அவர் மார்கா கோம்ஸ் மற்றும் மிகியா மோஸ்லி ஆகியோருடன் கலந்து கொண்டார்.[8]
2014 இல், லட்சுமிநாராயணன் மற்றும் கரிந்தா டாபின்ஸ் பெர்க்லியில் உள்ள லா பெனா கலாச்சார மையத்தில் நடைபெற்ற நேரடி நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் நேர்காணல் தொடரான ஸ்டாண்ட் அப் சிட் டவுனை உருவாக்கினர். மேலும் 2014 ஆம் ஆண்டில், அவர் சான் ஜோஸ் மியூசியம் ஆஃப் ஆர்ட்டில் மூன்று கதாபாத்திரங்களை சித்தரித்து இவர் எழுதிய ஒரு நாடகத்தை நிகழ்த்தினார்.
விருதுகள் மற்றும் கவுரவங்கள்
தொகு- லிஸ் கார்பெண்டர் அரசியல் நகைச்சுவை விருது (2016) [24]
- காமெடி சென்ட்ரல் ஆசியாவின் அல்டிமேட் காமெடி சேலஞ்ச் எனும் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார். [24]
- சிறந்த நகைச்சுவை நடிகர் 2013,
- சான் பிரான்சிஸ்கோ பே கார்டியன் வாசகர் கருத்துக் கணிப்பில் "பெஸ்ட் ஆஃப் தி பே"
- 2008 ஹார்வியின் அரசியல் போட்டியில் மூன்றாம் இடம் வென்றவர் [25]
- 2007 பேட்டில் ஆஃப் தெ பே- முதல் இடம் வென்றார்.[23][25]
சான்றுகள்
தொகு- ↑ "Alumni Profile: Dhaya Lakshminarayanan | MIT Career Advising & Professional Development". capd.mit.edu. Archived from the original on 2021-04-08. பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.
- ↑ "High School Quiz Show; Weston vs. Woburn Memorial". openvault.wgbh.org.
- ↑ "Previously Secret Information Hits, Misses on Sunday Night". SF Weekly. Archived from the original on 2021-09-26. பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.
- ↑ "Asian Art Museum | TAKEOVER: Dhaya Lakshminarayanan". www.asianart.org. Archived from the original on 2020-01-03. பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.
- ↑ "Comedy featured at San Jose Museum of Art event". March 8, 2012.
- ↑ "Minority Retort Presents: Dhaya Laksh... | Mar 15 | Willamette Week". www.wweek.com.
- ↑ "Minority Retort presents Dhaya Lakshminarayanan Tickets | The Siren Theater | Portland, OR | Fri, Mar 15, 2019 at 8pm". Mercury Tickets.
- ↑ 8.0 8.1 "Brava's New Year's Eve Comedy Fiesta 2013 with Marga Gomez, Dhaya Lakshminarayanan and Micia Mosely". Brava for Women in the Arts.
- ↑ "Who's Your Mami Comedy with headliner Chey Bell". Brava for Women in the Arts.
- ↑ "8pm: Tuesday Night Live Comedy! – Throckmorton Theatre". Archived from the original on 2020-01-03. பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.
- ↑ "Chasing Bubba by Dhaya Lakshminarayanan | Snap Judgment". snapjudgement.org. Archived from the original on 2020-01-11. பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.
- ↑ "Romantic Pains - Dhaya Lakshminarayanan | Snap Judgment". snapjudgement.org. Archived from the original on 2020-01-11. பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.
- ↑ "Pizarro: Sheryl Crow pops into Original Joe's to support breast cancer effort". April 14, 2013.
- ↑ "Breakout | Snap Judgment". WNYC Studios.
- ↑ "Snap Judgment". snapjudgement.org.
- ↑ https://www.google.com/search?q=Tracy+Humphrey+interviews+comic+Dhaya+Lakshminarayanan+Original+airdate+on+CBS+5+(KPIX-TV)+was+9/19/10&tbm=isch&source=univ&client=firefox-b-1-d&sa=X&ved=2ahUKEwjH2Kvy-OXmAhUCTawKHcRTDJAQ7Al6BAgIECQ&biw=1367&bih=695&dpr=2#imgrc=nAZi13UVBnOMtM:
- ↑ "High School Quiz Show Showcases 'Nerd Pride'". alum.mit.edu.
- ↑ 18.0 18.1 "Women to Watch: Dhaya Lakshminarayanan". KQED. July 27, 2016.
- ↑ 19.0 19.1 Smith, Nancy Duvergne. "Dhaya Lakshminarayanan '96, '99, MCP '99". MIT Technology Review.
- ↑ "Special Edition: Dhaya Lakshminarayanan on her most treasured book". SFChronicle.com. March 10, 2017.
- ↑ 21.0 21.1 "Venture capitalist ditches tech investing for stand-up comedy". October 14, 2012.
- ↑ "Eight Women of Color Comedians On Sexism, Racism and Making People Laugh". Wear Your Voice. April 1, 2016. Archived from the original on ஜனவரி 3, 2020. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 7, 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ 23.0 23.1 "Mahatma Moses Comedy Tour Comes to Los Angeles 9/4". PRWeb.
- ↑ 24.0 24.1 "13 San Francisco Standup Comedians to Go See Now". SFist - San Francisco News, Restaurants, Events, & Sports. February 21, 2019. Archived from the original on டிசம்பர் 21, 2019. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 7, 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ 25.0 25.1 "Alumna Gets Laughs In Ashdown Stand-Up". The Tech.