தயோதயோனைல் புளோரைடு

வேதிச் சேர்மம்

தயோதயோனைல் புளோரைடு (Thiothionyl fluoride) என்பது S=SF2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். F−S−S−F என்று அமைப்பு வாய்பாட்டாலும் இதை குறிப்பிடுவர். கந்தகமும் புளோரினும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் இருகந்தக இருபுளோரைடு சேர்மத்தின் சமபகுதியமாகக் கருதப்படுகிறது.

தயோதயோனைல் புளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இருபுளோரோ(சல்ஃபேனிலிடின்)-λ4-சல்பேன்
வேறு பெயர்கள்
கந்தகம்(IV) சல்பைடு இருபுளோரைடு
இனங்காட்டிகள்
16860-99-4 Y
ChemSpider 128238
InChI
  • InChI=1S/F2S2/c1-4(2)3
    Key: KBYVSSUWTLBZTB-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 145375
  • FS(=S)F
பண்புகள்
S=SF2
வாய்ப்பாட்டு எடை 102.12 g·mol−1
தோற்றம் நிறமற்ற வாயு
உருகுநிலை −164.6 °C (−264.3 °F; 108.5 K)
கொதிநிலை −10.6 °C (12.9 °F; 262.5 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

நைட்ரசன் முப்புளோரைடுடன் கந்தகத்தை சேர்த்து வினைபுரியச் செய்தால் தயோதயோனைல் புளோரைடு உருவாகிறது.

NF3 + 3 S → S=SF2 + NSF

இது கார உலோக புளோரைடுகளுடன் தொடர்பு கொள்ளும்போது இருகந்தக இருபுளோரைடிலிருந்து உருவாகிறது.[1]

பொட்டாசியம் புளோரோசல்பைட்டு மற்றும் இருகந்தக இருகுளோரைடு ஆகியவவை வினையில் ஈடுபட்டாலும் தயோதயோனைல் புளோரைடு உருவாகிறது.

2 KSO2F + S2Cl2 → S=SF2 + 2 KCl + 2 SO2[2]

பண்புகள்

தொகு

தயோதயோனைல் புளோரைடு ஒரு நிறமற்ற வாயுவாகும்.[3] உயர் அழுத்தம் மற்றும் வெப்பநிலையில் இது கந்தக டெட்ராபுளோரைடு மற்றும் கந்தகமாக சிதைகிறது.[3]

2 S=SF2 → SF4 + 3 S

ஐதரசன் புளோரைடுடன் தயோதயோனைல் புளோரைடு வினைபுரிந்து கந்தக டெட்ராபுளோரைடும் ஐதரசன் சல்பைடும் உருவாகின்றன.[4]

S=SF2 + 2 HF → SF4 + H2S

தாழ் வெப்பநிலையில் கந்தக இருபுளோரைடுடன் ஒடுக்க வினையில் ஈடுபட்டு 1,3-இருபுளோரோ-முச்சல்பேன்-1,1-இருபுளோரைடாக ஒடுங்குகிறது

S=SF2 + SF2 → FS−S−SF3[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Steudel, Ralf (2008). Chemie der Nichtmetalle: Von Struktur und Bindung zur Anwendung. Walter de Gruyter. p. 475. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-311021128-3.
  2. 张青莲 (1991). 《无机化学丛书》第五卷:氧、硫、硒分族 (in Chinese). Beijing: Science Press. p. 179. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-7-03-002238-7.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. 3.0 3.1 Holleman, A. F.; Wiberg, E.; Wiberg, N. (1995). Lehrbuch der Anorganischen Chemie (101st ed.). Berlin: Walter de Gruyter. pp. 379. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-11-012641-9.
  4. Kolditz, Lothar (1983). Anorganische Chemie. Berlin: Deutscher Verlag der Wissenchaften. p. 468.
  5. Lösking, O.; Willner, H.; Baumgärtel, H.; Jochims, H. W.; Rühl, E. (November 1985). "Chalkogenfluoride in niedrigen Oxydationsstufen. X Thermochemische Daten und Photoionisations-Massenspektren von SSF2, FSSF, SF3SF und SF3SSF". Zeitschrift für anorganische und allgemeine Chemie 530 (11): 169–177. doi:10.1002/zaac.19855301120. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயோதயோனைல்_புளோரைடு&oldid=3937430" இலிருந்து மீள்விக்கப்பட்டது