தயோபாசுபோரைல் புளோரைடு

வேதிச் சேர்மம்

தயோபாசுபோரைல் புளோரைடு (Thiophosphoryl fluoride) என்பது PSF3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கனிம வேதியியல் மூலக்கூற்று வாயுவான இதில் பாசுபரசு, கந்தகம், புளோரின் ஆகிய தனிமங்கள் கலந்துள்ளன. தன்னிச்சையாக காற்றில் பற்றிக்கொண்டு குளிர்ச்சியான சுடருடன் எரிகிறது. கண்டுபிடித்தவர்கள் தங்கள் கைகளைச் சுற்றி அசௌகரியம் இல்லாமல் தீப்பிழம்புகளை வைத்திருந்தனர்.[4] மேலும் அவர்கள் இதை அறியப்பட்ட குளிர்ந்த தீப்பிழம்புகளில் ஒன்று என்று அழைத்தனர்.[4] தயோபாசுபோரைல் புளோரைடு வாயு 1888 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.[4]

Thiophosphoryl fluoride
Skeletal formula of thiophosphoryl fluoride
Space-filling model of the thiophosphoryl fluoride molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
முப்புளோரோ(சல்பேனைலிடின்)-λ5-பாசுபேன்
வேறு பெயர்கள்
  • பாசுபோரோதயோக் முப்புளோரைடு[1]
  • பாசுபோரோதயோயிக் முப்புளோரைடு
  • பாசுபரசு புளொரைடு சல்பைடு
  • பாசுபரசு கந்தகமுப்புளோரைடு
  • பாசுபரசு தயோபுளோரைடு
  • தயோபாசுபோரைல் முப்புளோரைடு
  • முப்புளோரோபாசுபீன் சல்பைடு
  • முப்புளோரோ-λ5-பாசுபேன்தயோன்[2]
இனங்காட்டிகள்
2404-52-6 N
ChemSpider 121246?
InChI
  • InChI=1S/F3PS/c1-4(2,3)5 N
    Key: LHGOOQAICOQNRG-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image

[3]

பப்கெம் 137585
  • FP(F)(F)=S [3]
பண்புகள்
PSF3
வாய்ப்பாட்டு எடை 120.035 கி/மோல்
தோற்றம் நிறமற்ற வாயு அல்லது நீர்மம்
அடர்த்தி 1.56கி/செ.மீ3 நீர்மம் 4.906 கி/லி வாயுவாக[1]
உருகுநிலை −148.8 °C (−235.8 °F; 124.3 K)
கொதிநிலை −52.25 °C (−62.05 °F; 220.90 K)
சிறிதளவு , அதிக வினைத்திறம்
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் காற்றில் தன்னிச்சையாகத் தீப்பற்றும்; நச்சுப்புகை
தீப்பற்றும் வெப்பநிலை மிகக் குறைவு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இரசாயனப் போருக்கு தயோபாசுபோரைல் புளோரைடு பயனற்றதாகும். ஏனெனில் இது உடனடியாக தீப்பற்றி எரிகிறது மற்றும் போதுமான நச்சுத்தன்மையும் இதனிடமில்லை.[5]

தயாரிப்பு

தொகு

தயோபாசுபோரைல் புளோரைடு 1888 ஆம் ஆண்டில் இயே. டபிள்யூ. ரோட்கர் மற்றும் டி. ஈ. தோர்ப் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டு பெயரிடப்பட்டது.[4][6]

ஆர்சனிக் முப்புளோரைடு மற்றும் தயோபாசுபோரைல் குளோரைடு ஆகியவற்றை ஒன்றாக மூடிய கண்ணாடிக் குழாயில் இட்டு 150 பாகை செல்சியசு வெப்பநிலை வரை சூடாக்கி இவர்கள் தயோபாசுபோரைல் புளோரைடைத் தயாரித்தனர். இந்த வினையில் சிலிக்கான் டெட்ராபுளோரைடும் பாசுபரசு புளோரைடுகளும் உற்பத்தி செய்யப்பட்டன. PSCl3 சேர்மத்தின் அளவை அதிகரிப்பதன் மூலம் PSF3 சேர்மத்தின் விகிதமும் அதிகரித்தது. இவ்வினையின் போது அவர்கள் தன்னிச்சையான தீப்பற்றுதலைக் கவனித்தனர். இதனால் தயோபாசுபோரைல் புளோரைடு தயாரிக்க பின்வரும் முறையைப் பயன்படுத்தினர்:

3 PbF2 + P2S5 → 3 PbS + PSF3

இதற்காக 170 பாகை செல்சியசு வெப்பநிலையில், சிவப்பு பாசுபரசு மற்றும் கந்தகத்தின் கலவையை பதிலீடு செய்தும் பிசுமத் முப்புபுளோரைடைப் பயன்படுத்தியும் தயாரித்தனர்.

அசிட்டோ நைட்ரைலில் உள்ள சோடியம் புளோரைடைப் பயன்படுத்தி PSCl3 உடன் புளோரைடைச் சேர்த்து தயோபாசுபோரைல் புளோரைடு தயாரிப்பது மற்றொரு தயாரிப்பு முறையாகும்.[7]

உயர் அழுத்தத்தின் கீழ் பாசுபரசு முப்புளோரைடு ஐதரசன் சல்பைடுடன் வினைபுரிந்து அதிக அளவில் தயோபாசுபோரைல் புளோரைடு வாயுவைக் கொடுக்கிறது.[8]

PF3 + H2S → PSF3 + H2 (200 °செல்சியசு வெப்பநிலையில் 1350 பார் அழுத்தம் )

மற்றொரு உயர் அழுத்த உற்பத்தி முறையில் கந்தகத்துடன் பாசுபரசு முப்புளோரைடு பயன்படுத்தப்படுகிறது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 A likely spelling mistake in Handbook of Chemistry and Physics 87 ed
  2. "FP(F)(F)=S".
  3. "phosphorothioic trifluoride".
  4. 4.0 4.1 4.2 4.3 Thorpe, T. E.; Rodger, J. W. (1889). "XXXIV.?On thiophosphoryl fluoride". Journal of the Chemical Society, Transactions 55: 306–323. doi:10.1039/CT8895500306. https://zenodo.org/record/1754869. 
  5. Banks, Ronald Eric (2000). Fluorine chemistry at the millennium: fascinated by fluorine. Elsevier. p. 502. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-043405-3.
  6. Thorpe, T. E.; Rodger, J. W. (1888). "LX.?Thiophosphoryl fluoride". Journal of the Chemical Society, Transactions 53: 766–767. doi:10.1039/CT8885300766. https://zenodo.org/record/2173570. 
  7. Padma, D. K.; Vijayalakshmi, S. K.; Vasudevamurthy, A. R. (1976). "Investigations on the preparation, oxidation and reduction reactions of thiophosphoryl fluoride". Journal of Fluorine Chemistry 8 (6): 461. doi:10.1016/S0022-1139(00)81660-7. 
  8. 8.0 8.1 Hagen, Arnulf P.; Callaway, Bill W. (1978). "High-pressure reactions of small covalent molecules. 10. The reaction of phosphorus trifluoride with hydrogen sulfide and sulfur dioxide". Inorganic Chemistry 17 (3): 554. doi:10.1021/ic50181a007. 

பிற மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயோபாசுபோரைல்_புளோரைடு&oldid=4052506" இலிருந்து மீள்விக்கப்பட்டது