தயோபாசுபோரைல் குளோரைடு
தயோபாசுபோரைல் குளோரைடு (Thiophosphoryl chloride) என்பது PSCl3.[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமான இச்சேர்மம் கார நெடியைக் கொண்டுள்ளது. ஈரக்காற்றில் புகையும் தன்மையுடையது. பாசுபரசு குளோரைடிலிருந்து தயோபாசுபோரைல் குளோரைடு தயாரிக்கப்படுகிறது. பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கத் தேவைப்படும் தயோபாசுபோரைலேட்டு வகை கரிமச்சேர்மங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது,
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
பாசுபோதையாயிக் டிரைகுளோரைடு
| |||
வேறு பெயர்கள்
தயோபாசுபோரைல் குளோரைடு, பாசுபரசு சல்போகுளோரைடு, பாசுபரசு(V) சல்போகுளோரைடு
| |||
இனங்காட்டிகள் | |||
3982-91-0 | |||
ChemSpider | 18729 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 19883 | ||
| |||
பண்புகள் | |||
Cl3PS | |||
வாய்ப்பாட்டு எடை | 169.4 கி/மோல் | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
அடர்த்தி | 1.67 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | −35 °C (−31 °F; 238 K) | ||
கொதிநிலை | 125 °C (257 °F; 398 K) | ||
வினைபுரியும் | |||
கரைதிறன் | பென்சீன், குளோரோஃபார்ம், கார்பன் டைசல்பைடு [கார்பன் டெட்ராகுளோரைடு | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீவிர நீராற்பகுப்பு | ||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | மக்னீசியம் குளோரைடு MSDS | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தயாரிப்பு
தொகுதயோபாசுபோரைல் குளோரைடை பல்வேறு வகையான வினைகளின் வழியாகத் தயாரிக்க இயலும். பாசுபரசு முக்குளோரைடிலிருந்து தயாரிக்கும் முறையே பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளிலும் பாசுபரசு முக்குளோரைடை நேரடியாக அதிகப்படியான கந்தகத்துடன் சேர்த்து 180 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தி வினை புரியச்செய்து தயாரிக்கிறார்கள்[2]
- PCl3 + S → PSCl3
இம்முறையைப் பயன்படுத்துவதால் அதிக அளவு தயோபாசுபோரைல் குளோரைடு உருவாகிறது. காய்ச்சிவடித்தல் முறையில் இதை தூய்மையாக்கி பயன்படுத்தலாம். [[வினையூக்கி[[கள் மூலம் வினையை நிகழ்த்தினால் குறைந்த வெப்பநிலையில் விளைபொருளை உருவாக்க இயலும் என்றாலும் இது அவசியமாகக் கருதப்படுவதில்லை. பாசுபரசு பெண்டாசல்பைடுடன் பாசுபரசு பெண்டாகுளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் மாற்றுவழி முறையில் இதைத் தயாரிக்கலாம்.[3]
- 3 PCl5 + P2S5 → 5 PSCl3.
வினைகள்
தொகுபென்சீன், கார்பன் டெட்ராகுளோரைடு, குளோரோஃபார்ம், கார்பன் டைசல்பைடு போன்றவற்றில் தயோபாசுபோரைல் குளோரைடு கரையும்[1].இருப்பினும், ஆல்க்கால்கள், அமீன்கள் போன்ற ஐதராக்சில் கொண்ட அல்லது காரக் கரைசல்களுடன் சேர்க்கப்படும் போது விரைவாக நீராற்பகுப்பு அடைந்து தயோபாசுபேட்டுகளை உருவாக்குகிறது[2] PSCl3 தண்ணீருடன் வினைபுரிந்து பாசுபாரிக் அமிலம், ஐதரசன் சல்பைடு அல்லது டைகுளோரோதயோபாசுபாரிக் அமிலம், ஐதரோகுளோரிக் அமிலம் போன்றவற்றைக் கொடுக்கிறது[4]
- PSCl3 + 4 H2O → H3PO4 + H2S + 3 HCl
- PSCl3 + H2O → HOP(S)Cl2 + HCl
தயோபாசுபோரைலேட்டுடன் சேர்க்க PSCl3 பயன்படுகிறது. அல்லது P=S கரிமச் சேர்மங்களுடன் சேர்க்கப் பயனாகிறது.[2]. இத்தகைய மாற்ற வினைகள் பரவலாக அமீன்களுக்கும் ஆல்ககால்களுக்கும் பொருந்திவருகின்றன. இதேபோல அமினோ ஆல்ககால்கள், டையால்கள், டையமீன்கள் போன்ற சேர்மங்களுக்கும் இத்தகைய மாற்ற வினைகள் பொருந்துகின்றன.[1]. தொழிற்சாலைகளில் பாராதயோன் போன்ற பூச்சிக்கொல்லிகள் தயாரிக்க PSCl3 சேர்மத்தைப் பயன்படுத்துகிறார்கள்.[4]
- PSCl3 + 2 C2H5OH → (C2H5O)2PSCl + 2 HCl
- (C2H5O)2PSCl + NaOC6H4NO2 → (C2H5O)2PSOC6H4NO2 + NaCl
மூவிணைய அமைடுகளுடன் PSCl3 வினைபுரிந்து தயோ அமைடுகளை உருவாக்குகிறது.[1]. உதாரணமாக,
- C6H5C(O)N(CH3)2 + PSCl3 → C6H5C(S)N(CH3)2 + POCl3
மெத்தில்மெக்னீசியம் அயோடைடுடன் தயோபாசுபோரைல் குளோரைடு வினைபுரிந்து டெட்ராமெத்தில்டைபாசுபீன் டைசல்பைடு ([Me2P(S)] சேர்மத்தை உருவாக்குகிறது.2.[5],
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Spilling, C. D. "Thiophosphoryl Chloride" in Encyclopedia of Reagents for Organic Synthesis John Wiley & Sons, Weinheim, 2001. எஆசு:10.1002/047084289X.rt104 10.1002/047084289X.rt104. Article Online Posting Date: April 15, 2001.
- ↑ 2.0 2.1 2.2 "Phosphorus Compounds, Inorganic". Ullmann’s Encyclopedia of Industrial Chemistry. (2005). Weinheim: Wiley-VCH. DOI:10.1002/14356007.a19_527. .
- ↑ Martin, D. R.; Duvall, W. M. “Phosphorus(V) Sulfochloride” Inorganic Syntheses, 1953, Volume IV, p73. எஆசு:10.1002/9780470132357.ch24 10.1002/9780470132357.ch24.
- ↑ 4.0 4.1 Fee, D. C.; Gard, D. R.; Yang, C. “Phosphorus Compounds” Kirk-Othmer Encyclopedia of Chemical Technology. John Wiley & Sons: New York, 2005. எஆசு:10.1002/0471238961.16081519060505.a01.pub2 10.1002/0471238961.16081519060505.a01.pub2
- ↑ G. W. Parshall "Tetramethylbiphosphine Disulfide" Org. Synth. 1965, volume 45, p. 102. எஆசு:10.15227/orgsyn.045.0102