தரண் தரண் மாவட்டம்
தரண் தரண் மாவட்டம் (Tarn Taran district) வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் தரண் தரண் சாகிப் ஆகும்.
தரண் தரண்
ਤਰਨ ਤਾਰਨ ਜ਼ਿਲ੍ਹਾ | |
---|---|
மாவட்டம் | |
பஞ்சாபில் அமைவிடம், | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
தலைமையிடம் | தரண் தரண் சாகிப் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,414 km2 (932 sq mi) |
மக்கள்தொகை (2011)‡[›] | |
• மொத்தம் | 11,19,627 |
• அடர்த்தி | 460/km2 (1,200/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | பஞ்சாபி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
எழுத்தறிவு | 67.81 % |
இணையதளம் | tarntaran |
மாவட்ட நிர்வாகம்
தொகுஇம்மாவட்டம் தரண் தரண், பட்டி, காதூர் சாகிப் என மூன்று வருவாய் வட்டங்களையும்; தரண் தரண், பட்டி, காதூர் சாகிப்பு, சோலா சாகிப்பு, பிக்கிவிண்டு, கண்டிவிண்டு மற்றும் வல்தொகா என ஏழு ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது.
அரசியல்
தொகுஇம்மாவட்டம் தரண் தரண், பட்டி மற்றும் கேம்கரண் என மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது.
மக்கள் தொகையியல்
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,119,627 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 87.34% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 12.66% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.23% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 589,369 ஆண்களும் மற்றும் 530,258 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 900 பெண்கள் வீதம் உள்ளனர். 2,414 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 464 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 67.81 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 73.24 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 61.85 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 75,382 ஆக உள்ளது. [1]
சமயம்
தொகுஇம்மாவட்டத்தில் சீக்கிய சமய மக்கள் தொகை 1,044,903 (93.33 %) ஆகவும், இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 60,504 (5.40 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 3,855 (0.34 %) ஆகவும், கிறித்தவ, பௌத்த, சமண சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.
மொழிகள்
தொகுபஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி மொழியான பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.