தராப் ஜகாங்கிர் சூசவல்லா
தராப் ஜகாங்கிர் ஜீசூசவல்லா (Darab Jehangir Jussawala) (1915-1999) இவர் ஓர் இந்திய மருத்துவரும், அறுவை சிகிச்சை நிபுணரும், புற்றுநோயியல் நிபுணரும், மருத்துவ எழுத்தாளரும், டாடா நினைவு மையத்தின் இயக்குநராகவும் இருந்தார். [1] 1951 ஆம் ஆண்டில் நேவல் டாடாவுடன் இணைந்து இந்திய புற்றுநோய் சங்கத்தின் இணை நிறுவனராகவும், [2] 1956 ஆம் ஆண்டில் மும்பையின் பரேலில் உள்ள இந்திய புற்றுநோய் மறுவாழ்வு மையத்தை நிறுவியவராகவும் இருந்தார். இது இந்தியாவின் முதல் மையமாகவும் ஆசியாவில் மிகப்பெரியதாகவும் இருந்தது. [3]
தராப் ஜகாங்கிர் சூசவல்லா | |
---|---|
பிறப்பு | மும்பை, மகாராட்டிரம், இந்தியா | 13 ஏப்ரல் 1915
இறப்பு | 29 சனவரி 1999 இந்தியா | (அகவை 83)
பணி | புற்றுநோயியல் நிபுணர் |
செயற்பாட்டுக் காலம் | 1948–1999 |
அறியப்படுவது | புற்றுநோய் சிகிச்சை |
பெற்றோர் | ஜகாங்கிர் பெசோன்ஜி ஜுசவல்லா செரின்பாய் |
வாழ்க்கைத் துணை | ஜெர்டியூட் தராப் |
விருதுகள் | பத்ம பூசண் தன்வந்திரி விருது இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை கல்சியா நினைவு விருதான ராஜா ரவி ஷெர்சிங் விருது |
சுயசரிதை
தொகுமேற்கு இந்திய மாநிலமான மகாராட்டிராவின் மும்பையில் ஜகாங்கிர் பெசோன்ஜி ஜுசவல்லா , செரின்பாய் ஆகியோருக்கு 1915 ஏப்ரல் 13 ஆம் தேதி இவர் பிறந்தார். 1938 ஆம் ஆண்டில் மும்பை பல்கலைக்கழகத்தில்மருத்துவத்தில் பட்டம் பெற்றார். பின்னர் 1942 இல் அதே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர், இவர் மருத்துவ அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறையில் எடின்பரோவின் பேரரசரின் அறுவைச் சிகிச்சைக் கல்லூரியில் சக ஊழியர் கௌரவத்தையும் பெற்றார் [3] 1948 ஆம் ஆண்டில் டாட்டா நினைவு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். நாட்டின் முதல் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்களில் ஒருவரானார்.[4] இவர் மருத்துவமனையின் இயக்குநராகும் வரை 1973 வரை இந்த நிறுவனத்தில் ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றினார். பின்னர் 1983 வரை புற்றுநோயியல் பேராசிரியராக பணியாற்றினார். 1986 வரை மருத்துவமனையுடன் தனது தொடர்பைத் தொடர்ந்தார். 1986 இல், சீமாட்டி ரத்தன் டாடா மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகவும், மும்பை மருத்துவமனைகளான பிரீச் கேண்டி மருத்துவமனை, ஜாஸ்லோக் மருத்துவமனை ஆகியவற்றில் கௌரவ ஆலோசகராகவும் பணியாற்றினார்.
கௌரவம்
தொகுபேரரசின் மருத்துவ அமைப்பு, தேசிய மருத்துவ அறிவியல் கழகம், இந்திய அறிவியல் கழகம், இந்திய தேசிய அறிவியல் கழகம், அமெரிக்கன் அறுவை சிகிச்சையாளர்கள் கல்லூரி ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட சக ஊழியரான இவர் தன்வந்தரி விருது, போன்ற பல சொற்பொழிவு விருதுகளைப் பெற்றுள்ளார். 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான, பத்ம பூசண் கௌரவத்தை இந்திய அரசு இவருக்கு வழங்கியது. [5]
மேலும் காண்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "Dr. D.J.Jussawalla". Tata Memorial Centre. 2016. பார்க்கப்பட்ட நாள் 27 April 2016.
- ↑ "Profile". Indian Cancer Society. 2016. பார்க்கப்பட்ட நாள் 27 April 2016.
- ↑ 3.0 3.1 "Deceased Fellows". Indian National Science Academy. 2016. Archived from the original on 12 August 2016. பார்க்கப்பட்ட நாள் 27 April 2016.
- ↑ "D. J. Jussawalla – An obituary". Indian Institute of Science. 2016. Archived from the original on 14 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 27 April 2016.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.