தருமபுரி கோட்டை

தருமபுரி கோட்டை என்பது தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், தருமபுரியில் இருந்த ஒரு கோட்டையாகும். இக்கோட்டைக்குள் இருந்ததால் பரவாசுதேவப் பெருமாள், மல்லிகார்சுனர், காமாட்சியம்மன் கோயில்கள் மூன்றும் கோட்டைக் கோயில்கள் என தற்போதும் அழைக்கப்படுகின்றன.

வரலாறு தொகு

தருமபுரியில் இந்தக் கோட்டையை 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இப்பகுதியை ஆண்ட ஜெகதேவிராயர் கட்டியதாகக் கருதப்படுகிறது. 17 ஆம் நூற்றாண்டில் இக்கோட்டை பீசாபூர் சுல்தான்களின் வசம் சென்றது. கி.பி 1652 இல் மைசூர் மன்னர் கண்டீவர நரச உடையாரால் சுல்தான்களிடமிருந்து கோட்டை கைப்பற்றப்பட்டது. அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட[யார்?] இக்கோட்டையை கி.பி.1688 இல் சிக்கதேவ ராச உடையாரால் மீண்டும் மைசூர் வசம் கைப்பற்றப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து மைசூர் உடையார்களின் வசமே இக்கோட்டை இருந்து வந்தது. ஐதர் அலி, திப்பு சுல்தான் காலத்தில் நடந்த போர்களினால் இக்கோட்டை சீரழிந்தது.

தருமபுரியில் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின்போது ஏற்பட்ட பெரும் பஞ்சத்தின்போது பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தை போக்கும்விதமாக அவர்களைக் கொண்டு இடிபாடுகளுடன் காணப்பட்ட இந்தக் கோட்டையை இடித்து தரைமட்டமாக்கி கோட்டை இருந்த சுவடே இல்லாமல் செய்தனர். [1]

மேற்கோள்கள் தொகு

  1. இரா. இராமகிருட்டிணன் (2016). தகடூர் நாட்டுத் திருக்கோயில்கள். சென்னை: நாம் தமிழர் பதிப்பகம். p. 90.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தருமபுரி_கோட்டை&oldid=3659104" இலிருந்து மீள்விக்கப்பட்டது