ஜெகதேவிராயர்

ஜெகதேவிராயர் என்பவர்கள் தமிழ்நாட்டின்தருமபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஆகிய பகுதிகளில் ஜெகதேவி உள்ளிட்ட பாராமகாலில் 12 கோட்டைகள் கட்டி[1] நான்கைந்து தலைமுறையாக (கி.பி.1578 முதல் 1669 வரை) 91 ஆண்டுகள் ஆண்ட மரபினர் ஆவர்.

பாராமகால்தொகு

பாராமகால் என்பது கிருஷ்ணகிரி, தருமபுரி, ஊத்தங்கரை திருப்பத்தூர் ஆகிய வட்டங்களோடு கந்திகுத்தி சமீந்தாரின் பகுதியையும் உள்ளடக்கிய நிலப்பரப்பாகும்.[2]

ஜெகதேவிராயர் வருகைதொகு

ஜெகதேவிராயர் மரபின் முதல்வன் ஐதராபாத்தில் உள்ள நன்னல் சர்கார் என்ற இடத்தில் வாழ்ந்தவனாவான். அப்பகுதியின் நவாப் இவன் மகளின் அழகால் ஈர்கப்பட்டான். இதனால் தன் மகளுக்கு நவாப்பினால் தொல்லை ஏற்படும் என்று கருதி ஜெகதேவிராயன் தன்னோடு 64 குடும்பத்தினரையும் அழைத்துக்கொண்டு பெனுகொண்டாவை அடைந்தான். இவனோடு குடிபெயர்ந்த குடும்பத்தினரின் சந்ததியினர் இன்றும் கிருட்டிணகிரி, மகராசாகடை,திருப்பத்தூர், காவேரிப்பட்டணம், பகுதிகளில் வாழ்ந்துவருகின்றனர்.

பாராமகாலை பரிசாக பெறல்தொகு

ஜெபதேவிராயன் விசய நகர அரசப் பிரதிநிதியாக சந்திரகிரியை ஆண்டுவந்தவனின் உறவினனாவான். சந்திரகிரிமீது படையெடுத்து வந்த பீசாபூர் படைகளுடன் ஜெகதேவிராயன் தீவிரமாக போரிட்டு நாட்டைக்காத்தான். இதன்கு பரிசாக சீரங்கராயர் பாராமகால் என்றழைக்கப்படும் பெரும் நிலப்பரப்பை ஜெகதேவிராயனுக்கு கி.பி.1578இல் பரிசாக அளித்து, தன் மகளையும் மணமுடித்து தந்தார். இதன் பின்னர் ஜெகதேவிராயன் தற்போது அவன் பெயராலே அழைக்கப்படும் ஜெகதேவியில் குடியேறினான்.அவனை தொடர்ந்துவந்த குடும்பத்தினருக்கு காட்டை அழித்து நிறைய நிலங்களை அளித்தான்.

இரண்டாம் ஜெகதேவிராயன்தொகு

ஜெகதேவிராயனுக்குப் பிறகு அவன் மகன் இரண்டாம் ஜெகதேவிராயன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றான். ஏறக்குறைய கி.பி.1589இல் கோல்கொண்டாவின் முகமது குத்ஷா பெனுகொண்டாவின் மீது போர்த் தொடுத்தான். இப்போரில் இப்போரில் இரண்டாம் ஜெகதேவிராயன் வீரப்போர் புரிந்து முற்றுகையை முறியடித்தான். இதற்குப் பரிசாக பெனுகொண்டாவின் ஆட்சியாளனிடமிருந்து சென்னபட்டனம் ஜாகீரை (பெங்களூரின் சிலபகுதிகள், மைசூர், தும்கூர், ஹாசன், கோலார்) பரிசாக பெற்றான். இதன்பிறகு இரண்டாம் ஜெகதேவிராயன் தன் தலைநகரை ஜெகதேவியிலிருந்து இராயக்கோட்டைக்கு மாற்றினான்.

ஜெகதேவிராயர் மரபுவழிதொகு

 1. இராணா பெத்த ஜெகதேவிராயன்
 2. அங்குசராயன்
 3. இம்மிடி ஜெகதேவிராயன்

என மூவர் குறித்து கல்வெட்டுகள் வழியாக அறியமுடிகிறது.

பாராமகால் என்றழைக்கப்படும் 12 கோட்டைகள்[3]தொகு

 1. ஜெகதேவி
 2. நாகமலைத் துர்க்கம்
 3. மல்லப்பாடி துர்க்கம்
 4. மத்தூர்
 5. ககனகிரி
 6. தட்டக்கல் கோட்டை
 7. கிருட்ணகிரிக் கோட்டை
 8. மகராசாகடை
 9. காவேரிப்பட்டணம்
 10. வீரபத்ர துர்க்கம்
 11. போளுதிம்மராயன் துர்க்கம்
 12. இராயக்கோட்டை

மரபின் முடிவுதொகு

இம்மரபின் இறுதி அரசன் கி.பி. 1669இல் பீசாபூர் சுல்தானின் தளபதியான முஸ்தபா கானுடன் போரிட்டு மாண்டான் இத்துடன் இம்மரபு அழிந்தது.[4]

குறிப்புகள்தொகு

 1. http://krishnagiri.nic.in/history.htm
 2. [1]
 3. [2]
 4. F.J.Richards,Madras District Gazetteers,Salem,Vol,1 part 2 pp.166-170

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகதேவிராயர்&oldid=2909912" இருந்து மீள்விக்கப்பட்டது