தர்கான்
தர்கான் (Tarkhan), பண்டைய எகிப்திய நகரம் ஆகும். இது கெய்ரோவிற்கு தெற்கே 50 கிலோ மீட்டர் தொலைவில், நைல் ஆற்றின் மேற்கு கரையில் அமைந்த பண்டைய நகரம் ஆகும். தர்கான் நகரத்தின் 2000 கல்லறைகளை அகழாய்வு செய்த போது கிடைத்த தொல்பொருட்களைக் கொண்டு ஆய்வு செய்ததில், அவைகள் கிமு 3150 முதல் கிமு 2690 முடிய பண்டைய எகிப்தை ஆண்ட துவக்க கால அரச மரபுகளுக்குரியது எனக்கண்டறியப்பட்டது. தர்கான் நகர அகழாய்வில் மன்னர் நார்மெர் பெயர் பொறித்த முத்திரை மற்றும் தர்கான் ஆடை கண்டறியப்பட்டது. மேலும் எகிப்தின் முதல் வம்ச மன்னர்களின் நித்திய வீடுகள் கண்டறியப்பட்டது.
தர்கான் நகரத்தின் கல்லறை எண் 1060ல் பல அறைகள் கொண்ட மிகப்பெரிய நித்திய வீடு கண்டறியப்பட்டது.
படக்காட்சிகள்
தொகு-
தர்கான் நகர கல்லறை எண் 99ல் கிடைத்த ஜாடிகள் மற்றும் தங்க அணிகலன்
-
தர்கான் நகர அகழாய்வில் கிடைத்த ஜாடி
இதனையும் காண்க
தொகுஆதாரங்கள்
தொகு- Wolfram Grajetzki: "The architecture and the signification of the Tarkhan mastabas" In: Archeo-Nil 18 (2008), p. 103-112
- W. Grajetzki, Tarkhan, In: J. Picton, I. Pridden (editors): Unseen Images, Archive Photographs in the Petrie Museum, Volume I: Gurob, Sedment and Tarkhan, London 2008, p. 185-237 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-906137-04-5
- W M. Flinders Petrie, G.A. Wainwright, B.A., A.H. Gardiner, D. Litt.: Tarkhan I and Memphis V, London 1913
- W.M. Flinders Petrie: Tarkhan II, London 1914
- W.M. Flinders Petrie: Heliopolis, Kafr Ammar and Shurafa, London 1915
வெளிப் படிமங்கள் | |
---|---|
2008 photo |