தலாங் சதாங் தேசியப் பூங்கா

தலாங் சதாங் தேசியப் பூங்கா (Talang Satang National Park) என்பது மலேசியாவின் சரவாக்கில் உள்ள கூச்சிங் கோட்டத்தில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்காவாகும். [1] சரவாக்கின் முதல் கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதியான இப்பூங்கா புலாவ் தலாங்-தலாங் பெசார், புலாவ் தலாங்-தலாங் கெசில், புலாவ் சதாங் பெசார் மற்றும் புலாவ் சதாங் கெசில் ஆகிய நான்கு தீவுகளையும் சுற்றிலும் பவளப்பாறைகளையும் உள்ளடக்கியதாகும்.

தலாங் சதாங் தேசியப் பூங்கா
Talang Satang National Park
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Borneo" does not exist.
அமைவிடம்சரவாக், மலேசியா
அருகாமை நகரம்கூச்சிங்
பரப்பளவு206.6 km2 (79.8 sq mi)
நிறுவப்பட்டது1999

கடல் ஆமைகளைப் பாதுகாப்பதற்காக தலாங் சதாங் தேசியப் பூங்கா நிறுவப்பட்டது; பச்சை ஆமைகள் மற்றும் அழுங்காமைகள் உட்பட நான்கு வகையான கடல் ஆமைகள் இப்பூங்காவில் கூடு கட்டுவதாக அறியப்படுகிறது.

ஆமைகள் ஆண்டு முழுவதும் கரைக்கு வந்தாலும், முக்கிய கூடு கட்டும் காலம் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மட்டுமேயாகும். [2]

தலாங் சதாங் தேசியப் பூங்கா இயற்கை சுற்றுலாவிற்காகத் திறக்கப்பட்டுள்ளது, இருப்பினும் அதன் முதன்மை நோக்கம் இயற்கை பாதுகாப்பு ஆகும். பார்வையாளர்கள் ஈடுபடக்கூடிய செயல்பாடுகள் பாதுகாப்பு பகுதிக்கு வெளியே மட்டுமே நிகழ்கின்றன. [3]

மேற்கோள்கள் தொகு

  1. "Talang-Satang National Park". Sarawak Tourism Board. Archived from the original on 2021-05-01. பார்க்கப்பட்ட நாள் 2019-05-17.
  2. "Talang Talang Islands - Sarawak's most important turtle sanctuary". Borneo Adventure (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-11.
  3. "Talang Satang National Park | Sarawak Forestry Corporation". sarawakforestry.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-11.

புற இணைப்புகள் தொகு