தலைப்பாகை
தலைப்பாகை (Turban) என்பது ஆண்கள் தலையில் அணிந்திருக்கும் தொப்பியைச் சுற்றியோ அல்லது நேரடியாக தலையைச் சுற்றியோ மூடப்பட்டிருக்கும் நீண்ட தலைக்கவசத்தைக் குறிக்கும்.[1] வயலிலோ அல்லது களத்திலோ வேலை செய்யும் போது ஆண்கள் தோளில் கிடக்கும் துணியை தலைப்பாகையாகத் தலையில் சுற்றிக் கொள்வர். இது வேலையின் தீவிரத்தைக் காட்டும் குறியீடாகவும் அமையும். ‘வரிந்து கொண்டு பணியாற்றுதல்‘ என்ற சொல்வழக்கை இது ஞாபகப்படுத்தும்.
தலைப்பாகை, பல மாறுபாடுகளுடன் பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்தவர்களால் வழக்கமான தலைக்கவசமாக அணியப்படுகிறது.[2] இந்திய துணைக்கண்டம்,[3], தென்கிழக்காசியா, மத்திய கிழக்கு, பால்கன் குடா,காக்கேசியா, நடு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, கிழக்கு ஆபிரிக்கா, உருசியாவிலுள்ள சில துருக்கிய மக்கள் குழுக்களில் தலைப்பாகை அணியும் பாரம்பரியம் கொண்ட பல சமூகங்கள் உண்டு.
சீக்கிய இனத்தவர்கள், நாயக்கர்கள் அடையாளமாக எப்போதும் தலையில் தலைப்பாகை அணிந்து கொள்வர். இதை அவர்கள் தங்களின் பண்பாட்டின் அடையாளமாகக் கருதுகின்றனர். தலைப்பாகை அணிவதை பொதுவாக சீக்கிய ஆண்களும் (எப்போதாவது பெண்களும்) வழமையாகக் கொண்டுள்ளனர்.[4]
தலைப்பாகை அணிவதை முண்டாசு கட்டுதல் என்றும் குறிப்பிடப்படுகிறது. பாரதியாரைக் குறிப்பிடும் போது முண்டாசு கவிஞன் என்று குறிப்பிடும் வழக்கமும் உண்டு.[5] பொதுவாகப் பெரியவர்கள் முன்பு மரியாதை கருதி இளையவர்கள் தலையில் துண்டினை அணியமாட்டார்கள். மேலும் தலையில் துண்டு கட்டுதலைப் பரிவட்டம் கட்டுதல் என்றும் அழைக்கப்படுகிறது. பரிவட்டம் கட்டுதல் ஒருவருக்கு கொடுக்கப்படும் மரியாதை அல்லது கௌரவத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தலைப்பாகை தந்த தனித்தன்மை". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 2024-07-13.
- ↑ "Turbans Facts, information, pictures | Encyclopedia.com articles about Turbans". encyclopedia.com. பார்க்கப்பட்ட நாள் 19 April 2016.
- ↑ Kanti Ghosh, Sumit (2023-05-18). "Body, Dress, and Symbolic Capital: Multifaceted Presentation of PUGREE in Colonial Governance of British India". Textile: 1–32. doi:10.1080/14759756.2023.2208502. https://www.tandfonline.com/doi/full/10.1080/14759756.2023.2208502.
- ↑ "Do Sikh women have to wear a Turban (Dastaar) as well as men?". Sikh Answers. Archived from the original on 25 December 2018. பார்க்கப்பட்ட நாள் 19 April 2016.
- ↑ https://newcastletamilacademy.uk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/