தாக்கூர் ராம் லால்

தாக்கூர் ராம் லால் (Thakur Ram Lal)(7 சூலை 1929 – 6 சூலை 2002) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவர் ஆவார்.

தாக்கூர் ராம் லால்
12வது ஆளுநர் ஆந்திரப் பிரதேசம் (1956–2014)
பதவியில்
15 ஆகத்து 1983 – 29 ஆகத்து 1984
முன்னையவர்கே. சி. ஆபிரகாம்
பின்னவர்சங்கர் தயாள் சர்மா
2வது இமாச்சலப் பிரதேச முதலமைச்சர்
பதவியில்
14 பிபரவரி 1980 – 7 ஏப்ரல் 1983
முன்னையவர்சாந்தகுமார்
பின்னவர்வீரபத்ர சிங்
பதவியில்
28 சனவரி 1977 – 30 ஏப்ரல் 1977
முன்னையவர்யஷ்வந்த் சிங் பர்மார்
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 சூலை 1929
சிம்லா, பஞ்சாப், இந்தியா
இறப்பு6 சூலை 2002(2002-07-06) (அகவை 72)
சிம்லா, இமாச்சலப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்சிம்லா
வேலைPolitician

சட்டமன்ற உறுப்பினராக தொகு

லால் 1957-ல் ஜுப்பல் கோட்காய் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1962, 1967, 1977, 1980 மற்றும் 1982 ஆகிய ஆண்டுகளில் இதே தொகுதியிலிருந்து இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகவும் இருந்தார்.[1] மேலும், மாநில அரசின் தலைமைக் கொறடாவாகவும் இருந்தார்.[2]

முதல்வராக தொகு

இவர் 28 சனவரி 1977-ல் இமாச்சலப் பிரதேசத்தின் இரண்டாவது முதலமைச்சரானார். இதனைத் தொடர்ந்து 30 ஏப்ரல் 1977 வரை பதவியிலிருந்தார். 1977 சூன் 29 முதல் 1980 பிப்ரவரி 13 வரை இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். பின்னர் லால் மீண்டும் 14 பிப்ரவரி 1980 அன்று மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று 7 ஏப்ரல் 1983 வரை பதவியிலிருந்தார்.[1]

ஆளுநராக தொகு

1983 ஆகத்து 15 முதல் 29 ஆகத்து 1984 வரை ஆந்திரப் பிரதேச ஆளுநராகப் பணியாற்றினார். ஆந்திரப் பிரதேசத்தின் நிதியமைச்சர் என்.பாசுகர் ராவை முதலமைச்சராக நியமித்ததால், இவருக்கு கெட்டப் பெயரானது. என். டி. ராமராவ் அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்தபோது பாசுகர ராவுக்கு 20% சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இல்லாதபோதும், அப்போதைய காங்கிரசு தலைமையின் உத்தரவின் பேரில் இந்த மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. என். டி. ராமராவ் ஒரு வாரத்திற்குப் பிறகு ஆந்திராவின் தலைநகருக்குத் திரும்பினார். ஆனால் ராம் லால் முதல்வர் நியமனத்தில் பிடிவாதமாக இருந்தார்.[3] பின்னர் ராமராவ், லால் மற்றும் காங்கிரசுக்கு எதிராக பெரும் பிரச்சாரத்தைத் தொடங்கினார். 30 நாட்களுக்குப் பிறகு, இந்தியக் குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் ராம் லாலை பதவி நீக்கம் செய்தார். இதன் பின்னர் 3 நாட்களுக்குப் பிறகு என். டி. ராமராவ் மீண்டும் ஆந்திராவின் முதல்வரானார்.

அரசியல் வாழ்க்கை தொகு

1957 முதல் ஜுப்பல் கோட்காய் தொகுதியிலிருந்து 9 முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமை ராம் லால் பெற்றுள்ளார்.[4] 1977-ம் ஆண்டு காங்கிரசு எதிர்ப்பு அலை மிக அதிகமாக இருந்த காலகட்டத்திலும், மொத்த வாக்குகளில் 60.2 சதவீதத்தைப் பெற்று மாநில சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1983ஆம் ஆண்டு இவர் முதல்வர் பதவியிலிருந்து விலகிய பின்னர் முன்னாள் மத்திய இணை அமைச்சரான வீரபத்திர சிங் பதவியேற்றார்.[5] 1048 நாட்கள் முதலமைச்சராகப் பதவி வகித்தார்.

பின்னணி தொகு

தாக்கூர் ராம் லால் நான்கு மகள்கள், ஒரு பேரன் மற்றும் ஒரு பேத்தியும் இருந்தனர்.[4] இவரது பேரன் ரோஹித் தாக்கூர் ஜுப்பல்-கோட்காய் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

இறப்பு தொகு

லால் 6 சூலை 2002 அன்று பாரிய மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சிம்லாவில் இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Chawla, Prabhu (October 21, 1983). "Thakur Ram Lal resigns as Himachal Pradesh CM to pave the way for Virbhadra Singh" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-17.
  2. "HP ex-CM Thakur Ramlal dead". 8 July 2002. http://timesofindia.indiatimes.com/city/chandigarh/HP-ex-CM-Thakur-Ramlal-dead/articleshow/15301588.cms. 
  3. Chawla, Prabhu (July 18, 1983). "Timber smuggling case haunts former Himachal Pradesh CM Thakur Ram Lal" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-17.
  4. 4.0 4.1 "HP ex-CM Thakur Ramlal dead | Chandigarh News - Times of India" (in en). The Times of India. 8 July 2002. https://timesofindia.indiatimes.com/city/chandigarh/hp-ex-cm-thakur-ramlal-dead/articleshow/15301588.cms. 
  5. "Thakur Ram Lal resigns as Himachal Pradesh CM to pave the way for Virbhadra Singh" (in en). India Today. 30 October 1983. https://www.indiatoday.in/magazine/indiascope/story/19830430-thakur-ram-lal-resigns-as-himachal-pradesh-cm-to-pave-the-way-for-virbhadra-singh-771329-2013-10-21. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாக்கூர்_ராம்_லால்&oldid=3847712" இலிருந்து மீள்விக்கப்பட்டது