தாங்க் மாவட்டம்

தாங்க் மாவட்டம் (Tank District) (பஷ்தூ: ټانک ولسوالۍ, உருது: ضلع ٹانک‎, பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தாங்க் நகரம் ஆகும். கைபர் பக்துன்வா மாகாணத்தின் தெற்கில் அமைந்த இம்மாவட்டம் 1 தாலுகாவும், 16 ஒன்றியக் குழுக்களும் கொண்டது.

தாங்க் மாவட்டம்
ضلع ٹانک
மாவட்டம்
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் தாங்க் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் தாங்க் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
நாடு பாக்கித்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
தலைமையிடம்தாங்க் நகரம்
அரசு
 • வகைமாவட்ட நிர்வாகம்
பரப்பளவு
 • மொத்தம்2,900 km2 (1,100 sq mi)
மக்கள்தொகை
 (2017)[1]
 • மொத்தம்4,27,044
 • அடர்த்தி150/km2 (380/sq mi)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
தாலுகா1
ஒன்றியக் குழுக்கள்16
இணையதளம்tank.kp.gov.pk

அமைவிடம்

தொகு

தாங்க் மாவட்டத்தின் வடகிழக்கில் லக்கி மார்வாத் மாவட்டம், கிழக்கிலும், தென்கிழக்கிலும் தேரா இஸ்மாயில் கான் மாவட்டம், மேற்கில் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.


தட்ப வெப்பம்

தொகு

கோடக்காலத்தில் இதன் வெப்பம் 110–120 °F ஆக இருக்கும்.

மாவட்ட நிர்வாகம்

தொகு

இம்மாவட்டம் ஒரு தாலுகாவும், 16 ஒன்றியக் குழுக்களையும் கொண்டது.[2] [3]கைபர் மாகாணச் சட்டமன்றத்திற்கு இம்மாவட்டம் ஒரு சட்டமன்றத் தொகுதியை கொண்டுள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 4,27,044 ஆகும். அதில் ஆண்கள் 218,883 மற்றும் பெண்கள் 208,131 உள்ளனர். எழுத்தறிவு 40.98% கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் மதச்சிறுபான்மையோர் 503 பேர் மட்டுமே உள்ளனர்.[1]இம்மாவட்ட மக்களில் பஷ்தூ மொழி 81.87%, சராய்கி மொழி 16.05, இண்டிக்கோ மொழி 0.75% பேசுகின்றனர்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
  2. "LIST OF TEHSILS/TALUKAS WITH RESPECT TO THEIR DISTRICTS – Government of Pakistan". Archived from the original on 2010-03-05. பார்க்கப்பட்ட நாள் 2022-11-28.
  3. Constituencies and MPAs – Website of the Provincial Assembly of the NWFP பரணிடப்பட்டது 2008-03-27 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாங்க்_மாவட்டம்&oldid=4110730" இலிருந்து மீள்விக்கப்பட்டது