தாட்சிகி
தாட்சிகி (Tzatziki அல்லது cacık) என்பது பசியூக்கி வகைகளில் ஒன்றாகும். இவ்வுணவு நடுநிலக் கடல், மத்திய கிழக்கு நாடுகளில் அதிகம் உண்ணப்படுகிறது. இது இன் தயிரும், பொடியாக நறுக்கப்பட்ட வெள்ளரி அல்லது பிற தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கறியையும் கலந்து தயாரிக்கப்படுகிறது. மசாலாப் பொருள் கலந்து செய்யப்பட்ட, நடுநிலக் கடல் இறைச்சி உணவுகளுடன், இதனை சேர்த்து உண்ணும் வழக்கம் உள்ளது.
வகை | Dip |
---|---|
பரிமாறப்படும் வெப்பநிலை | பசியூக்கி |
தொடங்கிய இடம் | உதுமானியப் பேரரசு |
முக்கிய சேர்பொருட்கள் | இன் தயிர், வெள்ளரிs, வெள்ளைப்பூண்டு, இடலை எண்ணெய், உப்பு, சில நேரங்களில் எலுமிச்சை சாறு, சதகுப்பி, புதினா அல்லது வோக்கோசு |
இயற்கையான முறையில் செம்மறியாடு அல்லது ஆட்டின் பாலால் இன் தயிர் தயாரிக்கப்படுகிறது. பின்பு, அதனுடன் வெள்ளரி, வெள்ளைப்பூண்டு, உப்பு, இடலை எண்ணெய், சில நேரங்களில் எலுமிச்சைச்சாறு, சதகுப்பி, புதினா, அல்லது வோக்கோசு கலக்கப்பட்டு, பெரும்பாலும் குளிர்ச்சியாகப் பரிமாறப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Classic Greek Tzatziki Sauce". Archived from the original on 2015-01-03. பார்க்கப்பட்ட நாள் 2015-05-28.