தாண்டலம்(IV) அயோடைடு

வேதிச் சேர்மம்

தாண்டலம்(IV) அயோடைடு (Tantalum(IV) iodide) என்பது TaI4 என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தண்ணீரில் கரைந்து ஒரு பச்சை நிறக் கரைசலை கொடுக்கிறது, ஆனால் காற்றில் விடப்பட்டால் இதன் நிறம் மங்குகிறது. வெள்ளை நிறத்தில் வீழ்படிவாகிறது.[2]

தாண்டலம்(IV) அயோடைடு
இனங்காட்டிகள்
14693-80-2 Y
InChI
  • InChI=1S/4HI.Ta/h4*1H;/q;;;;+4/p-4
    Key: YGGDPBCUKJOEGM-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [I-].[I-].[I-].[I-].[Ta+4]
பண்புகள்
TaI4
வாய்ப்பாட்டு எடை 688.57
தோற்றம் கருப்பு நிற திண்மம்[1]
உருகுநிலை 398 °C (671 K) (சிதைவடையும்)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

தாண்டலம்(V) அயோடைடுடன் தாண்டலம் தனிமத்தைச் சேர்த்து குறைப்பு வினையின் மூலம் தாண்டலம்(IV) அயோடைடை தயாரிக்கலாம். ஒருவேளை பிரிடீனை குறைக்கும் முகவராகப் பயன்படுத்தினால் TaI4(py)2 என்ற கூட்டுசேர் பொருள் கிடைக்கும்.[3]

தாண்டலம்(V) அயோடைடுடன் அலுமினியம், மக்னீசியம் அல்லது கால்சியத்துடன் சேர்த்து 380 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தாலும் தாண்டலம்(IV) அயோடைடைத் தயாரிக்கலாம். உடன் Ta6I14 சேர்மமும் சேர்ந்து உருவாகிறது. எனவே மிகவும் தூய்மையான தாண்டலம்(IV) அயோடைடு படிகத்தை உற்பத்தி செய்வது கடினமாகிறது.[4]

3TaI5 + Al -> 3TaI4 + AlI3

பண்புகள் தொகு

தாண்டலம்(IV) அயோடைடு ஒரு கருப்பு நிறத் திடப்பொருளாகும். நையோபியம்(IV) அயோடைடை ஒத்த ஒரு படிக அமைப்பைக் கொண்டுள்ளது.[4] ஒற்றை-படிக தாண்டலம்(IV) அயோடைடு முதன்முதலில் 2008 ஆம் ஆண்டில் இரஃபல் விக்லசு மற்றும் கெர்ட் மேயர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. Rb(Pr6C2)I12 என்ற வேதிப் பொருளை தயாரிக்கும்போது உருக்குக்கலனில் இது பெறப்பட்டது.[5] ஒற்றைப் படிகமானது ஓர் அலகு செல்லுக்கு இரண்டு வாய்பாட்டு அலகுகள் (a = 707.36 பைக்கோமீட்டர், b = 1064.64 பைக்கோமீட்டர், c = 1074.99 பைக்கோமீட்டர், α = 100.440°, β = 89 γ = 104.392°) என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் P1 ( எண். 2) என்ற இடக்குழுவுடன் முச்சரிவச்சு படிக அமைப்பைக் கொண்டுள்ளது. படிக அமைப்பு மற்ற இடை உலோக டெட்ரா அயோடைடுகளிலிருந்து வேறுபடுகிறது. இது பொதுவாக MI4/2I2/1 சங்கிலி அமைப்பைக் கொண்டுள்ளது. ஏனெனில் இது இருபடியை உருவாக்க ஒரு பொதுவான மேற்பரப்பில் இணைக்கப்பட்ட TaI6 எண்முகத்தைக் கொண்டுள்ளது. இது போன்ற இரண்டு இருபடிகள் ஒரு பொதுவான விளிம்பில் ஒரு நாற்படியை உருவாக்குகின்றன.[6]

மேற்கோள்கள் தொகு

  1. Georg Brauer: Handbuch der präparativen anorganischen Chemie. 3., umgearb. Auflage. Band III. Enke, Stuttgart 1981, ISBN 3-432-87823-0, pp. 1455.
  2. Robert F. Rolsten (Jun 1958). "Preparation and X-ray Study of Some Tantalum Halides" (in en). Journal of the American Chemical Society 80 (12): 2952–2953. doi:10.1021/ja01545a011. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01545a011. பார்த்த நாள்: 2021-03-24. 
  3. R. E. McCarley, J. C. Boatman (Jun 1963). "The Preparation of Tantalum(IV) Bromide, Tantalum(IV) Iodide, and Pyridine Adducts of the Tantalum(IV) Halides" (in en). Inorganic Chemistry 2 (3): 547–551. doi:10.1021/ic50007a030. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic50007a030. பார்த்த நாள்: 2021-03-24. 
  4. 4.0 4.1 Handbuch der präparativen anorganischen Chemie. 3 (3., umgearb. Aufl ed.). Stuttgart: Enke. 1981. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-432-87823-2.
  5. Meyer, Gerd; Wiglusz, Rafal; Pantenburg, Ingo; Mudring, Anja-Verena (May 2008). "Tantalum(IV) Iodide, TaI4: A Molecular Solid Consisting of Dimers of Dimers, Ta4I16" (in de). Zeitschrift für anorganische und allgemeine Chemie 634 (5): 825–828. doi:10.1002/zaac.200700529. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.200700529. 
  6. Habermehl, Katja (2010). Neue Untersuchungen an Halogeniden des Niobs und Tantals (text.thesis.doctoral thesis). Universität zu Köln.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாண்டலம்(IV)_அயோடைடு&oldid=3919366" இலிருந்து மீள்விக்கப்பட்டது