நையோபியம்(IV) அயோடைடு

வேதிச் சேர்மம்

நையோபியம்(IV) அயோடைடு (Niobium(IV) iodide) NbI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நையோபியம் தனிமத்தின் அயோடைடு உப்பாக இது கருதப்படுகிறது.

நையோபியம்(IV) அயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
நையோபியம் நான்கையோடைடு
இனங்காட்டிகள்
13870-21-8
InChI
  • InChI=1S/4HI.Nb/h4*1H;/q;;;;+4/p-4
    Key: RRKNUGROPHXWKT-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
  • [I-].[I-].[I-].[I-].[Nb+4]
பண்புகள்
I4Nb
வாய்ப்பாட்டு எடை 600.52 g·mol−1
தோற்றம் சாம்பல் நிற திண்மம்[1]
அடர்த்தி 5.6 கி·செ.மீ−3[1]
உருகுநிலை 503 °செல்சியசு[1]
வினைபுரியும்[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் NbF4, நையோபியம்(IV) குளோரைடு, நையோபியம்(IV) புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் டாண்ட்டலம்(IV) அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு தொகு

நையோபியம் ஐந்தயோடைடு வெற்றிடத்தில் 206-270 செல்சியசு வெப்பநிலையில் சிதவுக்கு உட்படுத்தப்பட்டு நையோபியம்(IV) அயோடைடு தயாரிக்கப்படுகிறது.[2]

பண்புகள் தொகு

சாம்பல் நிறத்தில் திண்மமாகக் காணப்படும் நையோபியம்(IV) அயோடைடு தண்ணீருடன் வினையில் ஈடுபடுகிறது.[1]

Cmc21 (எண். 36) என்ற இடக்குழுவில் நேர்சாய்சதுரக் கட்டமைப்பில் நையோபியம்(IV) அயோடைடு படிகமாகிறது.[3] இப்படிகமானது விளிம்புகளால் இணைக்கப்பட்ட NbI6 எண்முகியால் உருவாகிறது மற்றும் Nb-Nb பிணைப்புகளையும் கொண்டுள்ளது. 348 முதல் 417 பாகை செல்சியசு வெப்பநிலையில் நையோபியம்(IV) அயோடைடின் படிக அமைப்பு மாற்றமடைகிறது.[4] நையோபியம்(IV) அயோடைடு மிக அதிகமான அழுத்தத்தின் கீழ் ஓர் உலோகமாக மாறுகிறது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Haynes, William M.; Lide, David R.; Bruno, Thomas J. (2017). CRC handbook of chemistry and physics : a ready-reference book of chemical and physical data. Boca Raton, Florida. p. 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4987-5429-3. இணையக் கணினி நூலக மைய எண் 957751024.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  2. Perry, Dale L. (2011). Handbook of Inorganic Compounds. Boca Raton, FL. p. 298. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-1462-8. இணையக் கணினி நூலக மைய எண் 759865801.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  3. Dahl, L. F.; Wampler, D. L. (1962-09-01). "The crystal structure of α-niobium tetraiodide". Acta Crystallographica (International Union of Crystallography (IUCr)) 15 (9): 903–911. doi:10.1107/s0365110x62002340. பன்னாட்டுத் தர தொடர் எண்:0365-110X. 
  4. Gutmann, Viktor (1967). Halogen chemistry. Volume 3 (in டச்சு). London: Academic Press. p. 170. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-14847-4. இணையக் கணினி நூலக மைய எண் 846981003.
  5. Kawamura, H.; Matsui, N.; Nakahata, I.; Kobayashi, M.; Akahama, Y.; Shirotani, I. (1998). "Structural studies of NbI4 at high pressures". Solid State Communications (Elsevier BV) 108 (12): 919–921. doi:10.1016/s0038-1098(98)00483-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0038-1098. https://archive.org/details/sim_solid-state-communications_1998_108_12/page/919. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நையோபியம்(IV)_அயோடைடு&oldid=3775332" இலிருந்து மீள்விக்கப்பட்டது