தானே புயல்
தானே புயல் (Cyclone Thane) என்பது 2011 ஆண்டில் வங்கக் கடலில் உருவான இரண்டாவதும், முதலாவது அதி தீவிரப் புயலும் ஆகும். இது கடலின் கிழக்கு மற்றும் தென்கிழக்கே மையம் கொண்டிருந்தது[2]. வங்கக் கடலில் தென் கிழக்குத் திசையில் 2011 திசம்பர் 25 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது மெல்ல மெல்ல வலுவடைந்து 2011 திசம்பர் 27ம் தேதி புயலாக மாறியது. இந்த புயலுக்கு 'தானே' என்று பெயரிடப்பட்டது.[3][4]
மிகவும் கடுமையான சுழல் புயல் (இ.வா.து. அளவு) | |
---|---|
Category 1 (சபிர்-சிம்ப்சன் அளவு) | |
திசம்பர் 29 இல் தானே புயல் | |
தொடக்கம் | திசம்பர் 25, 2011 |
மறைவு | திசம்பர் 31, 2011 |
உயர் காற்று | 3-நிமிட நீடிப்பு: 140 கிமீ/ம (85 mph) 1-நிமிட நீடிப்பு: 150 கிமீ/ம (90 mph) |
தாழ் அமுக்கம் | 976 hPa (பார்); 28.82 inHg |
இறப்புகள் | 33[1] |
பாதிப்புப் பகுதிகள் | கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் |
2011 வங்கக் கடல் சூறாவளிப் பருவம்-இன் ஒரு பகுதி |
68.819 கடல் மைல் தூரத்தில் மையம் கொண்டிருந்த, "தானே' புயல், 2011 திசம்பர் 30 இல் சென்னை-நாகை இடையே புதுச்சேரி அருகில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.[5] அப்போது தமிழக கடலோரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.[3] காற்றின் வேகம் அதிகபட்சமாக 90 முதல் 135 கிமீ வேகமாக கணக்கிடப்பட்டது. அதனால் அது கடுமையான புயல் என்று அளவிடப்பட்டது. 30 ஆம் தேதி வலிமை குறைந்து காற்றின் வேகம் 90 முதல் 110 கிமீ வேகம் இருக்குமென அறிவிக்கப்பட்டது.
புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையே டிசம்பர் 30, 2011 அன்று காலை 6.30 முதல் 7.30 மணிக்கு இடையே கரையைக் கடந்தது.[6]
நாகையில் விடுமுறை
தொகுபுயல் நாகையைத் தாக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.[7]
பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை காவல்துறை தயார் நிலையில் வைக்கப்பட்டது. மீட்புக் குழுக்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டன. தற்காலிக முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
கரையைக் கடந்த புயல்
தொகுபுதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையே டிசம்பர் 30, 2011 அன்று காலை 6.30 மணியளவில் கரையைக் கடந்தது.[6] அப்போது மணிக்கு 125 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால், புதுச்சேரியில் பலத்த சேதம் ஏற்பட்டது. மேலும் கடலூர் பகுதியிலும் பலத்த சேதம் ஏற்பட்டது. புயல் கரையைக் கடந்த போதிலும், பலத்த மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
நிவாரணப் பணிகளுக்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு
தொகுபுயல் காரணமாக தமிழகத்தில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் உடனடி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளவும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கவும் 150 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.[4]
உயிரிழப்புகள்
தொகுபுயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 39 பேரும், புதுச்சேரியில் ஏழு பேரும், சென்னையில் இரண்டு பேரும் என உயிரிழப்புகள் ஏற்பட்டன.[8]
புயல்களின் பெயர்
தொகுஅரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மியான்மர், ஒமன், மலேசியா ஆகிய நாடுகள் இணைந்து ஜெனிவாவில் உள்ள உலக வானிலை மையத்தில் பெயர்களை வழங்குவது வழக்கம். கடைசியாக பாகிஸ்தான் வழங்கிய நீலம் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது. அடுத்ததாக வீசப் போகும் புயலுக்கு மகேசன் என்று பெயரிடப்படவிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் 2013 ஏப்ரல் 29 ஆம் திகதி அறிவித்தார்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Cyclone Thane crosses east coast; 33 killed in Tamil Nadu, Puducherry". Chennai, India: Times of India. December 30, 2011. பார்க்கப்பட்ட நாள் December 30, 2011.
- ↑ 'அதி தீவிர' தானே புயல் எச்சரிக்கை
- ↑ 3.0 3.1 புயல் சென்னை - நாகை இடையே நாளை கரை கடக்கும் ![தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 4.0 4.1 புயல் பாதிப்பு: நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ. 150 கோடி ஒதுக்கீடு[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "தானே' புயல்,
- ↑ 6.0 6.1 புதுவை அருகே புயல் கரையைக் கடந்தது[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ சென்னை, புதுவையை வேகமாக நெருங்கும் தானே புயல்-நாளை கரையைக் கடக்கிறது!,
- ↑ புயல்: குறைந்தபட்சம் 18 பேர் பலி
- ↑ புயல்களின் பெயர்கள்