தான்யர்
தான்யர் ( Danyor ) (தான்யோர் எனவும் அழைக்கப்படுகிறது) என்பது கில்கித் மாவட்டத்தில் கில்கிட்-பால்டிஸ்தானின் தலைநகரின் புறநகரில் [1] கில்கித் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது பசுமையான வயல்களுக்கும், பாப்லர் மரங்களுக்கும் பெயர் பெற்றது. உலகின் மிக உயரமான நடைபாதை சாலை காரகோரம் நெடுஞ்சாலை இதன் நிலப்பரப்பு வழியாக செல்கிறது.
தான்யர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 35°55′10″N 74°23′20″E / 35.91944°N 74.38889°E | |
நாடு | பாக்கித்தான் |
சுயாட்சி மாநிலம் | வடக்கு நிலங்கள் |
மாவட்டம் | கில்கித் |
ஏற்றம் | 2,000 m (7,000 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 25,000 |
இனங்கள் | பகோரா, ஹன்சா மக்கள் |
நேர வலயம் | ஒசநே+5:30 (பாக்கித்தான் சீர்நேரம்) |
• கோடை (பசேநே) | +5 |
தொலைபேசிக் குறியீடு | 15110 |
முக்கிய இடங்கள்
தொகுதான்யர் சுரங்கப்பாதைக்கு மேலே உள்ள சா சுல்தான் அலி ஆரிப் ராவின் ஆலயம், [2] காரகோரம் நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள சீனக் கல்லறை மற்றும் சிகாசு பகுதியில் உள்ள பாறைக் கல்வெட்டுகள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடங்களாகும். [3] தற்போது சேதமடைந்து காணப்படும் அரை நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்ட சீனாவின் தான்யர் தொங்கு பாலம், மிகவும் ஆச்சரியமானது. இது காரகோரம் சர்வதேசப் பல்கலைகழக வளாகத்தை நகரத்துடன் இணைக்கிறது. பாலத்தின் தான்யரின் முனையானது, ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் எந்த முறையான பொறியியல் உபகரணங்களும் இல்லாமல் உள்ளூர் மக்களால் கட்டப்பட்ட ஒற்றை-வழி சுரங்கப்பாதையில் இணைக்கப்பட்டுள்ளது.[4] கோடை காலங்களில், உடைந்த சீனப் பாலத்தின் கீழ் உள்ள இங்குள்ள நீரூற்றுகளுக்கு உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வருகை தருகின்றனர். [5] [6]
உடைந்த சீனப் பாலம்
தொகுகில்கிட்-பால்டிஸ்தானில் உள்ள பழமையான மற்றும் மிக நீளமான பாலங்களில் ஒன்று காரகோரம் நெடுஞ்சாலையில் கில்கிட் ஆற்றின் மீது கட்டப்பட்ட சீனப் பாலம் ஆகும். அடித்தளத்தின் ஏற்பட்ட சேதம் காரணமாக 2009 ஆம் ஆண்டில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. ஆரம்பத்தில், ஒன்பது தூண்களில் இரண்டு ஆற்றில் விழுந்தன. பின்னர் நிலையற்ற அமைப்பு காரணமாக, மற்றொரு தூணும் இடிந்து விழுந்தது. இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பாலம் மூடப்பட்டது.[7] மேலும், அதன் அருகே புதிய பாலம் திட்டமிடப்பட்டு ஏப்ரல் 2016 இல் நிறைவடைந்தது.[8] பாலத்தின் முனைகளில் இரண்டு காவலர் குடியிருப்புகள் இருந்தன.[9]
அருகிலுள்ள இடங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "گلگت۔ : اسسٹنٹ کمشنر سب ڈویژن دنیور کپٹن (ر) ثناء واللہ کا مجسٹریٹس اور بلڈنگ انسپکٹر ڈسٹرکٹ کونسل کے ہمراہ دنیور کے مختلف گورنمنٹ اور پرائیوٹ سکولوں کا دورہ کیا۔ - Passu Times پھسو ٹائمزاُردُو | We write, What is right". Archived from the original on 2017-10-19. பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.
- ↑ Concrete social change will benefit Gilgit-Baltistan
- ↑ Pakistan's mountain farmers 'helpless' in face of erratic weather
- ↑ Concrete social change will benefit Gilgit-Baltistan-I
- ↑ Concrete social change will benefit Gilgit-Baltistan-I
- ↑ Danyore Suspension Bridge and Tunnel It connects Gilgit City the region of District
- ↑ Declared unsafe: Danyore Bridge closed to traffic
- ↑ Danyore Suspension Bridge and Tunnel It connects Gilgit City the region of District
- ↑ Danyore Bridge Damaged