தாபி தர்மா ராவ்
தாபி தர்மா ராவ் நாயுடு ( Thapi Dharma Rao Naidu ) என்பவர் ஒரு தெலுங்கு எழுத்தாளரும், பத்திரிகையாளரும், பகுத்தறிவுவாதியும் மற்றும் சமூகச் சீர்திருத்தவாதியும் ஆவார். தெலுங்கு இதழியலில் பேச்சுவழக்கு மொழியின் முன்னோடியாகவும், தெலுங்கு உரைநடை எழுத்தாளர்களின் தலைவராகவும் இவர் கருதப்படுகிறார்.[1] 1971 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய சாகித்திய அகாதமியால் சாகித்திய அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.[2] இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் சமூக அறிவியல் துறையில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். விதி விலாசம் போன்ற இவரது இலக்கியப் படைப்புகள் இந்திய இலக்கிய வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. மாலா பிள்ளா (1938) ரைத்து பிட்டா (1939) துரோகி (1948) ரோஜுலு மாராய் (1955) போன்ற திரைப்படங்களுக்கு உரையாடல்களையும் பாடல்களையும் எழுதினார்.
தாபி தர்மா ராவ் | |
---|---|
2018 இல் தாபி தர்மா ராவ் | |
பிறப்பு | பெர்காம்பூர், இந்தியா | 19 செப்டம்பர் 1887
இறப்பு | 1973 (அகவை 85–86) |
புனைபெயர் | தாபி தர்மா ராவ் நாயுடு |
கல்வி | இளங்கலை |
கல்வி நிலையம் | பச்சையப்பன் கல்லூரி, சென்னை |
வகை | எழுத்தாளர், கவிஞர், பாடலசிரியர் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி விருது |
துணைவர் | தாபி அன்னபூர்ணம்மா |
பிள்ளைகள் | தாபி சாணக்கியா உட்பட இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள் |
கவுரவங்கள்
தொகு- ஆந்திர சாகித்ய அகாதமி இவருக்கு 'விசிஷ்டா சப்யாத்வம்' என்ற விருது வழங்கி கௌரவித்தது.
- தெலுங்கு மொழிக்கு இவர் ஆற்றிய சேவைக்காக சிருங்கேரி சாரதா மடத்தின் தலைமை மடாதிபதி இவருக்கு 'ஆந்திர விசாரதா' என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார்.
- சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக இருந்தார்.
குடும்பம்.
தொகுதாபி தர்மா ராவ் நாயுடுவுக்கு இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள் இருந்தனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Thapi Dharma Rao, a doyen of colloquial language in journalism" (in en-IN). The Hindu. 2016-10-17. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/Thapi-Dharma-Rao-a-doyen-of-colloquial-language-in-journalism/article16074788.ece.
- ↑ "Sahitya Akademi Awards in Telugu language (1955-2007)". சாகித்திய அகாதமி. Archived from the original on 13 August 2010. பார்க்கப்பட்ட நாள் 2023-06-13.
வெளி இணைப்புகள்
தொகு- The Encyclopaedia Of Indian Literature (Volume Two); page: 995.
- 20th Century Luminaries, தெலுங்கு பல்கலைக்கழகம், Hyderabad, 2005.
- Thapi Dharma Rao profile in IMDb.