தாமசு குள்ள சுண்டெலி
தாமசு குள்ள சுண்டெலி (Thomas's pygmy mouse-மசு சோரெல்லா) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும்.
தாமசு குள்ள சுண்டெலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | முரிடே
|
பேரினம்: | மசு (பேரினம்)
|
இனம்: | M. sorella
|
இருசொற் பெயரீடு | |
Mus sorella (தாமசு, 1909) |
பரவல்
தொகுஇது அங்கோலா, கேமரூன், கொங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, காபோன், கென்யா, உருவாண்டா, தெற்கு சூடான், தன்சானியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது .
வாழிடம்
தொகுஇதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் மற்றும் உலர் புன்னிலம் ஆகும்.
விளக்கம்
தொகுதாமசு குள்ள சுண்டெலி இரண்டு வெட்டுப்பற்கள் மேல் தாடையிலும், பெரும்பாலான மசு சிற்றினங்களை விட நீண்ட நகங்களையும் உடல் நீளத்துடன் ஒப்பிடும்போது சிறிய வாலினையும் கொண்டுள்ளன. இவை அரிதாகவே வெளியில் காணப்படுகின்றன மற்றும் இவற்றின் வளைத் தோண்டியே இவற்றைப் பிடிக்க முடியும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Cassola, F. (2016). "Mus sorella". IUCN Red List of Threatened Species 2016: e.T13983A22406595. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T13983A22406595.en. https://www.iucnredlist.org/species/13983/22406595. பார்த்த நாள்: 16 November 2021.
- ↑ https://www.britannica.com/animal/Thomass-pygmy-mouse