தாமரைத்தீவான்
தாமரைத்தீவான் (பி. ஜூலை 24, 1932) என்ற புனைபெயர் கொண்ட சோமநாதர் இராசேந்திரம் இலங்கை திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைப் படைத்துள்ளார்.
சோமநாதர் இராசேந்திரம் (தாமரைத்தீவான்) | |
---|---|
பிறப்பு | சூலை 24, 1932 தாமரைவில், கிண்ணியா, திருகோணமலை, இலங்கை |
மற்ற பெயர்கள் | கோலேந்தி, எறிகோலன், சுதந்திரன், அகதிக்கவிராயர், சாப்பாட்டுக்கவிராயர், மலைப்புலவர், பொடிப்புலவன் |
கல்வி | மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலை (1952) தாமரைவில் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, மூதூர் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை |
அறியப்படுவது | கவிஞர் |
பெற்றோர் | க. முத்துப்பிள்ளை சி. சோமநாதர் |
வாழ்க்கைத் துணை | வ. தவமணி (11- 05- 1960) |
பிள்ளைகள் | அன்பழகன், அண்ணாத்துரை, நெடுஞ்செழியன், சிற்றரசு, தமிழரசி |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுதிருகோணமலையின் தென்கிழக்கிலே 12 மைல் தொலைவில் உள்ள தாமரைவில் என்ற பழந்தமிழ்ச் சிற்றூரில் சோமநாதர் - முத்துப்பிள்ளை தம்பதியினருக்கு ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தவர் தாமரைத்தீவான். தனது ஆரம்பக்கல்வியை தாமரைவில் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் பயின்றவர் பின்னர் மூன்றாம் தரத்திலிருந்து மூதூரில் தங்கியிருந்து அங்குள்ள மூதூர் அர்ச் அந்தோனியார் பாடசாலையில் கல்வி பயின்றார்.
1952 இல் மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் படித்து பயிற்சி பெற்ற ஆசிரியரானார். ஆரம்பத்தில் திரிகோணமலை யோசப் கல்லூரியிலும் (1954), பின்னர் பதுளை கந்தே கெதற (1955 முதல்), கந்தளாய் (1961 முதல்), ஈச்சந்தீவு (1963 முதல்) பின்னர் திருகோணமலை உப்பாறு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை (1968) ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1972 முதல் 1987 இல் ஓய்வு பெறும் வரையில் அதிபராகப் பணியாற்றினார்.
இலக்கியப் பணி
தொகுஇளம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். 1956 இல் சுதந்திரன் பத்திரிகையில் இவரது முதலாவது கவிதை பிரசுரமானது. அதனைத் தொடர்ந்து வீரகேசரி, தினகரன், சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளிலும் சுடர், தமிழ் உலகம், சர்வதேச தமிழர் முதலிய சஞ்சிகைகளிலும் எழுதினார். திருமலை மாவட்டத்தில் பல கவியரங்குகளில் கவிதை பாடி சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் அறியப்பட்டார்.
வெளிவந்த கவிதைத் தொகுப்புகள்
தொகு- பிள்ளைமொழி
- கீறல்கள்
- கட்டுரைப்பத்து
- போரும் பெயர்வும்
- ஐம்பாலைம்பது
- வள்ளுவர் அந்தாதி
- சிறு விருந்து
- சோமம்
- என்பா நூறு
- உணர் - உரை
விருதுகள்
தொகுஉசாத்துணை
தொகு- ஞாயிறு தினக்குரல் (29 ஜூலை 2007) பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்