தாமஸ் பெய்ன்

ஆங்கில-அமெரிக்க எழுத்தாளர் மற்றும் அரசியற் செயற்பாட்டாளர்
(தாமஸ் பைன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தாமஸ் பெய்ன் (Thomas Paine) என்பவர் (பிறப்பு: சனவரி 29, 1737; இறப்பு: சூன் 8, 1809) புகழ்மிக்க ஆங்கில-அமெரிக்க எழுத்தாளர், பரப்புரையாளர், வேரோட்டப் போக்குநர், கண்டுபிடிப்பாளர், அறிவாளர், புரட்சியாளர், ஐக்கிய அமெரிக்கத் தொடக்குநருள் ஒருவர் என்னும் பல சிறப்புகளைக் கொண்டவர் ஆவார்.[1]

தாமஸ் பெய்ன் (Thomas Paine)
தாமஸ் பெய்ன் (ஆகுஸ்த் மில்லியேர் 1880இல் வரைந்த ஓவியம்)
பிறப்புசனவரி 29, 1737
தெட்ஃபர்ட், நோர்ஃபோக், இங்கிலாந்து
இறப்புசூன் 8, 1809(1809-06-08) (அகவை 72)
நியூயார்க் நகரம்
காலம்அறிவொளிக் காலம் - 18ஆம் நூற்றாண்டு மெய்யியல்
பகுதிமேற்கத்திய மெய்யியல்
பள்ளிஅறிவொளிக்காலம், சுதந்திரவாதம், வேரோட்டவாதம், குடியரசுவாதம்
முக்கிய ஆர்வங்கள்
சமயம், அறவியல், அரசியல்
கையொப்பம்

[2]

பிறப்பும் அமெரிக்க பயணமும்

தொகு

தாமஸ் பெய்ன் இங்கிலாந்து நாட்டில் நோர்ஃபோக் மாவட்டத்தில் தெட்ஃபட் என்னும் நகரில் பிறந்தார். அவர் தம் 37ஆம் வயதில் பிரித்தானிய அமெரிக்க குடியேற்றத்திற்குப் பயணமானார். அங்கு 1774இல் அமெரிக்க புரட்சிப் போரில் கலந்துகொண்டார். பிரித்தானியக் குடியேற்ற ஆதிக்கத்தை எதிர்த்து அமெரிக்கா போராடி, சுதந்திரம் அடைய வேண்டும் என்னும் கருத்தை முன்வைத்து, பெய்ன் "பகுத்தறிவு" (Common Sense) என்னும் தலைப்பில் ஒரு சிற்றேட்டினை 1776ஆம் ஆண்டு வெளியிட்டார். அது பலராலும் படிக்கப்பட்ட, புகழ்பெற்ற வெளியீடாயிற்று. அவர் எழுதிய இன்னொரு சிற்றேட்டுத் தொடர் "அமெரிக்க நெருக்கடி" (The American Crisis) என்பதாகும் (1776–1783).

பெய்ன் எழுதிய "பகுத்தறிவு" என்னும் சிற்றேட்டின் தாக்கம் எவ்வளவு என்றால், அமெரிக்க நாட்டுக்கு அடித்தளம் இட்டவர்களுள் ஒருவரும் அந்நாட்டின் இரண்டாம் அதிபருமாயிருந்த ஜாண் ஆடம்சு என்பவர்,

என்று கூறியுள்ளார்.[3]

பிரான்சு நாட்டில்

தொகு

1770களில் பெய்ன் பிரான்சு நாட்டில் வாழ்ந்தார். அப்போது அவர் பிரஞ்சு புரட்சியில் தீவிரமாகப் பங்கேற்றார். பிரஞ்சு புரட்சியை எதிர்த்தவர்களுக்குப் பதில்மொழி கொடுக்கும் வகையில் அவர் "மனிதரின் உரிமைகள்" (Rights of Man) என்னும் நூலை 1791இல் எழுதினார். பிரித்தானிய எழுத்தாளராகிய எட்மண்ட் பர்க் (Edmund Burke) என்பவருக்கு எதிராகவும் தாமஸ் பெய்ன் எழுதினார். இதனால் அரசு துரோகம் என்னும் குற்றம் சாட்டப்பட்டார். பிரஞ்சு அவருடைய தாய்மொழியாக இல்லாதிருந்த போதிலும் அவர் 1792இல் பிரஞ்சு தேசியப் பேரவை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

பிரான்சில் இருந்தபோது பெய்ன் அரசியல் எதிரிகளைச் சம்பாதித்துக்கொண்டார். அதனால் 1793 திசம்பர் மாதம் கைதுசெய்யப்பட்டு, பாரிசில் சிறையில் அடைக்கப்பட்டார். 1794இல் விடுவிக்கப்பட்டார்.

பெய்ன் 1793-1794ல் "பகுத்தறிவுக் காலம்" என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டார். அந்நூலில் அவர் நிறுவனமாக்கப்பட்ட மதத்திற்கு எதிராகப் பேசினார். கிறித்தவக் கொள்கைகளைத் தாக்கினார். பகுத்தறிவையும் சுதந்திர சிந்தனையையும் உயர்த்திப் பேசினார். பொதுவான கடவுள் நம்பிக்கையே போதும் என்றார். அவர் 1795இல் எழுதிய "வேளாண்மை நீதி" (Agrarian Justice) என்னும் நூலில் சொத்துரிமையின் தோற்றம் குறித்து விவாதித்தார். எல்லா உழைப்பாளருக்கும் வாழ்க்கைக்குத் தேவையான குறைந்த ஊதியமாவது கிடைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.

இறப்பு

தொகு

1802இல் பெய்ன் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பிச் சென்றார். அங்கு 1809, சூன் 8ஆம் நாள் உயிர்துறந்தார். அவர் கிறித்தவத்துக்கு எதிராக எழுதியிருந்ததால், அவரது அடக்கத்தின்போது வெறும் ஆறு பேரே பங்கேற்றனராம்.[4]

 
தாமஸ் பெய்ன் கல்வி பயின்ற தொடக்கப் பள்ளி. தெட்ஃபட், இங்கிலாந்து.
 
லூவெசு நகரில் தாமஸ் பெய்னின் இல்லம்.
 
தாமஸ் பெய்ன் நினைவுக் குறிப்பு. இடம்: லூவெஸ் நகர், இங்கிலாந்து.
 
தாமஸ் பெய்ன் 1776இல் வெளியிட்ட "பகுத்தறிவு" (Common Sense) என்னும் சிற்றேடு
 
தாமஸ் பெய்ன் எழுதிய "பகுத்தறிவுக் காலம்" என்னும் நூலின் முதல் பகுதி.
 
தாமஸ் பெய்ன். ஓவியர்: லொரான் டபோ. ஆண்டு: 1791.
 
தாமஸ் பெய்ன். ஓவியர்: மாத்யூ ப்ராட் (1785-1795).
 
தாமஸ் பெய்ன் அஞ்சல் தலை. ஆண்டு:1969

படத்தொகுப்பு

தொகு

ஆதாரங்கள்

தொகு
குறிப்புகள்
  1. Bernstein, Richard B. (2009). The Founding Fathers Reconsidered. Oxford University Press US. p. 36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195338324. பார்க்கப்பட்ட நாள் செப்டெம்பர் 7, 2009.
  2. Saul K. Padover, Jefferson: A Great American's Life and Ideas, New York: The New American Library, 1952, p. 32
  3. The Sharpened Quill The New Yorker, Accessed November 6, 2010,
  4. Conway, Moncure D. (1892). The Life of Thomas Paine பரணிடப்பட்டது 2009-04-18 at the வந்தவழி இயந்திரம். Volume 2, pages 417–418.
நூல் பட்டியல்
மூல ஆதாரங்கள்
  • Foot, Michael, and Kramnick, Isaac, 1987. The Thomas Paine Reader. Penguin Classics.
  • Paine, Thomas (Foner, Eric, editor), 1993. Writings. Library of America. Authoritative and scholarly edition containing Common Sense, the essays comprising the American Crisis series, Rights of Man, The Age of Reason, Agrarian Justice, and selected briefer writings, with authoritative texts and careful annotation.
  • Paine, Thomas (Foner, Philip S., editor), 1944. The Complete Writings of Thomas Paine, 2 volumes. Citadel Press. We badly need a complete edition of Paine's writings on the model of Eric Foner's edition for the Library of America, but until that goal is achieved, Philip Foner's two-volume edition is a serviceable substitute. Volume I contains the major works, and volume II contains shorter writings, both published essays and a selection of letters, but confusingly organized; in addition, Foner's attributions of writings to Paine have come in for some criticism in that Foner may have included writings that Paine edited but did not write and omitted some writings that later scholars have attributed to Paine.

வெளி இணைப்புகள்

தொகு
படைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமஸ்_பெய்ன்&oldid=3732458" இலிருந்து மீள்விக்கப்பட்டது