தாமிரம்(II) சிடீயரேட்டு
தாமிரம்(II) சிடீயரேட்டு (Copper(II) stearate) Cu(C17H35COO)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் உலோகக் கரிமச் சேர்மமாகும்.[2][3] தாமிரமும் சிடீயரிக் அமிலமும் வினை புரிவதால் இந்த உப்பு உருவாகிறது. இச்சேர்மம் ஓர் உலோக சோப்பாக அதாவது கொழுப்பு அமிலத்தின் உலோக வழிப்பெறுதியாக வகைப்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தாமிரம்(2+) டையாக்டாடெக்கோனேட்டு, குப்ரிக் சிடீயரேட்டு, தாமிரம் டைசிடீயரேட்டு[1]
| |
இனங்காட்டிகள் | |
660-60-6 | |
ChemSpider | 84453 |
EC number | 211-540-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 93553 |
| |
UNII | Z3VAO22R1R |
பண்புகள் | |
Cu(C17H35COO)2 | |
வாய்ப்பாட்டு எடை | 630.48 |
தோற்றம் | நீலப் பச்சை படிக உருவமற்ற பொருள் |
அடர்த்தி | 1.10 கி/செ.மீ3 |
கொதிநிலை | 250 °C (482 °F; 523 K) |
கரையாது | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P280, P305, P351, P338 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசோடியம் சிடீயரேட்டும் தாமிர சல்பேட்டும் பரிமாற்ற வினையில் ஈடுபடுவதால் தாமிரம்(II) சிடீயரேட்டு உருவாகிறது.:[4][5]
இயற்பியல் பண்புகள்
தொகுதாமிரம்(II) சிடீயரேட்டு ஒரு நீல-பச்சை நிறத்திலான படிக உருவமற்ற வேதிப் பொருளை உருவாக்குகிறது.[6] தோற்றம் மற்றும் தொடுதல் ஆகிய இரண்டு பண்புகளிலும் பிளாசுட்டிசின் உப்பைப் போன்றதாகும்.
தண்ணீர், எத்தனால், மெத்தனால் போன்ற கரைப்பான்களில் இது கரையாது.
ஈதர், பிரிடின், சூடான பென்சீன் மற்றும் குளோரோஃபார்ம் போன்ற கரிமக் கரைப்பான்களில் இது கரைகிறது.
வேதிப் பண்புகள்
தொகுஇயல்பான நிலைகளில் இச்சேர்மம் நிலைப்புத்தன்மை கொண்டதாகவும் வினைத்திறன் அற்றும் காணப்படுகிறது.[7]
பற்றவைக்க முயற்சிக்கும்போது, தாமிர சிடீயரேட்டு முதலில் உருகி, பின்னர் கீழ்பகுதியில் பச்சை நிறச் சுடருடன் எரியத் தொடங்குகிறது. பின்னர் குப்ரிக் ஆக்சைடு உருவாவதால் இது விரைவாக கருப்பு நிறமாக மாறும்:
பயன்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "CAS 660-60-6 Copper(ii)stearate - Alfa Chemistry". alfa-chemistry.com. பார்க்கப்பட்ட நாள் 13 February 2023.
- ↑ "Copper(II) stearate". Oakwood Chemical. பார்க்கப்பட்ட நாள் 13 February 2023.
- ↑ "Copper(II) Stearate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 13 February 2023.
- ↑ Richardson, H. Wayne (16 January 1997). Handbook of Copper Compounds and Applications (in ஆங்கிலம்). CRC Press. p. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8247-8998-5. பார்க்கப்பட்ட நாள் 13 February 2023.
- ↑ "Cupric stearate | 660-60-6" (in ஆங்கிலம்). ChemicalBook. பார்க்கப்பட்ட நாள் 13 February 2023.
- ↑ "MatWeb - The Online Materials Information Resource". matweb.com. பார்க்கப்பட்ட நாள் 13 February 2023.
- ↑ "SAFETY DATA SHEET" (PDF). chemservice.com. பார்க்கப்பட்ட நாள் 14 February 2023.
- ↑ Scott, David A. (2002). Copper and Bronze in Art: Corrosion, Colorants, Conservation (in ஆங்கிலம்). Getty Publications. p. 293. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89236-638-5. பார்க்கப்பட்ட நாள் 13 February 2023.
- ↑ Ugo, R. (6 December 2012). Aspects of Homogeneous Catalysis: A Series of Advances (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-010-1199-0. பார்க்கப்பட்ட நாள் 13 February 2023.