தாமிர குரோமைட்டு

ஒரு கனிம வேதியியல் சேர்மம் மற்றும் வினையூக்கி

தாமிர குரோமைட்டு (Copper chromite) Cu2Cr2O5 என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செப்பு குரோமைட்டு என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் பல்வேறு கரிம வேதியியல் தொகுப்பு வினைகளில் வினையை நிகழ்த்தும் வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது[2][3][4].

தாமிர குரோமைட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஆக்சோ-(ஆக்சோகுரோமியாக்சி)குரோமியம்
இனங்காட்டிகள்
12053-18-8 Y
InChI
  • InChI=1S/2Cr.2Cu.5O
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3084101
SMILES
  • O=[Cr]O[Cr]=O.O=[Cu].O=[Cu]
பண்புகள்
Cu2Cr2O5
வாய்ப்பாட்டு எடை 311.0812 கி/மோல்
தீங்குகள்
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (Cu வாக)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (Cu வாக)[1]
உடனடி அபாயம்
TWA 100 மி.கி/மீ3 (Cu வாக)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

வரலாறு தொகு

தாமிர குரோமைட்டின் பண்புகள் 1908 ஆம் ஆண்டு முதன்முதலில் விவரிக்கப்பட்டன[5]. வட அமெரிக்காவைச் சேர்ந்த ஓமர் புர்டன் அட்கின்சும் வில்பர் ஆர்த்தர் லாசியரும் சேர்ந்து இவ்வினையூக்கியை உருவாக்கினர். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், பிசர் – திரோபச் செயல்முறையை முன்வைத்து செருமானிய வேதியலர்களிடம் உரையாடல்கள் நிகழ்த்தியதன் அடிப்படையில் இவ்வினையூக்கி உருவாக்கப்பட்டது[6]. இதனால், தாமிர குரோமைட்டு சில சமயங்களில் அட்கின்சு வினையூக்கி அல்லது இலாசியர் வினையூக்கி என்றும் அழைக்கப்படுகிறது.

வேதியியல் கட்டமைப்பு தொகு

தாமிர குரோமைட்டு பொதுவாக சிபினல் கட்டமைப்பை ஏற்கிறது. இச்சேர்மத்தின் பகுதிக்கூறுகள் Cu(II), Cr(III) என்ற ஆக்சிசனேற்ற நிலைகளைக் கொண்டுள்ளன[7]. Cr2CuO4·CuO·BaCrO4 (சிஏஎசு எண் 99328-50-4) மற்றும் Cr2Cu2O5 (சிஏஎசு எண் 12053-18-8) ஆகியன உள்ளிட்ட பல்வேறு கூட்டமைவுகள் இச்சேர்மத்திற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. வர்த்தக மாதிரிகளில் பெரும்பாலும் பேரியம் ஆக்சைடும் வேறுசில பொருட்களும் கலந்துள்ளன.

தயாரிப்பு தொகு

மூன்று பகுதிப்பொருட்களில் ஏதாவது ஒன்றை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தி தாமிர குரோமைட்டு தயாரிக்கப்படுகிறது. வினைவேக மாற்றியின் உதவியில்லாமல் தாமிர குரோமேட்டை எரித்தல் வினைக்கு உட்படுத்தி தாமிர குரோமைட்டு தயாரிக்கும் முறை ஒரு பாரம்பரியமான முறையாகும்:[8].

CuCrO4 → CuCrO3 + O

தாமிர பேரிய அமோனியம் குரோமேட்டு என்ற குரோமேட்டுதான் மிகப்பரவலாக தாமிர குரோமைட்டைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை மூலம் உற்பத்தி செய்யப்படும் செப்பு குரோமைட்டு கலவையை , பேரியத்துடன் வினைபுரியாத பொருட்களைக் கொண்டிருக்கும் செயல்முறைகளில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஏனெனில், தாமிர பேரிய அமோனியம் குரோமேட்டு சிதைவடையும் போது பேரியத்தையும் ஒரு விளைபொருளாகக் கொடுக்கிறது. அசிட்டிக் அமிலத்தில் கழுவுதல், தெளிய வைத்து இறுத்தல், சூடுபடுத்தல் மற்றும் எஞ்சியிருக்கும் திண்மத்தை சூடுபடுத்தி உலர்த்துதல் ஆகிய படிநிலைகளை உள்ளடக்கிய அசிட்டிக் அமிலப் பிரித்தெடுத்தல் முறையில், இவ்வினையில் உடன் விளையும் தாமிர ஆக்சைடு பிரித்தெடுக்கப்படுகிறது. இவ்வினைகளின் இறுதியில் தூய்மையான தாமிர குரோமைட்டு கிடைக்கிறது. தாமிர பேரிய அமோனியம் குரோமேட்டு பொதுவாக மூடுலையில் இடப்பட்டு 350 முதல் 450 பாகை செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்துவதால் தாமிர குரோமைட்டு தயாரிக்கப்படுகிறது:[2]

Ba2Cu2(NH4)2(CrO4)5 → CrCuO3 + CuO + 2 Ba + 4 H2O + 4 Cr + N2 + 6 O2

தாமிர குரோமைட்டு தயாரிப்பதற்கு தாமிர அமோனியம் குரோமேட்டும் பயன்படுத்தப்படுகிறது. பேரிய அமோனியம் குரோமேட்டைப் பயன்படுத்தி தாமிர குரோமைட்டு தயாரிக்கும் வழிமுறைக்கு மாற்றாக தாமிர அமோனியம் குரோமேட்டு சேர்மம் கருதப்படுகிறது. குறிப்பாக, பேரியத்துடன் வினைபுரியும் வேதிச்சேர்மங்களைத் தயாரிக்க இம்முறை பயன்படுகிறது. அசிட்டிக் அமிலத்தில் கழுவுதல், தெளிய வைத்து இறுத்தல், சூடுபடுத்தல் மற்றும் எஞ்சியிருக்கும் திண்மத்தை சூடுபடுத்தி உலர்த்துதல் ஆகிய படிநிலைகள் மூலம் மாசுக்களை அகற்றல் இங்கும் பின்பற்றப்படுகிறது. தாமிர அமோனியம் குரோமேட்டு பொதுவாக மூடுலையில் இடப்பட்டு 350 முதல் 450 பாகை செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்துவதால் தாமிர குரோமைட்டு உருவாகிறது:[9]

Cu(NH4)2(CrO4)2 → CrCuO3 + CrO + 4 H2O + N2

கட்டமைப்பில் பேரியத்தைப் பகுதிப்பொருளாகக் கொண்ட செயல்திறன் மிக்க தாமிர குரோமைட்டு வினையூக்கியை பேரியம் நைட்ரேட்டு, தாமிர(II) நைட்ரேட்டு மற்றும் அமோனியம் குரோமேட்டு முதலிய சேர்மங்களின் கரைசலில் இருந்து தயாரிக்கலாம். இம்மூன்று சேர்மங்களும் சேர்ந்து உருவாகும் வீழ்படிவை 350 முதல் 450 பாகை செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்துவதால் தாமிர குரோமைட்டு வினையூக்கி உருவாகிறது.

Cu(NO3)2 + Ba(NO3)2 + (NH4)2CrO4 → CuCr2O4•BaCr2O4

விளக்கப்பட்ட வினைகள் தொகு

  • எசுத்தர் சேர்மங்களை தொடர்புடைய ஆல்ககால்களாகவும், கார்பன் – கார்பன் பிணைப்பு மற்றும் கார்பன் – ஆக்சிசன் இரட்டைப் பிணைப்புகளை ஒற்றைப் பிணைப்புச் சேர்மங்களாக மாற்றும் நீரக வேதியியல் மாற்றவினையில் இவ்வினையூக்கி பயன்படுகிறது. உதாரணமாக டைமெத்தில் செபாக்கேட்டை அசைலோயின் ஒடுக்கம் செய்து வருவிக்கப்படும் 1,2-சைக்ளோதெக்கேண்டையால் தயாரிப்பில் இவ்வினையூக்கி பயன்படுத்தப்படுகிறது[10] . பீனாந்தரீனும் 9,10 நிலைகளில் இவ்வினையூக்கியால் ஒடுக்கப்படுகிறது.
  • டெட்ராவைதரோஃபர்பியூரைலை, 250-300 பாகை வெப்பநிலையில் 3300-6000 சதுர அங்குலத்திற்கு பவுண்டு ஐதரசன் வாயு முன்னிலையில் நீரக வேதியியல் மாற்றவினை செய்து 1,5 பெண்டேண்டையால் தயாரிப்பதிலும் இவ்வினையூக்கி பயன்படுத்தப்படுகிறது[11]
  • ஆல்பா-பீனைல்சின்னமிக் அமிலத்தை கார்பாக்சில் நீக்க வினையின் மூலம் சிசு-சிடில்பென் தயாரிப்பதிலும் இவ்வினையூக்கி பயன்படுகிறது[12].

உயர் வாயு அழுத்தத்திலும் உயர் வெப்பநிலையிலும் ஐதரசன் பங்கேற்கும் வினைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உயர்தர வினையூக்கியான ரானே நிக்கலும் எசுத்தர் ஒடுக்க வினைகளில் பயன்படுத்தப்படுகிறது. அறை வெப்பநிலையும் அதே ஐதரசன் வாயு அழுத்தமும் இருப்பதே ரானே நிக்கல் பயன்படுத்துவதற்கு சாதகமான சூழலாகும். இருந்தாலும், அதிக விகித அளவில் வினையூக்கிகளும் வினையாக்கிகளும் இதற்காகப் பயன்படுத்த வேண்டியுள்ளது[3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0150". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. 2.0 2.1 Adkins, Homer; Burgoyne, Edward; Schneider, Henry (1950). "The Copper—Chromium Oxide Catalyst for Hydrogenation". Journal of the American Chemical Society 72 (6): 2626–2629. doi:10.1021/ja01162a079. 
  3. 3.0 3.1 Adams, Rodger (1955). "Organic Reactions Volume VIII". Journal of the American Pharmaceutical Association 44 (2): 128. doi:10.1002/jps.3030440228. 
  4. Cladingboel, D. E. "Copper Chromite" in Encyclopedia of Reagents for Organic Synthesis 2001 John Wiley & Sons. எஆசு:10.1002/047084289X.rc221
  5. Gröger, M. "Über Ammoniumdoppelchromate" Zeitschrift fur anorganische Chemie volume 58, page 412-426 (1908). எஆசு:10.1002/zaac.19080580138; "Chromite aus basischen Chromaten" ibid. volume 76, page 30-38 (1912). எஆசு:10.1002/zaac.19120760103 10.1002/zaac.19120760103
  6. Fischer-Tropsch Archive
  7. Prince, E. "Crystal and magnetic structure of copper chromite" Acta Crystallographica 1957, vol. 10, 554-6. எஆசு:10.1107/S0365110X5700198X
  8. Lane, Bray; Laura Silva. "Catalyst recovery method". United States Patent and Trademark Office. பார்க்கப்பட்ட நாள் 8 October 2013.
  9. Lazier, W. A.; Arnold, H. R. (1939). "Copper Chromite Catalyst". Organic Syntheses 19: 31. doi:10.15227/orgsyn.019.0031. 
  10. Blomquist, A. T.; Goldstein, Albert (1963). "1,2-Cyclodecanediol". Organic Syntheses 4: 216. doi:10.15227/orgsyn.036.0012. 
  11. Kaufman, Daniel; Reeve, Wilkins (1955). "1,5-Pentanediol". Organic Syntheses 3 (693). doi:10.15227/orgsyn.026.0083. 
  12. Buckles, Robert; Wheeler, Norris (1963). "cis -Stilbene". Organic Syntheses 4: 857. doi:10.15227/orgsyn.033.0088. 

இவற்றையும் காண்க தொகு

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிர_குரோமைட்டு&oldid=3783042" இலிருந்து மீள்விக்கப்பட்டது