தாமிர செலீனைடு
தாமிர செலீனைடு (Copper selenide) என்பது Cu2Se என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாமிரமும் செலீனியமும் சேர்ந்து ஓர் இரும சேர்மமாக இது உருவாகிறது. சிலசமயங்களில் CuSe என்ற வாய்ப்பாட்டாலும் குறிக்கப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
தாமிர செலீனைடு
| |
இனங்காட்டிகள் | |
20405-64-5 | |
EC number | 243-796-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6914519 |
| |
UNII | 44P3QN57K9 |
பண்புகள் | |
Cu2Se | |
வாய்ப்பாட்டு எடை | 206.06 g·mol−1 |
தோற்றம் | அடர் நீலம், கருப்பு |
அடர்த்தி | 6.84 கி/மில்லி[1] |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H201, H331, H373, H400, H410 | |
P260, P261, P264, P270, P271, P273, P301+310, P304+340, P311, P314, P321, P330, P391, P403+233 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
படிக அமைப்பும் மின்னணு நடத்தையும் இதன் அடிப்படை கூறுகளின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.[2] விகிதவியல் அளவிலான தாமிர செலீனைடு, உலோகம் போன்ற நடத்தை கொண்ட சுழிய கற்றை இடைவெளி கொண்ட ஒரு பொருளாகும்.[3] தாமிரம்-குறைபாடுள்ள விகிதவியல் அளவில் இல்லாத Cu2-xSe என்ற வாய்ப்பாட்டில் உள்ளது முறையே 2.1–2.3 எலக்ட்ரான் வோல்ட்டு மற்றும் 1.2–1.4 எலக்ட்ரான் வோல்ட்டு வரம்பில் நேரடி மற்றும் மறைமுக கற்றை இடைவெளி ஆற்றல்களைக் கொண்ட ஓர் உள்ளார்ந்த p-வகை குறைக்கடத்தி ஆகும்.[4]
தாமிர செலீனைடு மீநுண் துகள்கள் அல்லது பிற மீநுண் கட்டமைப்புகளாக அடிக்கடி வளர்க்கப்படுகிறது.[5][6][7]
பயன்கள்
தொகுசில மந்தமாக்கும் செயல்முறைகளில் இரும்பு அல்லது எஃகு பாகங்களில் ஒரு பாதுகாப்பான கருப்பு பூச்சை உருவாக்க தாமிர செலீனைடு அத்தளத்திலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.[8] இந்த முறையில் செயல்படும் மந்தமாக்கும் கரைசல்கள் பொதுவாக செலீனசு அமிலம் அல்லது செலீனியம் டை ஆக்சைடு கொண்டதாக பெயரிடப்படும்.[9][10] மேலும், தாமிர செலீனைடை பெருங்குடல் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுவதற்கும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இயற்கைத் தோற்றம்
தொகுதாமிர செலீனைடுகள் மிகவும் பொதுவான செலீனியம் தாதுக்களாகும். கனிமவியலில் CuSe கிளாக்மேனைட்டு எனப்படுகிறது.[11] அதேசமயத்தில் Cu2Se பெர்செலீயனைட்டு,[12] பெல்லிடோயைட்டு என்ற இரண்டு பல்லுருத் தோற்றங்களாக கிடைக்கிறது. இவற்றைத்தவிர உமாங்கைட்டு, அதாபாசுகைட்டு போன்ற தாமிரசெலீனியக் கனிமங்களும் இயற்கையில் கிடைக்கின்றன.[13]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Copper (I) selenide". Sigma-Aldrich. பார்க்கப்பட்ட நாள் 12 April 2016.
- ↑ Lanling, Zhao; Wang, Xiaolin; F. Yun, Frank (5 February 2015). "The Effects of Te2− and I− Substitutions on the Electronic Structures, Thermoelectric Performance, and Hardness in Melt-Quenched Highly Dense Cu2-xSe". Advanced Electronic Materials 1 (3). doi:10.1002/aelm.201400015. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/aelm.201400015. பார்த்த நாள்: 28 June 2021.
- ↑ Tyagi, Kriti; Gahtori, Bhasker (June 2015). "Enhanced thermoelectric performance of spark plasma sintered copper-deficient nanostructured copper selenide". Journal of Physics and Chemistry of Solids 81: 100–105. doi:10.1016/j.jpcs.2015.01.018. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022369715000293.
- ↑ C. Singh, Subhash (September 2018). "Structural and compositional control in copper selenide nanocrystals for light-induced self-repairable electrodes". Nano Energy 51: 774–785. doi:10.1016/j.nanoen.2018.07.020. பப்மெட்:30177955.
- ↑ Xiao, Guanjun; Ning, Jiajia; Liu, Zhaoyang; Sui, Yongming; Wang, Yingnan; Dong, Qingfeng; Tian, Wenjing; Liu, Bingbing et al. (2012). "Solution synthesis of copper selenide nanocrystals and their electrical transport properties" (in en). CrystEngComm 14 (6): 2139. doi:10.1039/c2ce06270d.
- ↑ Hessel, Colin M.; Pattani, Varun P.; Rasch, Michael; Panthani, Matthew G.; Koo, Bonil; Tunnell, James W.; Korgel, Brian A. (2011-05-10). "Copper Selenide Nanocrystals for Photothermal Therapy" (in EN). Nano Letters 11 (6): 2560–2566. doi:10.1021/nl201400z. பப்மெட்:21553924.
- ↑ Patidar, D.; Saxena, N. S. (2012-03-15). "Characterization of single phase copper selenide nanoparticles and their growth mechanism". Journal of Crystal Growth 343 (1): 68–72. doi:10.1016/j.jcrysgro.2012.01.026.
- ↑ "Room Temperature Black Oxide". Archived from the original on 28 ஏப்பிரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 April 2016.
- ↑ "Insta-Blak 333 MSDS" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 12 April 2016.
- ↑ "Oxpho-Blue MSDS" (PDF). பார்க்கப்பட்ட நாள் 12 April 2016.
- ↑ Berry, L. G. (1954). "The crystal structure of covellite, cuse and klockmannite, cuse". American Mineralogist 39 (5–6): 504–509. https://pubs.geoscienceworld.org/msa/ammin/article-abstract/39/5-6/504/539369.
- ↑ Harris, D. C.; Cabri, L. J.; Murray, E. J. (1970). "An occurrence of a sulphur-bearing berzelianite". The Canadian Mineralogist: 737–740. http://rruff.info/uploads/CM10_737.pdf.
- ↑ Harris, D. C.; Cabri, L. J.; Kaiman, S. (1970). "Athabascaite: A New Copper Selenide Mineral from Martin Lake, Saskatchewan". The Canadian Mineralogist 10 (2): 207–215. https://pubs.geoscienceworld.org/canmin/article-abstract/10/2/207/10746/athabascaite-a-new-copper-selenide-mineral-from.