தாம்பரம் விமானப்படை நிலையம்
தாம்பரம் விமானப்படை நிலையம் (Tambaram Air Force Station) என்பது தமிழ்நாட்டில் சென்னை, தாம்பரத்தில் அமைந்துள்ள இந்திய வான்படைக்குச் சொந்தமான வான்படைத் தளமாகும். இந்த வான்படைத் தளம் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
Tambaram Air Force Station தாம்பரம் விமானப்படை நிலையம் | |||
---|---|---|---|
ஐஏடிஏ: none – ஐசிஏஓ: VOTX | |||
சுருக்கமான விபரம் | |||
வானூர்தி நிலைய வகை | இராணுவம் | ||
இயக்குனர் | இந்திய வான்படை | ||
அமைவிடம் | தாம்பரம் | ||
உயரம் AMSL | 90 ft / 27 m | ||
ஆள்கூறுகள் | 12°54′25″N 80°07′16″E / 12.90694°N 80.12111°Eஆள்கூறுகள்: 12°54′25″N 80°07′16″E / 12.90694°N 80.12111°E | ||
ஓடுபாதைகள் | |||
திசை | நீளம் | மேற்பரப்பு | |
அடி | மீ | ||
05/23 | 4,965 | 1,513 | Asphalt |
12/30 | 5,965 | 1,818 | Asphalt |
இந்த நிலையத்தில் வான்படை படையணியினருக்காக உள்ள வான்படைப் பள்ளியில் 2015 காலகட்டத்தில் 15 பைலேடஸ் பிசி 7, எம்.கே II போன்றவற்றின் மூலமாக பயிற்றுனர்களால் அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பிசி-7 , கிரண் எம்.கே I, எம்கே II போன்றவை பிற பயிற்சி வானூர்திகள் ஆகும். மற்றும் எச்ஏஎல் சீட்டா, மற்றும் எச்ஏஎல் சேடக் உலங்கு வானூர்தி, ஏஎன்-32 போன்றவையும் இங்கு உள்ளன. இந்தியக் கடற்படையின் உலங்கு வானூர்திகள் கூட இந்த விமானத் தளத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.