தாய்லாந்து நாட்டுப்புறவியல்

தாய்லாந்து நாட்டுப்புறவியல் (Thai folklor) என்பது தாய்லாந்து மக்கள் வைத்திருக்கும் புராணக் கதைகள் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளின் மாறுபட்ட தொகுப்பாகும். பெரும்பாலான தாய்லாந்து நாட்டுப்புறங்களில் கிராமப்புற தாய்லாந்தில் தோன்றிய பிராந்திய பின்னணி உள்ளது. காலப்போக்கில், மற்றும் ஊடகங்களின் செல்வாக்கின் மூலம், தாய்லாந்து நாட்டுப்புறக் கதைகளின் பெரும்பகுதி பரந்த பிரபலமான தாய்லாந்தின் கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது. [1]

பாங்காக்கில் நாங் குவாக் கடைக்காரரின் அதிர்ஷ்ட ஓவியம்

உள்ளூர் நாட்டுப்புறவியல் பற்றி தீவிரமாக ஆய்வு செய்த முதல் தாய்லாந்து அறிஞர் ஃபிரயா அனுமன் ராஜாதோன் (1888-1969) வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக தாய்லாந்து கடைக்காரர்கள் பயன்படுத்தும் தாயத்து போன்ற தனது கலாச்சாரத்தின் தாழ்மையான விவரங்கள் குறித்து அவர் ஏராளமான குறிப்புகளை எடுத்துள்ளார். வெவ்வேறு கிராம ஆவிகள் மற்றும் தாய் கதைகளின் பேய்கள் தொடர்பான வாய்வழி இலக்கியங்களையும் ஆழமாகப் படித்தார். [2]

நாட்டுப்புற நம்பிக்கைகள்

தொகு
 
பச்சைக் குத்துதல்

தாய்லாந்து நாட்டுப்புறக் கதைகளின் அடிப்படை நாட்டுப்புற மதத்தில் வேரூன்றியுள்ளது. [3] அவை பதிவு செய்யப்படும் வரை, நாட்டுப்புற நம்பிக்கைகள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு வழங்கப்பட்டன.கிராமத்தில் ஆவியுலகில் தொடர்புடையவராக நம்பப்படும் சாமன்கள் ஒரு பொதுவான மற்றும் தெளிவற்ற வரலாற்று வேத பின்னணியில் இருந்து பிராமணத்தில் தோன்றிய ஒரு வார்த்தையான பிராம் என்று அழைக்கப்படுகிறார்கள். பிராம்கள் பேயோட்டுதல்களை நடத்துகிறார்கள். சிலர் திருமணங்களையும் செய்கிறார்கள்.

தாய்லாந்து நாட்டுப்புற மதத்தின் மற்றொரு முக்கியமான நபர் மோ ஃபை அல்லது சாமன் ஆவார். அவர் சடங்குகளை நடத்துவார். இறந்தவர்களின் ஆவிகளை அழைக்க, அடக்கம் அல்லது தகனம் செய்யும் இடத்திற்கு அருகில் தரையில் நான்கு குச்சிகள் ஒருவருக்கொருவர் சம தூரத்தில் நடப்படுகின்றன. ஒரு சதுரத்தை உருவாக்கி குச்சிகளைச் சுற்றி ஒரு நூல் கட்டப்பட்டு, நடுவில் ஒரு பாய் போடப்படும். அங்கு மோ பை அமர்ந்திருப்பார். அவருக்கு முன்னால், சதுரத்திற்கு வெளியே ஒரு டெரகோட்டா ஜாடி இருக்கும். இறந்த நபரின் அஸ்தி அல்லது எலும்புகள் அடங்கிய ஒரு யந்திரம் வெளியில் வரையப்பட்டிருக்கும். ஜாடிக்கு அருகில் ஒரு தட்டு அரிசி ஒரு பிரசாதமாக வைக்கப்பட்டிருக்கும். [4]

இதர நாட்டுப்புற நம்பிக்கைகள்

தொகு

தாய்லாந்து மக்களின் மூடநம்பிக்கைகள் பின்வருமாறு:

  • நல்ல தேதிகள்: நல்ல தேதிகள் மற்றும் நல்லதருணங்களை அடையாளம் காண்பது தாய்லாந்து கலாச்சாரத்தில் பொதுவானது. திருமணத் தேதியை நிர்ணயிக்கும் போதும், வீட்டைக் கட்டும் போதும் அல்லது கார் வாங்கும் போதும் இது மிகவும் முக்கியமாக பார்க்கப்படும்.

அதிர்ஷ்ட எண்கள்: குலுக்கல் பரிசுச் சீட்டை வாங்குவதற்கு முன் எண்களைக் கணிக்க கணிப்பு நுட்பங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

ஒருவரின் தலைமுடி அல்லது விரல் நகங்களை வெட்டுதல் என்பது புதன்கிழமை மிகவும் கேவலமான நாளாக கருதப்படுகிறது. தாய்லாந்தை பூர்வீகமாகக் கொண்ட பல்வேறு வகையான பல்களின் ஒலிகள் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப வெவ்வேறு விளக்கங்களைக் கொண்டுள்ளன. மேலும், ஒரு பல்லியானது ஒருவர் மீது அல்லது அருகில் விழுந்தால், அதற்கு ஒரு அர்த்தம் உள்ளது. அது விழும் பக்கத்தைப் பொறுத்து நல்லது அல்லது தீங்கு விளைவிக்கும்.

சில நபர்களுக்கு சில வண்ணங்கள் புனிதமானதாக இருக்கலாம் என்பதால், ஒரு காரைப் பெறுவதற்கு முன்பு அதன் நிறம் குறித்து அதிக கவனம் செலுத்தப்படுகிறது. வாடகை வாகனங்களின் விஷயத்தில் துரதிர்ஷ்டவசமாக கருதப்படும் சில வண்ணங்கள் தவிர்க்கப்படும். பாங்காக்கில் உள்ள வாடகை வாகனங்கள் பல்வேறு வண்ணங்களில் இருக்கும். முன்னர் பல வாகனங்கள் ஊதா நிறத்தில் இருந்தன. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் ஊதா ஒரு துரதிர்ஷ்டவசமான நிறமாகக் கருதப்பட்டதால், அவை ஓட்டுநர்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் மீண்டும் வேறு வர்ணம் பூசப்பட்டன. தாய்லாந்தில் வானவில் உயர்வாக கருதப்படுகிறது.

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Folklore of Thailand
என்பதில் ஊடகங்கள் உள்ளன.