தாராமதி பரதாரி

தாராமதி பரதாரி (Taramati Baradari) என்பது கோல்கொண்டாவின் நான்காவது சுல்தானான இப்ராஹிம் குலி குதுப் ஷாவின் ஆட்சியில் கட்டப்பட்ட பாரசீக பாணியிலான வரலாற்று பயணிகள் ஓய்வெடுக்குமிடமாகும்

தாராமதி பரதாரி
Map
பொதுவான தகவல்கள்
வகைபயணிகள் ஓய்வெடுக்குமிடம்
இடம்ஐதராபாத்து (இந்தியா), இந்தியா
ஆள்கூற்று17°22′34″N 78°22′41″E / 17.376080°N 78.378117°E / 17.376080; 78.378117
நிறைவுற்றது1880s

வரலாறு தொகு

இக்க்கட்டிடம் மூசி ஆற்றின் கரையில் கட்டப்பட்டது. இன்று, இப்பகுதி இந்தியாவி ஐதராபாத்தின் நகர எல்லைக்குள் அமைந்துள்ளது. கோல்கொண்டாவின் ஏழாவது சுல்தான், அப்துல்லா குதுப் ஷாவிவுக்குப் பிடித்தமான கணிகையும், குச்சிப்புடி நடனக் கலைஞருமான தாராமதியின் பெயரை இக்கட்டிடத்துக்கு வைத்ததாக சுற்றுலாத் துறை கூறுகிறது. [1]

புனைவுகள் தொகு

அப்போதைய சுல்தானை தாராமதி என்ற நடன மங்கையுடன் இணைக்கும் காதல் கதைகள் மூலம் சுற்றுலாத் துறை இருப்பிடத்தை ஊக்குவிக்கிறது. [2] அத்தகைய ஒரு கதை என்னவென்றால், அப்துல்லா குதுப் ஷாவின் ஆட்சிக் காலத்தில், இந்த விடுதியில் பயணிகளுக்காக அவர் பாடியபோது, தாரமதியின் குரலை ஷா கேட்டதாகவும், அதே நேரத்தில் அவர் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோல்கொண்டா கோட்டையில் அமர்ந்திருந்ததாகவும், அவளுடைய குரல் காற்றின் மூலம் இளவரசனை அடைந்தது என்றும் ஒரு கதை உலாவுகிறது. ஆனால் இதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை.

மற்றொரு கட்டுக்கதை, தாராமதி, பிரேமாமதி என்ற இரு நடனக் கலைஞர்களைப் பற்றி கூறுகிறது. அவர்கள் அரசவையில், மன்னர் மற்றும் அப்துல்லா குதுப் ஷாவிக்கும் இடையில் கட்டப்பட்ட கயிறுகளில் நடனமாடினர். [3]

கோட்டைக்கு வடக்கே சுமார் அரை மைல் தொலைவில் அப்துல்லாவின் கல்லறை குதுப் சாகி கல்லறைகளுக்கு மத்தியில் உள்ளது. குதுப் ஷாஹி மன்னர்களையும் இராணிகளையும் ஒரு காலத்தில் ரோஜா தோட்டங்களில் புதைத்தனர்.

தாராமதி மற்றும் பிரேமாமதி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவர்கள் இருவரும் குதுப் சாகி கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டனர்.

புதுப்பித்தல் தொகு

 
தராமதி பரதாரி

தாரமதி பரதாரி கட்டிடம் 12 கதவுகளைக் கொண்டுள்ளது. மேலும், காற்றோட்டத்தை அனுமதிக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மிகவும் உள்நாட்டு நுட்பங்களில் இதுவும் ஒன்றாகும். [4]

திறந்த மண்டபத்தினுள் 500 பேர் அமரும் திறன் கொண்ட காற்று குளிரூட்டப்பட்ட அரங்கம், 1600 பேர் கொள்ளக்கூடிய திறந்தவெளி அரங்கம், 250 பேர் அமரக்கூடிய ஒரு உணவுக் கூடம், பல உணவு விடுதிகள், நீச்சல் குளம் போன்ற வசதிகள் உள்ளன. [5]

மேற்கோள்கள் தொகு

  1. Chakravorty, Pallabi; Gupta, Nilanjana (2018). Dance Matters Too: Markets, Memories, Identities. India: Taylor and Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-35-111616-9. https://books.google.com/books?id=3nRUDwAAQBAJ&pg=PT25. பார்த்த நாள்: 25 October 2020. 
  2. [1]
  3. [2]
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-06-15. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-09-20. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.

மேலும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராமதி_பரதாரி&oldid=3792822" இலிருந்து மீள்விக்கப்பட்டது