தார்-உல்-ஷிபா

தார்-உல்-ஷிபா (Dar-ul-Shifa) என்பது இந்தியாவின் தெலங்காணாவின் ஐதராபாத்தின் பழைய நகரத்தில் அமைந்துள்ள ஒரு யுனானி மருத்துவமனையாகும். இது பொ.ச.1595 ஆம் ஆண்டில் ஐந்தாவது குதுப் ஷாஹி மன்னரான முகமது குலி குதுப் ஷா அவர்களால் நிறுவப்பட்டது.

தார்-உல்-ஷிபா
நகரின் உட்பகுதி
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ஐதராபாத்து
மெற்றோஐதராபாத்து
தோற்றுவித்தவர்முகமது குலி குதுப் ஷா
பெயர்ச்சூட்டு1491 இல் இங்கு கட்டப்பட்ட மருத்துவமனை
அரசு
 • நிர்வாகம்பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி ஆணையம்
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு, உருது
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
500024
மக்களவைத் தொகுதிஐதராபாத்து
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிசார்மினார்
திட்டமிடல் நிறுவனம்பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி ஆணையம்

இன்று இது சியா முஸ்லிம்களின் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது. மேலும், சியா பண்டிகை நாட்களில் உயிர்ப்புடன் இருக்கிறது. இங்குள்ள பெரும்பாலான வீடுகளின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களாக இருக்கின்றனர்.

உருது மொழியில் தார்-உல் என்றால் "வீடு" என்றும் ஷிபா "குணப்படுத்துதல்" என்றும் பொருள். எனவே இது குணப்படுத்தும் மையம் என்றும் அழைக்கப்படுகிறது. ஐதராபாத்து நகரத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. இது நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு உலகின் மிகவும் பிரபலமான மூன்று மருத்துவமனைகளில் ஒன்றாக மாறியது. [2]

அக்கால மக்களுக்கு யுனானி மருந்து மட்டுமே கிடைத்தது. இது பாரசீக நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்களை மருத்துவ சேவையை வழங்க அழைத்து வந்தது. ஒரே நேரத்தில் 400 நோயாளிகளுக்கு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.

புவியியல் ரீதியாக, தார்-உல்-ஷிஃபா ஐதராபாத்து நகரின் தெற்கே, முசி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது சார்மினார் சட்டமன்றத் தொகுதியின் கீழ் உள்ளது. வரலாற்று ரீதியாக இது ஐதராபாத்தின் பழைய நகர்ப்புறங்களில் ஒன்றாகும்; இப்போது அது பழைய நகரமான ஐதராபாத்தின் ஒரு பகுதியாகும்.

வரலாறு

தொகு

400 ஆண்டுகளுக்கு முன்பு சுல்தான் முகமது குலி குதுப் ஷா கட்டிய மருத்துவமனையின் பெயர் இந்தப் பகுதிக்குக் கிடைத்தது. பின்னர், நிசாம்களின் ஆட்சியின் போது, போதிய இடவசதி இல்லாததால் மருத்துவமனை வேறு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு பழைய கட்டிடம் அலவா இ-சர்தூக் என்ற நினைவு சடங்குகளின் துக்கத்திற்கான ஒரு கூட்ட மண்டபமாக மாற்றப்பட்டது.இதனை ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் பார்வையிடலாம். தற்போது இந்தக் கட்டிடம் நிசாம் அறக்கட்டளையின் கீழ் உள்ளது. [1]

கட்டுமானம்

தொகு

ஆறாயிரம் சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் ஒவ்வொரு தளத்திலும் 12 அறைகள் இருந்தன. நோயாளிகளுக்கு வடக்கு நோக்கி உயரமான பிரதான நுழைவாயிலின் இருபுறமும் இரண்டு தளங்களில் எட்டு இரட்டை படுக்கையறைகள் கட்டப்பட்டன. மேலும், வெளிநோயாளிகளுக்கான வார்டு வடக்குப் பக்கத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அடுத்ததாக கட்டப்பட்டது.

தீ விபத்து

தொகு

மே 7, 2019 அன்று, இங்குள்ள குலி குதுப் ஷாஹி நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ, ஆணையத்துக்கு சொந்தமான கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள பதிவறையில் தொடங்கியது. கட்டிடத்தின் மோசமான நிலை காரணமாக தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு அதிகாரிகள் சிரமப்பட்டனர். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் கழித்து, தீ அணைக்கப்பட்டது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. Akbar, Syed (August 23, 2017). "Hyderabads first full fledged hospital liies on death bed". Times of India. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/hyderabads-first-full-fledged-hospital-lies-on-death-bed/articleshow/60188534.cms. 
  2. "Fire breaks out at Darulshifa in Hyderabad". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2019-05-07. பார்க்கப்பட்ட நாள் 2020-09-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தார்-உல்-ஷிபா&oldid=3145973" இலிருந்து மீள்விக்கப்பட்டது