தார் சமஸ்தானம்

தார் இராச்சியம் (Dhar State), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால மத்தியப் பிரதேச மாநிலத்தின் கிழக்கில் உள்ள தார் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் வடக்கில் ரத்லம் சமஸ்தானம், கிழக்கில் குவாலியர் சமஸ்தானம் மற்றும் இந்தூர் சமஸ்தானம், தெற்கில் பர்வானி சமஸ்தானம், மேற்கில் ஜாபூவா சமஸ்தானம் இருந்தது. 1941-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தார இராச்சியம் 1,798 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 2,53,210 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 15 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .

தார் இராச்சியம்
धार रियासत
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1730–1947

Flag of தார்

கொடி

Location of தார்
Location of தார்
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவில் தார் இராச்சியம்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1730
 •  இந்திய விடுதலை 1947
பரப்பு
 •  1941 1,798 km2 (694 sq mi)
Population
 •  1941 253,210 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
தற்காலத்தில் அங்கம் தார் மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா
Columbia-Lippincott Gazetteer (New York: Columbia University Press, 1952) p. 510
தார் இராச்சியத்தின் 3வது மன்னர் யஷ்வந்த் ராவ் பவார்
தார் இராச்சிய மன்னர் உதய் ராவ் பவார் II
1995-இல் தார் அரண்மனை வாயில்

வரலாறு

தொகு

மராத்தியப் பேரரசின் படைத்தலைவராக இருந்த உதய் ராவ் பவார் 1730-இல் தார் இராச்சியத்தை நிறுவினார். மராத்தியப் பேரரசில் 1730-ஆம் ஆண்டு முதல் சிற்றரசாக இருந்த தார் இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற தார் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது மத்திய இந்திய முகமையில் உள்ள போபவார் முகமையின் கீழ் செயல்பட்டது. 1857 சிப்பாய்க் கிளர்ச்சி காரணமாக 19 சனவரி 1858 அன்று தார் இராச்சியம் கலைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 1 மே 1860 அன்று தார் இராச்சியம் செயல்பட பிரித்தானிய இந்தியாவின் அரசு அனுமதித்தது. தார் இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 15 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1956-இல் மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, தார் இராச்சியம் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

ஆட்சியாளர்கள்

தொகு
ஆட்சியின் துவக்கம் ஆட்சி முடிவு பெயர் பிறப்பும், இறப்பும்
1728 1732 ராஜா உதய் I பவார்
1732 1736 ராஜா ஆனந்த் I பவார் (b. ... – 1749)
1736 1761, 6 சனவரி இராஜா யஷ்வந்த் I பவார் (1724–1761)
1761, 6 சனவரி 1782 ராஜா காந்தே பவார் (1758 – 1782)
1782 1807, 10 சூன் ராஜா ஆனந்த் II பவார் (1782–1807)
1807, டிசம்பர் 1810 ராமச்சந்திர ராஜா I பவார் (1807–1810)
1807, டிசம்பர் 1810 மைனா பாய் (பெண்) (அரசப்பிரதிநிதி)
1810 1833, அக்டோபர் இராஜா ராமச்சந்திரா II பவார் (1805–1833)
1834, 21 ஏப்ரல் 1857, 23 மே ராஜா யஷ்வந்த் II பவார் (1823–1857)
1857, 23 மே 1858, 19 சனவரி இராஜா ஆனந்த் III பவார் (முதல் முறை) (1844–1898)
1858, 19 சனவரி 1860, 1 மே இராச்சியம் கலைக்கப்பட்டது.
1860, 1 மே 1898, 29 சூலை ராஜா ஆனந்த் III பவார் (இரண்டாம் முறை) (1844–1898)
1898, 29 சூலை 1926 இராஜா உதய் II பவார் (1886–1926)
1926 1931 இலக்குமி பாய் (பெண்) அரசப்பிரதிநிதி
1926 1989 ராஜா ஆனந்த் IV பவார் (1920–1989)

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தார்_சமஸ்தானம்&oldid=3377205" இலிருந்து மீள்விக்கப்பட்டது