போபவார் முகமை
போபவார் முகமை (Bhopawar Agency) பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இருந்த பில் முகமை மற்றும் பில் துணை முகமைகளை இணைத்து, 1882-ஆம் ஆண்டில் போபவார் முகமை நிறுவப்பட்டது. இம்முகமையின் கீழ் பழைய நிமோர் பகுதிகள் (தற்கால மத்தியப் பிரதேசத்தின் காண்டுவா மாவட்டம், கர்கோன் மாவட்டம் மற்றும் புர்ஹான்பூர் மாவட்டம்) மற்றும் மால்வாவின் தெற்குப் பகுதிகளில் உள்ள சுதேச சமஸ்தானங்கள் இருந்தது. 1901-ஆம் ஆண்டில் போபவார் முகமை 7,684 சதுர மைல்கள் (19,900 km2) பரப்பளவும், மக்கள் தொகை 5,47,546 ஆக இருந்தது. இந்த முகமையில் பில் பழங்குடி மகக்ள் அதிகம் இருந்தனர்.
Warning: Value not specified for "common_name" | |||||
போபவார் முகமை | |||||
முகமை | |||||
| |||||
மத்திய இந்திய முகமையின் வரைபடத்தின் மேற்கில் போபவார் முகமையின் பகுதிகள் | |||||
வரலாறு | |||||
• | பில் முகமை மற்றும் பில் துணை முகமைகளை ஒன்றிணைத்தல் | 1882 | |||
• | மால்வா முகமையுடன் இணைத்தல் | 1937 | |||
பரப்பு | |||||
• | 1901 | 19,902 km2 (7,684 sq mi) | |||
Population | |||||
• | 1901 | 5,47,546 | |||
மக்கள்தொகை அடர்த்தி | 27.5 /km2 (71.3 /sq mi) | ||||
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Bhopawar". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. |
1925-ஆம் ஆண்டில் போபவார் முகமையை மால்வா முகமையுடன் இணைக்கப்பட்டது. 1927-ஆம் ஆண்டில் இம்முகமைக்கு மால்வா-போபவார் முகமை எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் 1934-ஆம் ஆண்டில் இதற்கு மால்வா முகமை எனப்பெயரிட்டப்பட்டது.
இந்திய விடுதலைக்குப் பின்னர் மால்வா முகமையில் இருந்த சுதேச சமஸ்தானங்கள் புதிதாக நிறுவப்பட்ட மத்திய பாரதம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1 நவம்பர் 1956 அன்று போபவார் முகமைப் பகுதிகள் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.
போபவார் முகமையின் சுதேச சமஸ்தானங்கள் மற்றும் ஜமீன்களும்
தொகுவணக்கமில்லா சமஸ்தானங்கள்
தொகு- அம்ஜெரா சமஸ்தானம் Amjhera, title Rao
- பகத்கர் சமஸ்தானம்
- சச்சாதவாத் சமஸ்தானம்
- ஜோபாத் சமஸ்தானம்
- கத்திவாரா சமஸ்தானம்
- மாத்வார் சமஸ்தானம்
- மூல்தான் சமஸ்தானம்
- ரத்தன்மால் சமஸ்தானம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு