புர்ஹான்பூர் மாவட்டம்
புர்ஹான்பூர் மாவட்டம் (Burhanpur district) மத்திய இந்தியாவில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் தலைநகர் புர்ஹான்பூர் ஆகும். இம்மாவட்டம் 2003 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாளன்று உருவாக்கப்பட்டது. அதற்கு முன் இம்மாவட்டம் கண்ட்வா மாவட்டத்தின் தென்பகுதியாக இருந்தது. இம்மாவட்டத்தின் கிழக்கு மேற்காக தப்தி நதி ஓடுகிறது. இமாவட்டம் இரண்டு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை, புர்ஹான்பூர் மற்றும் காக்னார் ஆகும். இவ்வட்டங்கள் மேலும் மூன்று தாலுகாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது அவை நீபாநகர், புர்ஹான்பூர் மற்றும் காக்னார் ஆகியன ஆகும். இம்மாவட்டமானது இந்தூர் பகுதியின் கீழ் அமைந்துள்ளது.
புர்ஹான்பூர் மாவட்டம் | |
---|---|
புர்ஹான்பூர்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம் | |
மாநிலம் | மத்தியப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | இந்தூர் |
தலைமையகம் | புர்ஹான்பூர் |
மக்கட்தொகை | 756,993 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 221/km2 (570/sq mi) |
படிப்பறிவு | 65.28 % |
பாலின விகிதம் | 900 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மக்கட்தொகை
தொகு2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 7,56,993 பேர் ஆவர்.[1] இது அமரிக்காவின் அலெஸ்கா மாகாணத்தின் மக்கட்தொகைக்கு சமமாகும்.[2] இம்மாவட்டத்தின் மக்கள் அடத்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 221 பேர் ஆகும்.[1] மக்கட்தொகை வளர்ச்சி 19.23% ஆகும்.[1] ஆண்பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் என்ற விகிதம்.[1] கல்வியறிவு 65.28 % ஆகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ "2010 Resident Population Data". U. S. Census Bureau. Archived from the original on 2011-08-23. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
Alaska 710,231
{{cite web}}
: line feed character in|quote=
at position 7 (help)
இதையும் பார்க்கவும்
தொகுஇணைப்புகள்
தொகு- Burhanpur District பரணிடப்பட்டது 2017-08-29 at the வந்தவழி இயந்திரம் (தளம்)
- [1] List of places in Burhanpur