அலிராஜ்பூர் சமஸ்தானம்
அலிராஜ்பூர் சமஸ்தானம் (Alirajpur State), 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் அலிராஜ்பூர் நகரம் ஆகும். இது புந்தேல்கண்ட் முகமையின் கீழ் இருந்தது. இது தற்கால மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்த அலிராஜ்பூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1941-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அலிராஜ்பூர் இராச்சியம் 2165.24 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 50,185 மக்கள் தொகையும், ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சம் கொண்டிருந்தது.[2] இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.
अलीराजपुर रियासत | ||||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் அலிராஜ்பூர் | ||||||
தலைநகரம் | அலிராஜ்பூர் | |||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 1437 | ||||
• | இந்திய விடுதலை, 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | 1948 | ||||
பரப்பு | ||||||
• | 1901 | 2,165.24 km2 (836 sq mi) | ||||
Population | ||||||
• | 1901 | 50,185 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) | |||||
தற்காலத்தில் அங்கம் | அலிராஜ்பூர் மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா | |||||
[1] |
வரலாறு
தொகுஜோத்பூர் இராச்சியத்தின் அரச குடும்பத்தின் இராஜபுத்திர குல ரத்தோர் வம்ச மன்னர் ஆனந்த் தேவ் அல்லது உதய் தேவ் 1437-இல் நிறுவிய அலிராஜ்பூர் இராச்சியம், 17-ஆம் நூற்றாண்டில் மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்தது. மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற அலிராஜ்பூர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக புந்தேல்கண்ட் முகமையின் கீழ் ஆட்சி செய்தனர். இது 1936 வரை மத்திய மாகாணத்தில் இருந்தது. பின்னர் பம்பாய் மாகாணத்தின் யின் கீழ் செயல்பட்டது. அலிராஜ்பூர் இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.
1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி அலிராஜ்பூர் இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, இராச்சியம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள் தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Alirajpur". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
- ↑ "Imperial Gazetteer2 of India, Volume 8, page 147 -- Imperial Gazetteer of India -- Digital South Asia Library".