அலிராஜ்பூர் மாவட்டம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்

அலிராஜ்பூர் மாவட்டம் (Alirajpur district) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் அலிராஜ்பூர் ஆகும். இது இந்தூர் கோட்டத்தில் அமைந்துள்ளது.

அலிராஜ்பூர் மாவட்டம்
अलीराजपुर जिला
அலிராஜ்பூர்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்
மாநிலம்மத்தியப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்இந்தூர் கோட்டம்
தலைமையகம்அலிராஜ்பூர்
பரப்பு3,182 km2 (1,229 sq mi)
மக்கட்தொகை728,999 (2011)
மக்கள்தொகை அடர்த்தி229/km2 (590/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை7.83%
படிப்பறிவு36.10%
பாலின விகிதம்1011
வட்டங்கள்3
மக்களவைத்தொகுதிகள்ரத்லாம்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை2
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

இம்மாவட்டம் மத்தியபிரதேசத்தின் மேற்கில் குஜராத் மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.

வரலாறு

தொகு

ஜாபூவா மாவட்டத்தின் அலிராஜ்பூர், ஜோபாத் மற்றும் பாப்ரா வருவாய் வட்டங்களைக் கொண்டு 17 மே 2008 அன்று புதிதாக அலிராஜ்பூர் மாவட்டம் துவக்கப்பட்டது.

மாவட்ட எல்லைகள்

தொகு

அலிராஜ்பூர் மாவட்டத்தின் வடக்கில் குஜராத் மாநிலத்தின் தாகோத் மாவட்டம், வடகிழக்கில் ஜாபூவா மாவட்டம், கிழக்கில் தார் மாவட்டம், தென்கிழக்கில் பர்வானி மாவட்டம், தெற்கிலும், தென் மேற்கிலும் மகாராஷ்டிர மாநிலத்தின் நந்துர்பார் மாவட்டம், மேற்கில் குஜராத் மாநிலத்தின் சோட்டா உதய்பூர் மாவட்டம் மற்றும் வடமேற்கில் தாகோத் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

தொகு

அலிராஜ்பூர் மாவட்டம் அலிராஜ்பூர், ஜோபாத் மற்றும் பாப்ரா என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டது.

அரசியல்

தொகு

இம்மாவட்டத்தில் அலிராஜ்பூர் மற்றும் ஜோபாத் என இரண்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.[1] இவ்விரண்டு சட்டமன்ற தொகுதிகளும் ரத்லாம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 728,999 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 92.17% மக்களும்; நகரப்புறங்களில் 7.83% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.45% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 362,542 ஆண்களும் மற்றும் 366,457 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1011 பெண்கள் வீதம் உள்ளனர். 3,182 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 229 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 36.10% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 42.02% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 30.29% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 147,961 ஆக உள்ளது. [2]

சமயம்

தொகு

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 705,060 (96.72 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 17,660 (2.42 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 4,600 (0.63 %) ஆகவும், , சீக்கிய சமய மக்கள் தொகை 65 (0.01 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 780 (0.11 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 36 (0.00 %) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 271 (0.04 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 527 (0.07 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்

தொகு

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "District/Assembly List". Chief Electoral Officer, Madhya Pradesh website. பார்க்கப்பட்ட நாள் 16 April 2010.
  2. Alirajpur District : Census 2011 data

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிராஜ்பூர்_மாவட்டம்&oldid=3369191" இலிருந்து மீள்விக்கப்பட்டது