தாலாகாட்
தாலாகாட் (Talagad) என்பது இந்திய மாநிலமான மகாராட்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் ரோகா-தாலா-இந்தாபூர் சாலையில் ரோகா நகருக்கு தெற்கே 18 கிமீ தொலைவில் அமைந்துள்ள கோட்டை ஆகும். இந்த கோட்டை 1000 அடி உயரத்தில் உள்ளது.[1] இந்த கோட்டை 20 மீட்டர் அகலத்தில் ஒரு குறுகிய துண்டு வடிவத்தில் உள்ளது. இந்த கோட்டை ஒரு குறுகிய முடுக்கில் அமைந்துள்ளது. இது கோட்டைகளால் பாதுகாக்கப்படுகிறது. இந்த கோட்டை எதிரிகளை கண்காணிக்கவும், மாவலிருந்து சுற்றியுள்ள துறைமுகங்களுக்கு செல்லும் வர்த்தக பாதையை கண்காணிக்க உதவியது. மேலும் இந்த கோட்டை ஜஞ்சிராவின் சித்தியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க பயன்படுத்தப்பட்டது. இந்த கோட்டையிலிருந்து கோசலேகாட் கோட்டையையும் காணலாம்.
தாலாகாட் கோட்டை | |
---|---|
ராய்கட் மாவட்டம், மகாராட்டிரம் | |
தாலாகாட் கோட்டை | |
ஆள்கூறுகள் | 18°17′32.6″N 73°08′09.3″E / 18.292389°N 73.135917°E |
வகை | Hill fort |
இடத் தகவல் | |
உரிமையாளர் | இந்திய அரசு |
மக்கள் அனுமதி |
அனுமதி உண்டு |
நிலைமை | அழிந்த நிலை |
இட வரலாறு | |
கட்டிடப் பொருள் |
கற்கள் |
உயரம் | 304 மீ (1000 அடி) |
வரலாறு
தொகுஇந்தக் கோட்டையின் தோற்றம் குறித்து அதிகம் அறியப்படவில்லை. 1585 ஆம் ஆண்டில் நிசாம் சாகி வம்சத்தைச் சேர்ந்த முதலாம் மாலிக் அகமது நிசாம் சா கோட்டையைக் கைப்பற்றி அதை தனது பகுதிகளுடன் இணைத்தார்.[2] 1657 ஆம் ஆண்டில், சத்ரபதி சிவாஜி, நிசாமின் கட்டுப்பாடிலிருந்த கொங்கண் பகுதிகள் முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். 1659இல் பிரதாப்காட்டில் சிவாஜியைக் கொல்ல அப்சல் கான் முயன்றபோது இந்த கோட்டை ஜஞ்சிராவின் சித்தியர்களின் படைகளால் சூழப்பட்டது. இருப்பினும் சிவாஜி அப்சால்கானைக் கொன்றார்.[3] இதையடுத்து கையெழுத்திடப்பட்ட புரந்தர் உடன்படிக்கையின்படி, சிவாஜியிடம் மற்ற கோட்டைகளை ஒப்படைக்கும்போது இந்தக் கோட்டையும் ஒப்படைக்கப்பட்டது. சிவாஜியின் மரணத்திற்குப் பிறகு இந்த கோட்டை சித்தியர்களால் கைப்பற்றப்பட்டது. 1735இல் முதலாம் பேஷ்வா பாஜிராவ் இந்த கோட்டையை கைப்பற்றினார். இறுதியாக, ஆங்கிலேய கர்னல் பிரோதர் 1818இல் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினார். சிவாஜி முடிசூட்டும்போது அணிந்திருந்த ஆடைகள் இந்தக் கோட்டையிலிருந்து கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
புகைப்படங்கள்
தொகு-
கோட்டைக்குச் செல்லும் வழி
-
அனுமன்சிலை
-
பாறையால் வெட்டப்பட்டுள்ள குளம்
-
அழிந்த நிலையிலுள்ள கோட்டை
மேற்கோள்கள்
தொகு- ↑ url=http://raigad.nic.in/DG/1964/places_Talagad.html
- ↑ url=http:// trekshitiz.com /trekshitiz /marathi/Talgad-Trek-T-Alpha.html
- ↑ Bal Krishna I 1932, ப. 22-23.