தா. சுந்தர ராவ் நாயுடு
தாமரப்பாக்கம் சுந்தர ராவ் நாயுடு (T. Sundara Rao Naidu)(1891-1949) என்பவர் இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 1946-47ல் சென்னை மாநகரத் தந்தையாகப் பணியாற்றினார். இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு மாநகரத்தின் முதல் மாநகரத் தந்தையாக இருந்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுசுந்தரா ராவ் நாயுடு 1889 ஜனவரியில் திவான் பகதூர் டி.வரதராஜுலு நாயுடு (1863-1930) பத்ம வேலம்மா நாயுடு குடும்பத்தில் பிறந்தார். சென்னையில் உள்ள சென்னை சட்டக் கல்லூரியில் சட்ட பட்டம் பெற்றார். இவர் அரசியலில் நுழைவதற்கு முன்பு சிறிது காலம் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார்.
தொழில்
தொகுசுந்தர ராவ் நாயுடு 1920களில் நீதிக் கட்சியில் சேர்ந்து சென்னை சட்ட மேலவை உறுப்பினராகப் பணியாற்றினார். 1930களில், சென்னை மாகாண முதல்வரின் செயலாளராக இருந்தார்.
சுந்தர ராவ் நாயுடு 1946இல் சென்னை மாநகரத் தந்தையாக நியமிக்கப்பட்டு 1947 வரை பணியாற்றினார். இவரது காலகட்டத்தில்தான் இந்தியா சுதந்திரம் பெற்றது.
இறப்பு
தொகுசுந்தர ராவ் நாயுடு 1949இல் எதிர்பாராத விதமாக இறந்தார். சென்னையின் ஆயிரம் விளக்குகளில் உள்ள டி.சுந்தர ராவ் நாயுடு தெரு என்பது இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது. சுந்தர் ராவ் பூங்கா என்பது சென்னை மாநகராட்சி பூங்கா ஆகும். இது எழும்பூர் மார்ஷல்ஸ் சாலையில் உள்ளது. இவரது சிலை எழும்பூரில் லாங்ஸ் கார்டன் சாலை மற்றும் பாந்தியன் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ளது.