யு. கிருஷ்ண ராவ்

யு. கிருஷ்ண ராவ் (U. Krishna Rao or U.Krishna Rau, இ. ஆகஸ்ட் 3, 1961) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஒரு தமிழக அரசியல்வாதி. தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் அவைத்தலைவராகவும் பணியாற்றியவர்.

கிருஷ்ண ராவ் ஒரு மருத்துவர். அவரது தந்தை ராமா ராவும் ஒரு மருத்துவர் மற்றும் அரசியல்வாதி. கிருஷ்ணா ராவ், தன் தந்தை நிறுவிய ஆண்டிசெப்டிக் என்ற மருத்துவ ஆய்விதழின் இணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1947-48 காலகட்டத்தில் சென்னை நகர மேயராக இருந்தார். 1950-52 இல் இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றினார். 1952-54 காலகட்டத்தில் ராஜாஜி அமைச்சரவையில் சென்னை மாநிலத்தின் தொழிற்சாலைகள், தொழிலாளர், தானுந்துப் போக்குவரத்து, ரயில், அஞ்சல், தந்தி மற்றும் குடிசார் வான்போக்குவரத்துத் துறைகளுக்கான அமைச்சராகப் பதவி வகித்தார். 1952-61 காலகட்டத்தில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இரு முறை சென்னை மாநில சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957-61 இல் சட்டமன்ற கீழவையின் அவைத் தலைவராகப் பணியாற்றினார்.[1][2][3][4][5][6][7][8][9]

மேற்கோள்கள்தொகு


முன்னர்
தா. சுந்தர ராவ் நாயுடு
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1947-1948
பின்னர்
எஸ். ராமசாமி
"https://ta.wikipedia.org/w/index.php?title=யு._கிருஷ்ண_ராவ்&oldid=3256156" இருந்து மீள்விக்கப்பட்டது