தினேஷ் கோபாலசாமி
தினேஷ் கோபாலசாமி (தினேஷ் கோபால்சாமி) என்பவர் ஒரு இந்திய தமிழ் நடிகர் ஆவார். இவர் திருமணம் எனும் நிக்காஹ் திரைப்படத்தில் அறிமுகமானார்.[1] 2010 இல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகான் என்ற தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார். இப்போது பூவே பூச்சுடவா மற்றும் நாச்சியார்புரம் தொலைக்காட்சி தொடரில் நடிக்கின்றார்.[2][3]
தினேஷ் கோபாலசாமி | |
---|---|
பிறப்பு | 29 ஆகத்து 1985 சென்னை, தமிழ்நாடு |
மற்ற பெயர்கள் | தினேஷ் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2010-தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | ரச்சித்தா மகாலட்சுமி(தற்போது வரை) |
உறவினர்கள் | கோபாலசாமி (தந்தை) அம்சவேனி (தாய்) |
வாழ்க்கை
தொகுதினேஷ் கோபால்சாமி ஸ்ரீவி லயன்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவர். இவர் 2014 திருமணம் எனும் நிக்காஹ் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் 2011-இல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொலைக்காட்சி தொடரில் இணைந்து நடித்த நடிகை ரச்சித்தா மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தினேஷ், 2016 இல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Mr & Mrs கில்லாடிஸ்யில் ரச்சித்தா மகாலட்சுமி உடன் பங்கேற்பாளராக கலந்து கொண்டார். இவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்.[4]
தொலைக்காட்சி தொடர்கள்
தொகுஆண்டு | தொடர் | கதாபாத்திரம் | அலைவரிசை |
---|---|---|---|
2010 | மகான் | ஸ்ரீ ராகவேந்திரா | விஜய் தொலைக்காட்சி |
2011 | பிரிவோம் சந்திப்போம் | கார்த்திக் | விஜய் தொலைக்காட்சி |
2013 | புதுக்கவிதை | தனுஷ் | விஜய் தொலைக்காட்சி |
2017 | பூவே பூச்சுடவா | சிவா | ஜீ தமிழ் தொலைக்காட்சி |
2019 | நாச்சியார்புரம் | கார்த்திக் | ஜீ தமிழ் தொலைக்காட்சி |
திரைப்படம்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் |
---|---|---|
2014 | திருமணம் எனும் நிக்காஹ் | அசரஃப் |
மேற்கோள்கள்
தொகு- ↑ https://timesofindia.indiatimes.com/topic/Dinesh-Gopalsamy%7Cwork=The Times of India
- ↑ "Real life couple Rachita-Dinesh pair up for Zee Tamil's 'Nachiyarpuram'". zeenews.india.com.
- ↑ "`` `எப்படி கலர் ஆனீங்க'னு எல்லாரும் கேட்கிறாங்க..! - ரச்சிதா". cinema.vikatan.com.
- ↑ "பூவே பூச்சூடவா - புத்தம் புதிய தொடர்". cinema.dinamalar.com.