திப்தெரோகார்ப்பசு கந்தோரென்சிசு
திப்தெரோகார்ப்பசு கந்தோரியன்சு (Dipterocarpus condorensis) என்பது பசுமையான அல்லது அரை பசுமையான குடும்பமான திப்தெரோகார்ப்பாசியேவில் உள்ள ஒரு வகை தாவரமாகும்.
திப்தெரோகார்ப்பசு கந்தோரென்சிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | ரோசிதுகள்
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | D. condorensis
|
இருசொற் பெயரீடு | |
Dipterocarpus condorensis Pierre | |
Subspecies | |
|
இது 50 மீ உயரம் வரை, உலர்ந்த முகடுகளில் கலப்பு திப்தெரோகார்ப் காடுகளில் வளரும் மரமாகும். இது சுமத்ரா, கடலோர மலேசியா தீவகம், சிங்கப்பூர், போர்னியோ, பிலிப்பைன்சு, வியட்நாமில் காணப்படுகிறது.[1] இது கெருயிங் என்ற வணிகப் பெயர்களில் விற்கப்படும் ஒரு நடுத்தரக் கடின மரமாகும். இது முன்பு கடற்கரையோர மலைகளில் மணல் மண்ணில் அதிகமாக வளர்ந்தது, ஆனால் நில மாற்றத்தால் இப்போது அழிந்து வருகிறது. [2] தி. கந்தோரியன்சிசு குறைந்தது ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியில் காணப்படுகிறது ( செபிலோக் கான் காப்பகம்).
துணை இனங்கள்
தொகுஇரண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட கிளையினங்கள் உள்ளன:[1]
- திப்தெரோகார்ப்பசு கந்தோரென்சிசு துணையினம். கந்தோரென்சிசு (இணையான பெயர் திப்தெரோகவுடேட்டசு Foxw. ) – வியட்நாம் (காந்தாவோ), பிலிப்பைன்சு ( உலுசான், மிந்தனாவ்) [3]
- திப்தெரோகார்ப்பசு கந்தோரென்சிசு துணயினம். பெனாங்கியனசு (Foxw.) PSAshton & Luu (இணைச் சொற்கள் திப்தெரோகார்ப்பசு கவுடேட்டசு துணையினம். பெனாங்கியனசு (Foxw.) PSAshton, திப்தெரோகார்ப்பசு பெனாங்கியனசு Foxw. ) – மலேசியா தீவகம், சுமத்ரா, போர்னியோ [4]
கவுடேட்டசு என்ற ஒத்த இனத்தின் பெயர் இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது ( caudatus = வால்) மற்றும் இலை நுனியின் குறுகிய வால்கூர்மையைக் குறிக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Dipterocarpus condorensis Pierre". Plants of the World Online. Royal Botanic Gardens, Kew.
- ↑ Ashton, P. S. (September 2004). "Dipterocarpus caudatus Foxw.". In Soepadmo, E.; Saw, L. G.; Chung, R. C. K. (eds.). Tree Flora of Sabah and Sarawak. (free online from the publisher, lesser resolution scan PDF versions). Vol. 5. Forest Research Institute Malaysia. pp. 94, 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 983-2181-59-3. Archived from the original (PDF) on 27 September 2013. பார்க்கப்பட்ட நாள் 21 November 2007.
- ↑ Dipterocarpus condorensis subsp.
- ↑ Dipterocarpus condorensis subsp.