திமீத்திரி முராத்தொவ்

திமீத்திரி அந்திரியேவிச் முராத்தொவ் (Dmitry Andreyevich Muratov; உருசியம்: Дми́трий Андре́евич Мура́тов, பிறப்பு: 30 அக்டோபர் 1961) என்பவர் உருசியப் பத்திரிகையாளர் ஆவார். இவர் நோவயா கசியெத்தா பத்திரிகையின் ஆசிரியராக 1995 முதல் 2017 வரை பணியாற்றினார்.[1] இவருக்கு 2021 இற்கான அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பீன்சின் ஊடகவியலாளர் மரியா இரேசாவுடன் இணைந்து வழங்கப்பட்டது.[2]

திமீத்திரி முராத்தொவ்
Dmitry Muratov
2018 இல் முராத்தொவ்
பிறப்புதிமீத்திரி அந்திரியேவிச் முராத்தொவ்
அக்டோபர் 30, 1961 (1961-10-30) (அகவை 62)
குய்பீசெவ், குய்பீசெவ் மாகாணம், உருசியா, சோவியத் ஒன்றியம்
குடியுரிமைஉருசியா
கல்விகுய்பீசெவ் மாநிலப் பல்கலைக்கழகம்
(மொழியறிவியல், 1983)
பணி
செயற்பாட்டுக்
காலம்
1987–இன்று
பணியகம்நோவயா கசியெத்தா
விருதுகள்அமைதிக்கான நோபல் பரிசு (2021)
வலைத்தளம்
novayagazeta.ru/authors/12

பத்திரிக்கையாளர்களைப் பாதுகாக்கும் குழுவால் நோவயா கசியெத்தா பத்திரிகை "உருசியாவில் இன்று தேசிய செல்வாக்குள்ள உண்மையான விமர்சன செய்தித்தாள்" என்று அழைக்கப்படுகிறது. அரசாங்க ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற முக்கிய தலைப்புகளில் முழுமையான அறிக்கைகளுக்காக இந்தப் பத்திரிகை அறியப்படுகிறது.[3]

2007 ஆம் ஆண்டில், பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு இவருக்கு சர்வதேச பத்திரிகை சுதந்திர விருதை வழங்கியது. தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், சிறைவாசங்களை எதிர்கொண்டு பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்பதில் தைரியம் காட்டும் பத்திரிகையாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.[4] 2010 இல் இவருக்கு பிரான்சின் உயர் விருதான செவாலியே விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Главным редактором "Новой газеты" стал Сергей Кожеуров". Novaya Gazeta. 17 November 2017. Archived from the original on 17 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 17 November 2017.
  2. https://archive.today/20211008090154/https://www.nobelprize.org/prizes/peace/2021/summary/
  3. "Dmitry Muratov, Editor of Novaya Gazeta, Russia".
  4. "CPJ To Honor Five Journalists". Committee to Protect Journalists. 24 September 2007. பார்க்கப்பட்ட நாள் 12 May 2011.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திமீத்திரி_முராத்தொவ்&oldid=3792112" இலிருந்து மீள்விக்கப்பட்டது