தியு 142 வானூர்தி அருங்காட்சியகம்

தியு 142 வானூர்தி அருங்காட்சியகம் (TU 142 Aircraft Museum) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட தூவுபோல்வ் தியு-142 வானூர்தி ஆகும். விசாகப்பட்டிணம் நகரச் சுற்றுலா மேம்பாட்டின் ஒரு பகுதியாக நிறுவப்பட்டது. இது திசம்பர் 2017-இல் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் முறையாகத் திறந்து வைக்கப்பட்டது.[1]

தியு 142 வானூர்தி அருங்காட்சியகம்
Map
நிறுவப்பட்டது8 திசம்பர் 2017 (2017-12-08)
அமைவிடம்பாண்டுரங்கபுரம், விசாகப்பட்டினம்
ஆள்கூற்று17°43′05″N 83°19′47″E / 17.718002°N 83.329812°E / 17.718002; 83.329812
வகைவானூர்தி அருங்காட்சியகம், போக்குவரத்து அருங்காட்சியகம்
உரிமையாளர்விசாகப்பட்டினம் பெருநகர மேம்பாட்டுக் கழக முகமை

சேவை தொகு

தியு 142 வானூர்தி இந்தியக் கடற்படையில் 29 ஆண்டுகள் சேவையாற்றி உள்ளது. இந்த வானுர்தி 29 மார்ச் 2017 அன்று அரக்கோணத்தில் உள்ள ஐ. என். எஸ். ராஜாளியில் படைப்பிரிவிலிருந்து ஓய்வுபெறும் போது 30,000 மணி நேரம் விபத்தில்லாமல் சேவையாற்றியது குறிப்பிடத்தக்கது.[2]

வானூர்தி அருங்காட்சியகம் தொகு

இந்த விமானத்தை அருங்காட்சியகத்தில் பாதுகாக்க ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்தது. திட்ட வளர்ச்சிக்கான செலவு சுமார் ₹14 கோடி செலவிட்டது. இதற்கு ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நிதியளித்தது.

மேற்கோள்கள் தொகு

  1. "TU 142 Aircraft Museum inaugurated".
  2. "TU 142M Aircraft Museum at Visakhapatnam". Indian Navy. பார்க்கப்பட்ட நாள் 2018-10-30.