திரவ ஆக்சிசன்
திரவ ஆக்சிசன் அல்லது திரவ ஒட்சிசன் என்பது தனிம ஆக்சிசனின் ஒரு இயல்வடிவமாகும். தொழிற்துறைகளில் இது LOX, LOx அல்லது Lox எனக் குறிக்கப்பெறுகிறது. கடுங்குளிரிய பயன்பாடுடைய இது விண்ணூர்தி ஏவூர்திகளில் எரிபொருட்களுக்கான (எ.டு.: திரவ ஐதரசன், மண்ணெண்ணெய், மெத்தேன் ) ஆக்சிசனேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. திரவ ஆக்சிஜன் இயல்காந்தத் தன்மை உடையதாகும்; குதிரைலாய காந்தத்தின் இரு முனைகளுக்கிடையே இதனை நிலைநிறுத்த முடியும்.[1] கடுங்குளிரியப் பண்புடைய திரவ ஆக்சிஜன் தொடும் பொருட்களை எளிதில் உடையக்கூடிய பொருட்களாக மாற்றும் தன்மை கொண்டது.
இயல் பண்புகள்
தொகு- அடர்த்தி = 1.141 g/cm3 (1.141 kg/L or 1141 kg/m3)
- உறைநிலை = 54.36 K (−218.79 °C; −361.82 °F)
- கொதிநிலை = 90.19 K (−182.96 °C; −297.33 °F) at 101.325 kPa (760 mmHg)
- விரிவு விகிதம் = 1:861 under 1 standard atmosphere (100 kPa) and 20 °C (68 °F),[2][3]
மேலும் பார்க்க
தொகுஉசாத்துணைகள்
தொகு- ↑ Moore, John W.; Stanitski, Conrad L.; Jurs, Peter C. (21 January 2009). Principles of Chemistry: The Molecular Science. Cengage Learning. pp. 297–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-495-39079-4. பார்க்கப்பட்ட நாள் 3 April 2011.
- ↑ Cryogenic Safety. chemistry.ohio-state.edu.
- ↑ Characteristics பரணிடப்பட்டது 2012-02-18 at the வந்தவழி இயந்திரம். Lindecanada.com. Retrieved on 2012-07-22.