டிராகன் மரம்

தாவர இனம்
(திராசினா திராக்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டிராகன் மரம் (Dracaena draco) என்ற மரமானது கேனரி தீவுகளின் டிராகன் மரம் அல்லது டிராகோ என்றழைக்கப்படும் ஒரு மரமாகும்.[3] இத்தாரவம் ஒரு மித வெப்ப மண்டலத் தாவரப் பேரினத்தைச் சேர்ந்த ஒரு மரமாகும். இத்தாவரம், கேனரி தீவுகள், கேப் வர்டி, மதீரா, மேற்கு மொராக்கோ ஆகிய பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்டதாகும்.[4]

டிராகன் மரம்
மிகப்பழமையான டிராகன் மரம் - ஐகாட் டி லாஸ் வினோஸ், டெனெரைஃப் (கேனரி தீவுகள், எசுப்பானியா)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. draco
இருசொற் பெயரீடு
Dracaena draco
(L.) L.[2]
வேறு பெயர்கள்
  • Palma draco (L.) Mill.
  • Asparagus draco L.
  • Dracaena resinifera Salisb.
  • Draco arbor Garsault
  • Draco draco (L.) Linding.
  • Draco dragonalis Crantz
  • Drakaina draco (L.) Raf.
  • Stoerkia draco (L.) Crantz
  • Yucca draco (L.) Carrière

மரத்தின் அமைவு

தொகு
 
ட்ராகன் மரம்

இந்த மரமானது 15 மீ (49 அடி) அல்லது அதற்கு மேற்பட்ட உயரம் மற்றும் 5 மீ (16 அடி) அல்லது அதற்கு மேற்பட்ட சுற்றளவு கொண்ட ஒரு பசுமையான நீண்ட காலம் வாழும் மரமாகும்.[5] மெதுவாக வளரக்கூடிய மரம். இது தண்ணீர் விட்டான் கொடி குடும்பத்தைச் சார்ந்த ஒரு விதையிலைத் தாவர வகையைச் சார்ந்தது.[6] இதனுடைய இலைகள் 1.5 முதல் இம்மரம் 30 வருடம் ஆன பிறகு தான் கிளை விடும். அதன் பிறகே பூக்கும். பூக்கள் பச்சை நிறத்தில் இருக்கும். இதனுடைய கனி சிவந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். இளந்தாவரமாக இருக்கும்போது தனித்த ஒற்றைத் தண்டு இருக்கும். சுமார் 10-15 வயதில் தண்டு வளர்வதை நிறுத்தி, வெள்ளை, லில்லி போன்ற வாசனை திரவிய மலர்களுடன் ஒரு பூக்கூர்முனையை உருவாக்குகிறது, அதைத் தொடர்ந்து பவளப் பழங்கள் தோன்றுகின்றன. விரைவில் முனைய மொட்டுகளின் கிரீடம் தோன்றி தாவரத்தின் புதிய கிளைகள் கிளைவிடத் தொடங்குகின்றன.

காணப்படும் பகுதிகள்

தொகு

இம்மரம் கேனரித் தீவுகளில் உள்ளன. மிகவும் வயதான மரம் டேனிரிபி என்கிற இடத்தில் உள்ளது. இதுவே உலகின் மிக வயதான மரமாகும். இதற்கு 6000 ஆண்டுகள் வயது ஆகிறது என கணக்கிடப்பட்டுள்ளது. இம்மரத்தின் அடிப்பகுதியில் கிடைக்கும் ரெசின் பெண் டிராகனின் ரத்தம் போல் உள்ளது. இதிலிருந்து பலப் பொருட்கள் தயாரிக்கின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Silva, L.; Caujapé-Castells, J.; Lobo, C.; Casimiro, P.; Moura, M.; Elias, R.B.; Fernandes, F.; Fontinha, S.S. et al. (2021). "Dracaena draco". IUCN Red List of Threatened Species 2021: e.T30394A119836316. doi:10.2305/IUCN.UK.2021-2.RLTS.T30394A119836316.en. https://www.iucnredlist.org/species/30394/119836316. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. "Dracaena draco", World Checklist of Selected Plant Families, அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ, பார்க்கப்பட்ட நாள் 2013-11-12
  3. "Forest 15 - Dragon Tree", National Arboretum Canberra, Australian Government, பார்க்கப்பட்ட நாள் 2018-09-22
  4. Almeida Pérez, R.S. & Beech, E. (2017). "Dracaena draco". IUCN Red List of Threatened Species 2017: e.T30394A103368016. https://www.iucnredlist.org/species/30394/103368016. 
  5. "Dracaena draco (L.) L." University of Madeira. பார்க்கப்பட்ட நாள் 13 January 2021.
  6. Chase, M.W.; Reveal, J.L.; Fay, M.F. (2009). "A subfamilial classification for the expanded asparagalean families Amaryllidaceae, Asparagaceae, and Xanthorrhoeaceae". Botanical Journal of the Linnean Society 161 (2): 132–136. doi:10.1111/j.1095-8339.2009.00999.x. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிராகன்_மரம்&oldid=4055853" இலிருந்து மீள்விக்கப்பட்டது