திரான்சுனிஸ்திரியா

திரான்சுனிஸ்திரியா (Transnistria) என்பது கிழக்கு ஐரோப்பாவில் மல்தோவாவில் இருந்து தன்னிச்சையாகப் பிரிந்த ஒரு குடியரசாகும். இது உக்ரேனுக்கும் மல்தோவாவின் கிழக்கு எல்லைக்கும் இடையில் அமைந்துள்ளது. 1990 ஆம் ஆண்டில் மல்தோவா சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்தவுடன் திரான்சுனிஸ்திரியாவும் மல்தோவாவில் இருந்து இருந்து பிரிவதாக அறிவித்தது. 1992 இல் இடம்பெற்ற உள்நாட்டுப் போரை அடுத்து இப்பகுதி பிரித்னெஸ்த்ரோவிய மல்தோவியக் குடியரசு (Pridnestrovian Moldavian Republic) அல்லது "பிரித்னெஸ்த்ரோவியே" ("Pridnestrovie") என்ற பெயரில் அங்கீகரிக்கப்படாத ஒரு பகுதியாக இருந்து வருகிறது. தினேஸ்தர் ஆற்றின் கிழக்குப் பகுதி, பெண்டர் நகரம், மற்றும் அந்நகரசி சூழவுள்ள மேற்குக் கரைப் பகுதிகளை இது உரிமை கோருகிறது. மல்தோவா குடியரசு இதன் விடுதலையை அங்கீகரிக்காத போதிலும், இது இதனை தனது ஆட்சிக்குட்பட்ட ஒரு சுயாட்சி அமைப்பாக அங்கீகரித்துள்ளது[2][3][4]. இதன் தலைநகர் திரசுப்போல் ஆகும்.

பிரித்னெசுத்ரோவிய மால்தாவியக் குடியரசு
Pridnestrovian Moldavian Republic
கொடி of திரான்சுனிஸ்திரியா Transnistria
கொடி
சின்னம் of திரான்சுனிஸ்திரியா Transnistria
சின்னம்
திரான்சுனிஸ்திரியா Transnistriaஅமைவிடம்
தலைநகரம்திரசுப்போல்
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)உருசிய1,
மல்தோவியம்
உக்ரேனியம்
இனக் குழுகள்
(2005)
32.1% மல்தோவியர்
30.4% உருசியர்
28.8% உக்ரேனியர்
அரசாங்கம்அரசுத்தலைவர் முறைக் குடியரசு
• குடியரசுத் தலைவர்
ஈகர் சிமீர்னொவ்
மால்தோவாவின் தன்னாட்சிப் பிராந்தியம், தன்னிச்சையான விடுதலை அறிவிப்பு
• விடுதலை அறிவிப்பு
2 செப்டம்பர் 1990
• திரான்சுனிஸ்திரியா போர்
2 மார்ச் - 21 சூலை 1992
• அங்கீகாரம்
ஐநா உறுப்புரிமை அற்ற 3 நாடுகள்3
பரப்பு
• மொத்தம்
4,163 km2 (1,607 sq mi)
• நீர் (%)
2.35
மக்கள் தொகை
• 2010 மதிப்பிடு
518,700[1]
• 2004 கணக்கெடுப்பு
555,347
• அடர்த்தி
124.6/km2 (322.7/sq mi)
நாணயம்திரான்சுனிஸ்திரிய ரூபிள் (PRB)
நேர வலயம்ஒ.அ.நே+2 (EET)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (EEST)
அழைப்புக்குறி+373 spec. +373 5 and +373 2
இணையக் குறிnone5
  1. உருசிய மொழி அதிகாரபூர்வ மொழி.
  2. அப்காசியா, தெற்கு ஒசேத்தியா
  3. .ru, .md போன்றவையும் பயன்பாட்டில் உள்ளன.
திரான்சுனிஸ்திரியாவின் வரைபடம்

பனிப்போர் முடிவுற்ற காலப்பகுதியில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட போது மல்தோவா அரசுக்கும் திரான்சுனிஸ்திரியர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மார்ச் 1992 இல் ஆரம்பமாகி, சூலை 1992 இல் போர் நிறுத்த உடன்பாட்டுடன் முடிவுக்கு வந்தது. இவ்வுடன்பாட்டின் படி, உருசியா, மல்தோவா, திரான்சுனிஸ்திரியா ஆகிய முப்படைகளின் கூட்டுப் படையினரிடம் இப்பிராந்தியத்தின் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும், இதுவரையில் எந்த ஒரு நாடும் இப்பிராந்தியத்தை தனிநாடாக அங்கீகரிக்கவில்லை[5]. ஆனாலும், இது இப்போது ஒரு தனிநாடு போலவே இயங்குகிறது. சனாதிபதி ஆட்சியைக் கொண்ட தனியான அரசாங்கம், இராணுவம், காவல்துரை, அஞ்சல் சேவை, தனி நாணயம் ஆகிய கட்டமைப்புகள் இயங்குகின்றன. தனியான அரசியலமைப்பு, தேசியக் கொடி, தேசியப் பண் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், மல்தோவாவுக்கும், உக்ரேனுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டின் படி, உக்ரேனிய எல்லையூடாக ஏற்றுமதி செய்யும் அனைத்து திரான்சுனிஸ்திரிய நிறுவனக்களும் மல்தோவிய சுங்கத்திடம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்[6].

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=திரான்சுனிஸ்திரியா&oldid=3582512" இருந்து மீள்விக்கப்பட்டது