திரிகூடேசுவரர் கோவில், கதக்
திரிகூடேசுவரர் கோயில் ( Trikuteshwara temple ) கற்கலால் செதுக்கப்பட்ட இந்து கோயிலான [1] [2] இது இந்தியாவின் கர்நாடகாவில் ஹூப்ளி-தார்வாட்டின் தென்கிழக்கே 50 கி.மீ தொலைவிலுள்ள கதக் நகரில் அமைந்துள்ளது. இக்கோயில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே கல்லில் மூன்று இலிங்கங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கோவிலில் சரசுவதிக்கென அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தனி சன்னதியும் உள்ளது. அதில் நேர்த்தியாக செதுக்கப்பட்ட கல்தூண்கள் உள்ளன.
கட்டிடக்கலை
தொகுஇந்த கோயில் கட்டிடக்கலை அமர சிற்பி ஜெகனாச்சாரி என்பவரால் திட்டமிடப்பட்டது. சாளுக்கியர்கள் தக்காணத்தில் ஆரம்ப கட்டடக்கலை சாதனைகளின் வெளிப்பாட்டாளர்கள் ஆவர். அய்கொளெ, பாதமி , பட்டடக்கல் ஆகியவை அவர்களின் கலை மையங்களாக இருந்தன. அவர்களுக்குப் பின் இராஷ்டிரகூடர்களும், மேலைச் சாளுக்கியர்களும் இப்பணியைத் தொடர்ந்தனர்.
வரலாறு
தொகுஇந்த கோயில் பொ.ஊ. 1050 முதல் 1200 வரை இந்த பிராந்தியத்தை ஆண்ட மேலைச் சாளுக்கியர்களைச் சேர்ந்தது. அந்தக் காலத்தில் சுமார் 50 கோயில்கள் கட்டப்பட்டன. இங்குள்ள சரசுவதி கோயில் அழிந்து வருகிற. எனவே இங்கு பூசை நடைபெறுவதில்லை. ஆனால் கட்டிடக்கலை உள்ளது.
நகரத்திலுள்ள பல சாளுக்கிய நினைவுச்சின்னங்கள் (11 -12 ஆம் நூற்றாண்டுகள்) அதன் வரலாற்று கடந்த காலத்தைக் குறிக்கின்றன. நகரின் நடுவில் சோமேசுவரர் கோயிலும், வீர நாராயணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயிலும் அமைந்துள்ளது. இக் கோயில்கள் கைவிடப்பட்டு இப்போது பாழடைந்த நிலையில் இருந்தாலும், அதன் சிக்கலான சிற்பங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
புகைப்படங்கள்
தொகு-
கதக் சரசுவதி கோவிலில் அலங்கரிக்கப்பட்ட தூண்கள், திரிகூடேசுவரர் கோயில் வளாகம்
-
சரசுவதி கோவில்
-
சரசுவதி கோவில், திரிகூடேசுவரர் கோயில் வளாகம்
-
திரிகூடேசுவரர் கோயில் வளாகம்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Trikuteshwara Temple at Gadag near Dharwar(Karnataka)". பார்க்கப்பட்ட நாள் 2008-08-18.
- ↑ South India by David Abram, Rough Guides (Firm), Nick Edwards, Mike Ford, Devdan Sen, Beth Wooldridge. 2003.